A UBAIDULLAH

Saturday, October 9, 2021

💗💗💗படித்தில் பிடித்து💗💗💗
October 09, 20210 Comments

 



ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.ஒவ்வொரு நாளும் கடையை மூடப்போகும் சமயம், ஒரு தலைக்கனம் பிடித்தவன் அக்கடைக்கு வந்து, கடைக்காரரிடம், "முதலாளி, மூளையிருக்கா...?" என்று கேட்பான்.


அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், “என்ன முதலாளி, இன்றும் உங்களிடம் மூளை இல்லையா?” என்று கிண்டலுடன் கேட்டு

விட்டுச் செல்வான்.


இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது தானும் மட்டம் தட்டிப் பேச வேண்டும் என்று அந்தக் கடைக்காரரும் நினைத்துக் கொண்டிருந்தார்.

.

நாட்கள் நகர்ந்தன.

ஒரு நாள் அக்கடைக்காரருடன் நன்கு படித்த நண்பர் ஒருவர் அக்கடைக்கு வந்தார்.


அவரிடம் அந்தக் கடைக்காரர் தினமும் ஒருவன் தன்னைக் கேலி பேசி வருவதைச் சொன்னார்.


இதைக் கேட்ட கடைக்காரரின் நண்பர், "அட இவ்வளவு தானே, இதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.


கடையை மூடப்போகும் சமயம், அந்தத் தலைக்கனம் பிடித்தவன் வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா...?" என்று வழக்கம் போலக் கேட்டான்.


அதற்குக் கடைக்காரரின் நண்பர் அவனைப் பார்த்து,"இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உங்களுக்குத்தான் இல்லை" என்றான்.


தலைக்கனம் பிடித்தவனுக்கு உச்சந்தலையில் யாரோ குட்டியது போலிருந்தது.


நண்பனின் சாதுர்யமான பதிலைக் கேட்ட கடைக்காரர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது


நாம் ஒருவரை மட்டம் தட்டி பேசினால் நம்மை மட்டம் தட்ட வேறொருவர் இருப்பார்.எனவே யாரையும் கேலியாக பேசுவது கூடாது...


படித்ததில் பிடித்தது.

Reading Time:
வரலாற்றில் இன்று – October 08
October 09, 20210 Comments

 




அக்டோபர் 8 (October 8) கிரிகோரியன் ஆண்டின் 281 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 282 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 84 நாட்கள் உள்ளன.


*இன்றைய தின நிகழ்வுகள்* 


👉1573 – எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் வெற்றியைப் பெற்றது. 


👉1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 


👉1813 – பவேரியாவுக்கும் ஆசுதிரியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 


👉1821 – பெருவில் ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையிலான அரசு கடற்படையை அமைத்தது. 


👉1860 – லாஸ் ஏஞ்சலஸ், சான் பிரான்சிஸ்கோ நகர்களுக்கிடையே மின்சாரத் தந்தி அறிமுகமானது. 


👉1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கென்டக்கியில் கூட்டமைப்புப் படைகளின் முற்றுகையைத் தடுத்து நிறுத்தினர். 


👉1871 – சிகாகோ பெருந்தீ: சிக்காகோவில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 


👉1895 – கொரியாவின் கடைசி அரசி ஜோசியனின் மின் ஜப்பானியர்களால் கொல்லப்பட்டாள். 


👉1912 – முதலாவது பால்கன் போர் ஆரம்பமானது: மொண்டெனேகுரோ உதுமானியப் பேரரசுடன் போர் தொடுத்தது. 


👉1918 – இரண்டாம் உலகப் போர் – பிரான்சில் அமெரிக்கக் கோப்ரல் “அல்வின் யோர்க்” தனியாளாக 25 ஜெர்மனிய இராணுவத்தினரைக் கொன்று, 132 பேரைக் கைப்பற்றினார். 


👉1932 – இந்திய வான்படை நிறுவப்பட்டது. 


👉1939 – இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனி மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது. 


👉1944 – குரூசிஃபிக்ஸ் ஹில் சண்டை ஆஃகன் இற்கருகில் இடம்பெற்றது. 


👉1952 – லண்டனில் தொடருந்து விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டனர். 


👉1962 – அல்சீரியா ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது. 


👉1967 – கெரில்லா இயக்கத் தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைப்பற்றப்பட்டனர். 


👉1973 – சூயஸ் கால்வாயின் இஸ்ரேலியப் பக்கத்தில் இடம்பெற்ற போரில் 140 இஸ்ரேலியத் தாங்கிகள் எகிப்திய படைகளினால் அழிக்கப்பட்டது. 


👉1982 – சொலிடாரிட்டி தொழிற்சங்கம் போலந்தில் தடை செய்யப்பட்டது. 


👉  1987 – விடுதலைப் புலிகள் இந்திய அமைதி காக்கும் படையின் சரக்கு வாகனத்தைத் தாக்கியதில் 8 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 


👉1990 – ஜெருசலேமில் இஸ்ரேலியக் காவல்துறையினர் கோவில் மலையில் பாறைக் குவிமாடம் மசூதியைத் தாக்கியதில் 17 பாலஸ்தீனர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர். 


👉2001 – இத்தாலியின் மிலான் நகரில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 118 பேர் கொல்லப்பட்டனர். 


👉2005 – 03:50 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்க்கு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மொத்தம் 74,500 பேர் கொல்லப்பட்டு 106,000 பேர் காயமடைந்தனர். 


👉2006 – காலி கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்கி 3 கடற்படைக் கலங்களை மூழ்கடித்தனர். 


*இன்றைய தின பிறப்புக்கள்* 


👉1922 – கோ. நா. இராமச்சந்திரன், இந்திய அறிவியலாளர் (இ. 2001) 


👉1924 – திருநல்லூர் கருணாகரன், இந்தியக் கவிஞர் (இ. 2006) 


👉1932 – கென்னத் அப்பெல், அமெரிக்கக் கணிதவியலாளர். 


👉1935 – மில்கா சிங், இந்திய தடகள விளையாட்டு வீரர். 


👉1950 – சு. கலிவரதன், தமிழக எழுத்தாளர். 


👉1970 – மேட் டாமன், அமெரிக்க நடிகர். 


👉1971 – பா. ராகவன், தமிழக எழுத்தாளர். 


👉1983 – அபிசேக் நாயர், இந்தியத் துடுப்பாட்ட வீரர் 


*இன்றைய தின இறப்புகள்* 


👉1936 – பிரேம்சந்த், இந்திய எழுத்தாளர் (பி. 1880) 


👉1959 – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர், பாடலாசிரியர் (பி. 1930) 


👉1967 – கிளமெண்ட் அட்லீ, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1883) 


👉1979 – ஜெயபிரகாஷ் நாராயண், இந்திய அரசியல்வாதி (பி. 1902) 


👉2003 – வீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர் (பி. 1931) 


👉2011 – பாரத லக்சுமன் பிரேமச்சந்திர, இலங்கை அரசியல்வாதி (பி. 1956) 


இன்றைய தின சிறப்புகள் 


👉குரொவேசியா – விடுதலை நாள்

ஐக்கிய அமெரிக்கா – கொலம்பஸ் நாள். 


👉இந்தியா – விமானப் படை நாள். 


Reading Time:
நுண்ணுயிர் பற்றிய தகவல்கள்
October 09, 20210 Comments

 

 _🌹நுண்ணுயிரி (Microorganism) அல்லது நுண்ணுயிர் (இலங்கை வழக்கு: நுண்ணங்கி) என அழைக்கப்படுபவை வெற்றுக்கண்ணுக்குப் தெளிவாகப் புலப்படாத, நுண்ணோக்கியின் உதவியால் மட்டுமே பார்க்கக் கூடிய, தனிக் கலம் அல்லது கூட்டுக் கலங்களால் ஆன உயிரினங்கள் ஆகும்._ 


 _🌹பொதுவாக நுண்ணுயிரிகள் தனிக்கலங்களாக இருப்பினும், எல்லா தனிக்கல உயிரினங்களும் நுண்ணுயிரிகள் அல்ல. சில தனிக்கல உயிரினங்களை நுண்ணோக்கியால் பார்த்தாலும், அவற்றை வெறும் கண்ணினாலும் பார்த்து அறியக் கூடியதாக இருக்கும். கண்ணால் காணக்கூடிய உயிர்களிலே அறியப்பட்டவையே மிகவும் சில ஆனால் கண்ணுக்கு புலப்படாத உயிர்கள் பல கோடியை தாண்டும்._ 


 _🌹இவ்வாறு கண்ணுக்கு புலப்படாத உயிர்கள், கண்ணின் பார்வை நிலைக்கு அதாவது 100μm க்கு குறைவாக உள்ளது. இதைப்பற்றிய படிப்பு நுண்ணுயிரியல் என அழைக்கப்படுகிறது. மைக்ரோமீட்டர் என்பது ஒரு அளவையாகும். இவ்வாறு மைக்ரோமீட்டர் மற்றும் அதற்கு குறைவான அளவிலுள்ள உயிர்கள் நுண்ணுயிர்களாகும்._ 


_🌹இவ்வுயிர்களில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், நுண்பாசிகள் , ஒட்டுண்ணி ஆகியன அடங்கும். எடுத்துக்காட்டுக்கு, எஸ்சீரிசியா கோலை (Escherichia coli), பாக்டீரியா வகையைச் சார்ந்த ஒரு நுண்ணுயிர் ஆகும்._ 


 _🌹வைரசுக்களும் நுண்ணுயிர்களே ஆயினும், அவை ஏதாவது ஒரு உயிரினத்தின் உள்ளே அல்லது உயிருள்ள கலங்களில் உள்ளே இருக்கும்போது மட்டுமே தம்மைத் தாமே இரட்டித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டிருப்பதனால், அவற்றை நுண்ணுயிர்களில் சேர்க்க முடியாது என்ற கருத்தும் நிலவுகின்றது. வைரசுக்களை சில நுண்ணியலாளர்கள் நுண்ணுயிரிகள் பிரிவினுள் சேர்த்தாலும், வேறு சிலர் அவை உயிரினங்களே அல்ல என்கின்றனர்._ 


 _🌹ஒரு சிலர் வைரஸ்களுக்கு "வாழும் வேதிப்பொருள்" , அதாவது "The Living Chemical" என்று அழைக்கிறார்கள். ஏனெனில் இதன் அமைப்பில் உள்ளது.ஓரிரு வேதிப்பொருள்களின் சேர்க்கையே நுண்ணுயிர்கள் இவ்வுலகம் முழுதும் காணப்படுகின்றன என்பதைவிட அவை இல்லாத இடங்கள் உலகில் அரிது எனலாம்._ 


 _🌹நீர், மண், என்பவற்றில் இருப்பதுடன், வெந்நீரூற்று, பெருங்கடலின் அடியில் நிலத்தில், பூமியின் மேலோட்டில் பாறைகளுக்கிடையில் ஆழமான பகுதிகளில் என எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது._

💠🔷️💠🔷️💠🔷️💠🔷️💠🔷️💠🔷️💠🔷️💠🔷️💠

Reading Time:

Friday, October 8, 2021

முழுமையாக திறக்கப்படுகின்றது பாடசாலைகள்...!
October 08, 20210 Comments


 


✅பாராளுமன்றில் வெளிவந்த புதிய 

செய்தி..!



 🟥In Sri Lanka - On, October 08, 2021


எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நாடளாவிய ரீதியில் பாடசாலையில் அனைத்து வகுப்பகளையும் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்க இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.


இன்றைய பாராளுமன்ற அமர்விலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,


21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பாடசாலைகள் பல கட்டங்களில் திறக்கப்படும்.

 

தொடர்ந்து நவம்பரில் அனைத்து தரங்களும் ஆரம்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.

 

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதை குறிப்பிட்டார்.

Reading Time:
siru kadhay
October 08, 20210 Comments


 இஞ்சிப் பிளேன்ட்டி





"மகள்.......மகள்......

எனக்கு இஞ்சி போட்டு ஒரு பிளேன்ட்டி ஊத்தித் தாறீங்களா?"என தனது மருமகள் பஸ்னாவிடம் கேட்டார் பாரூக் நானா.தொலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த பஸ்னா கோபத்துடன் எழும்பினாள்.

"இந்த கிழட்டுக்கு வேற வேல இல்ல.ஒரே இஞ்சிப் பிளேன்ட்டி.மனிசன்ட உசிர வாங்குற.எங்காவது போய்த் தொலையுதுமில்ல" என வாய்க்குள் முணுமுணுத்தவாறு பஸ்னா குசினிக்குள் சென்றாள். 


பாரூக் நானாவுக்கு ஒரே மகன் அர்ஷாத்.பாரூக் நானாவின் மனைவி மௌத்தாகும் போது அர்ஷாதுக்கு வெறும் பதினைந்து வயது தான்.அன்றிலிருந்து அர்ஷாதுக்கு எல்லாம் பாரூக் நானா தான்.அவனை கஷ்டப்பட்டு படிக்க வைத்து, திருமணமும் செய்து கொடுத்து,அவன் இப்பொழுது கட்டார் நாட்டில் ஒரு கம்பனியில் எகௌண்டனாக வேலை பார்க்கிறான்.அவனுக்கு ஒரு மகன். நான்கு வயது ஹஷ்மத்.வெளிநாட்டுக்குச் சென்ற புதிதில் அர்ஷாத் வாப்பாவுக்கு செலவுக்கு பணம் அனுப்புவான்.வீடியோ கோல் பண்ணி பேசுவான்.

இப்போதெல்லாம் அவருடன் அவன் பேசுவதேயில்லை. கோல் வரும் போதெல்லாம் பாரூக் நானா காதைத் தீட்டிக் கொண்டிருப்பார்.எங்கே மகன் தன்னோடு பேச வேண்டும் என்று சொல்ல மாட்டானா? என்று ஏங்குவார்.ஆனால்,

பஸ்னா அவருடன் மகனைப் பேச விட மாட்டாள்.அவள் பேசி விட்டு வைத்து விடுவாள்.

இப்போதெல்லாம் அர்ஷாத் அனுப்பும் பணத்தைக் கூட பாரூக் நானாவுக்கு பஸ்னா கொடுப்பதில்லை.

               

பாரூக் நானா எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டேயிருப்பார்.

வீட்டுப் பின்புறத்தில் வெண்டி ,தக்காளி, மிளகாய் என்று காய்த்துக் குழுங்கும்.முன் புறத்தில் ரோஜா, மல்லிகை என்று பூத்துக் குழுங்கும்.எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டேயிருப்பார்.

பேரனை நேசரிக்கு அழைத்துச் செல்வது கூட்டிக் கொண்டு வருவது,கடைக்குச் செல்வது, பில் கட்டுவது என எல்லா வேலைகளையும் ஓடி ஓடிச் செய்வார். 

பிளேன்ட்டியை குடித்து முடித்த பாரூக் நானா "மகள் பஸ்னா நான் ஆலமரத்தடிக்குப் போய்ட்டு வாரன்"என்று கூறியவாறு வெளியேறினார். "இந்த கிழவன்களுக்கு வேற வேல இல்ல "பஸ்னா முணுமுணுத்துக் கொண்டாள்.சூரியன் கிழக்கில் உதிக்கத் தவறினாலும் ஆலமரத்தடிக்கு போவது மட்டும் நடக்காமல் இருக்காது.பாரூக் நானாவுடன் ஒன்றாகப் படித்தவர்கள் ஐந்து பேர்.ஒவ்வொரு நாளும் நான்கு மணிக்கு ஆலமரத்தடியில் கூடி விடுவார்கள்.ஐந்து மணி வரை உலக நடப்புகளை அலசி ஆராய்வார்கள்.

ஒருவருக்கு ஒருவர் ஆறுதலும் தேறுதலும் கூறிக் கொள்வார்கள். 

              

அன்று மாலை பாரூக் நானா தனது பேரனுடன் சேர்ந்து தோட்டத்துக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்."டடப்பா இங்க பாருங்க சிவப்பு ரோஜா" ஹஷ்மத்துக்கு பூவைக் கண்டு ஒரே குஷி.எந்நேரமும் டடப்பா என்றவாறு அவரையே சுற்றிச் சுற்றி வருவான்.பாரூக் நானா நல்ல வரலாற்றுக் கதைகளை சுவைபடக் கூறுவார். நல்ல பழக்கங்கள் சொல்லிக் கொடுப்பார். அவனுடன் விளையாடுவார்.

ஹஷ்மத்துக்கு டடப்பா என்றால் உயிர்.

           

" டடப்பா உங்க பிரண்ட் வந்திருக்கார்" ஹஷ்மத்தின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார் பாரூக் நானா. அவரது நண்பர் அப்துல்லா வந்திருந்தார்."ஆ.... அப்துல்லா வா... வா...." உள்ளே அழைத்து அமர வைத்தார். "என்ன இன்டைக்கு ஆலமரத்தடிக்கும் வரல்ல என்ன பிரச்சினை" ஆவலாகக் கேட்டார் பாரூக்." என்ன செய்ய பாரூக் உன் மருமக மாதிரியா என் மருமக .உனக்குத் தெரியும் தானே! தினம் தினம் ஏதாவது பிரச்சினை. நான் என்ன செய்தாலும் அவளுக்குக் குத்தம் தான்.இன்டைக்கு கைல காசிருக்கல்ல.எனக்கு பேப்பர் பார்க்காம இருக்க முடியாதே ! அது தான் கடைக்கு போன நேரம் சாமான் வாங்கிட்டு மிஞ்சின காசில பேப்பர் வாங்கிட்டன்.இனி வீட்டில ஒரே சண்ட.வீடு முழுக்க ஒரே குப்பயாம் என்று சொல்லி பேப்பர் எல்லாத்துக்கும் நெருப்பு வச்சிட்டா" கவலையுடன் கூறிக் கொண்டு போனார் அப்துல்லா. 

             

"இந்தாங்க அங்கிள் பிளேன்ட்டி " என பஸ்னா தேநீரை நீட்டினாள்."மகள் பஸ்னா எனக்கு மிச்ச நாளாக உங்க இஞ்சி பிளேன்ட்டிய குடிச்சிப் பார்கனும்னு ஆச. பாரூக் எப்பவும் உன்ன பத்தி தானே பேசுவான்.

நீ போடுற இஞ்சி பிளேன்ட்டி,சமையல் எல்லாத்தையும் பாராட்டித் தள்ளுவான்.வாயத் தொறந்தாப் போதும் எப்பவுமே மருமகள் புராணம் தான். என்ன செய்ய மகள் உங்களப் போல ஒரு நல்ல மருமகள் எனக்கு கிடைக்கல்ல.பாரூக் அதிஷ்டசாலி தான். என் வாழ்க்கை இப்படியே நாய் படாத பாடாய்ப் போயிடிச்சி" என பெருமூச்சு விட்டவாறு அப்துல்லா தேநீரைக் குடித்து முடித்தார். பாரூக் நானா மெல்ல சிரித்துக் கொண்டார்.

             

சிறிது நேரத்திற்குப் பிறகு அப்துல்லா போய் விட்டார். பாரூக் நானா மஃரிப் தொழுது விட்டுக் குர்ஆன் ஓதினார்.பேரனுக்கும் ஓதிக் கொடுத்தார்.பேரனை மடியில் வைத்துக் கொண்டு வரலாற்றுக் கதைகள் சொன்னார். ஹஷ்மத் ஆவலோடு கதை கேட்டான். "அதுக்குப் பிறகு என்ன நடந்திச்சி டடப்பா" அவனுக்கு ஆயிரம் கேள்விகள். பொறுமையாக அவற்றுக்குப் பதில் கூறிக் கொண்டிருந்தார் பாரூக் நானா. அவருக்கு மீண்டும் ஒரு பிளேன்ட்டி குடிக்க வேண்டும் போல் இருந்தது. 

"மகள்.....மகள்.....

பஸ்னா " தொலைபேசியில் மூழ்கியிருந்த பஸ்னாவுக்கு எரிச்சலாக இருந்தது. "சீ.....கொஞ்ச நேரம் நிம்மதியாக இருக்க விடமாட்டாரே இந்த மனிசன்" என எண்ணியவாறு முன்னறைக்கு வந்தாள்."என்ன....என்ன வேணும்" முகத்தில் பாய்ந்தாள் பஸ்னா. "இல்ல மகள் ஒரு இஞ்சிப் பிளேன்ட்டி......."

இழுத்தார் பாரூக் நானா. 

          

"டடப்பா நீங்க சொல்லியிருக்கீங்க தானே மூத்த ஆக்களோட மரியாதையாப் பேசணும் ,இரக்கமாப் பேசணும் அப்படி என்று ஆனா உம்மா ஏன் எப்பவும் உங்க முகத்தில பாயுராங்க " ஹஷ்மத்தின் கேள்வியைக் கேட்டு துணுக்குற்றாள் பஸ்னா. 

"மகன் டடப்பா ஒரு நாளைக்கு எத்தன முற பிளேன்ட்டி குடிக்கிறன் சொல்லுங்க பார்ப்பம்"


"ஓ ... டடப்பா நீங்க ஒரே இஞ்சி பிளேன்ட்டி தானே கேக்குற"


"உம்மா டடப்பாவோட இருக்கிற இரக்கத்தில தான் அப்படிப் பேசுறாங்க.நான் நிறைய பிளேன்ட்டி குடிக்கிறன் தானே.நான் கேட்ட உடனே எனக்கு ஏசாம ஊத்தித் தந்தா என்டா நான் இன்னும் நெறய குடிப்பேன்.அது  டடப்பாட ஹெல்த்துக்கு சரியில்ல தானே.பிறகு எனக்கு 'சுகர்' நோய் வரும்.அதுதான் என் மேல உள்ள அக்கறல இரக்கத்தில தான் உம்மா அப்படிப் பேசுறாங்க "


"ஓ.... அப்படியா? டடப்பாவோட உம்மாவும் இரக்கமா?ஹஷ்மத் பாரூக் நானாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

வழமையாக பிளேன்ட்டி தயாரித்த பிறகு மேசையில் வைத்து விடும் பஸ்னா இன்று பிளேன்ட்டியை எடுத்துக் கொண்டு பாரூக் நானாவின் அருகில் சென்றாள்.

"மாமா....இந்தாங்க மாமா பிளேன்ட்டி" என

புன்னகைத்தவாறு இஞ்சிப் பிளேன்ட்டியை தனது மாமாவின் கையில் கொடுத்தாள் பஸ்னா.

Reading Time:

Wednesday, October 6, 2021

எவரெஸ்ட் சிகரம் அல்லது* *பசிபிக் பெருங்கடல்* *மீது ஏன்* *விமானங்கள் பறப்பதில்லை?
October 06, 20210 Comments



 *🌟எவரெஸ்ட்* 


➡️இமாலய மலையின் உயரம் சராசரியாக 20,000 அடிக்கு மேல் உள்ளன.


➡️குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் ஸ்ரேடோஸ்பியர் அடுக்கின் எல்லை முடிவடைந்துவிடும்.


➡️அதனால் அங்கு ஆக்சிசன் பற்றாக்குறையாக நிலவும்.


➡️மேலும் அவ்வளவு உயரத்தில் ரேடார் & பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு கிடைப்பதும் அரிதாக இருக்கும்.


🔆 *இது ஒரு காரணம்.* 🔆


➡️மற்றொன்று இந்திய பாதுகாப்புப் படையினர் இந்திய எல்லைக்குட்பட்ட இமய மலையை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பு பகுதிகளில் ஈடுபட்டுள்ளனர்.


➡️அவர்களுக்கு ஏதேனும் பாதுகாப்புக்கு இடையூறாக அமைவது போல் தோன்றினால் அவர்கள் அது விமானம் ஆனாலும் சுட்டுத் தள்ள உரிமை உள்ளது.


➡️பாதுகாப்பு தொடர்பான காரணங்களாலும் எவரெஸ்ட் மேல் பறக்க அனுமதிப்பதில்லை.


➖➖➖➖➖➖➖➖➖

 *🔆பசிபிக் பெருங்கடல்* 🔆


➡️பசிபிக் பெருங்கடல் என்பது பெருமளவில் பரந்து விரிந்து உள்ளது.


➡️கிட்டத்தட்ட புவியின் 1/3 பங்கு பரவியுள்ளது.


➡️இதனால் பசிபிக் பெருங்கடல் மீது பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


➡️குறிப்பாக, பசிபிக் பெருங்கடலில்தான் மரியானா அகழி போன்ற மர்மமான பகுதிகளும் அமைந்துள்ளன.


➡️மேற்சொன்ன படி ஒருவேளை விமானங்கள் வழி மாறி இப்பகுதிகளுக்குள் சென்றுவிட்டால் அசம்பாவிதங்கள் ஏற்படவும் வழி உண்டு என்பதால் இப்பகுதிகளின் மேலேயும் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. 

Reading Time:
வரலாற்றில் இன்று October 06
October 06, 20210 Comments

 



அக்டோபர் 6  கிரிகோரியன் ஆண்டின் 279 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 280 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 86 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉கிமு 69 – உரோமைப் படைகள் திக்ரனோசெர்ட்டா சமரில் ஆர்மீனியாவை வெற்றி கொண்டது.


👉 கிபி 23 – சீனாவில் இடம்பெற்ற உழவர் கிளர்ச்சியை அடுத்து சின் பேரரசர் கிளர்ச்சிவாதிகளால் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.


👉404 – பைசாந்தியப் பேரரசி இயூடோக்சியா தனது ஏழாவது பிள்ளைப்பேறின் போது இறந்தார்.


👉1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.


👉1683 – வில்லியம் பென் தன்னுடன் 13 செருமனியக் குடும்பங்களை பென்சில்வேனியாவுக்கு அழைத்துவந்து குடியேற்றினார். இவர்களே முதன் முதலாக அமெரிக்காவுக்கு குடியேறிய செருமானியர் ஆவர்.


👉1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் மணிலாவில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது. ஏழாண்டுப் போர் முடிவடையும் வரையில் பிரித்தானியா மணிலாவைத் தன் பிடியில் வைத்திருந்தது.


👉1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படைகள் அட்சன் ஆற்றுப் பகுதியில் கிளிண்டன், மொன்ட்கோமரி கோட்டைகளைக் கைப்பற்றின.


👉1789 – பிரெஞ்சுப் புரட்சி: முன்னைய நாள் பெண்களின் போராட்ட அணியை வெர்சாய் அரண்மனையில் எதிர்கொண்ட பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அங்கிருந்து வெளியேறி துலேரிசு அரண்மனைக்குக் குடியேறினான்.


👉1795 – கேணல் பாபற் என்பவரின் தலைமையில் பிரித்தானியப் படையினர் மன்னாரை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.


👉1847 – அமெரிக்க மதப்பரப்புனரும், மருத்துவருமான சாமுவேல் பிஸ்க் கிறீன் பருத்தித்துறையை வந்தடைந்தார்.


👉1849 – அங்கேரிய விடுதலைப் போரின் முடிவில் போராளிகள் 13 பேர் அராட் என்ற இடத்தில் (தற்போது ருமேனியாவில்) தூக்கிலிடப்பட்டனர்.


👉1854 – இங்கிலாந்தில் நியூகாசில் மற்றும் கேற்சுகெட் நகரங்களில் பரவிய பெருத் தீயில் 54 பேர் உயிரிழந்து நூற்றுக்கணகானோர் காயமடைந்தனர்.


👉1889 – தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையின் உச்சி முதன் முதலில் எட்டப்பட்டது.


👉1890 – யாழ்ப்பாண நகரில் “சின்னக்கடை” எனப்படும் முக்கிய சந்தையில் கடைத்தொகுதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் சில உயிரிழப்புகளுடன் பலர் படுகாயமடைந்தனர்.[1]


👉1908 – ஆத்திரியா-அங்கேரி தன்னுடன் பொசுனியா எர்செகோவினாவை இணைத்துக் கொண்டது.


👉1923 – முதலாம் உலகப் போர்: இசுதான்புல்லில் இருந்து பெரும் வல்லரசுகள் வெளியேறின.


👉1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கடைசி இராணுவத்தினர் தோற்கடிக்கப்பட்டனர்.


👉1943 – இரண்டாம் உலகப் போர்: கிரீட்டில் 13 பொதுமக்கள் துணை இராணுவக் குழுக்களினால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.


👉1966 – எல்எஸ்டி ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.


👉1973 – 80,000 எகிப்தியப் படைகள் சூயசுக் கால்வாயைக் கடந்து இசுரேலிய பார் லேவ் கோட்டை அழித்து, யோம் கிப்பூர்ப் போரை ஆரம்பித்தனர்.


👉1976 – சீன பிரதமர் நால்வர் குழுவையும் அவர்களைச் சேர்ந்தவர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார். சீனப் பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்தது.


👉1976 – பார்படோசில் இருந்து புறப்பட்ட கியூபா விமானம் ஒன்று பிடெல் காஸ்ட்ரோவுக்கெதிரான தீவிரவாதிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.


👉1976 – தாய்லாந்தில் அரசுக்கெதிராக இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


👉1977 – மிக்-29 வானூர்தி தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.


👉1979 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வெள்ளை மாளிகைக்குச் சென்ற முதலாவது திருத்தந்தை என்ற பெயரைப் பெற்றார்.


👉1981 – எகிப்திய அரசுத்தலைவர் அன்வர் சாதாத் இசுலாமியத் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.


👉1987 – பிஜி குடியரசாகியது.


👉1995 – வேறொரு சூரியனை சுற்றி வரும் முதலாவது கோள் 51 பெகாசி பி கண்டுபிடிக்கப்பட்டது.


👉2008 – அநுராதபுரம் குண்டுவெடிப்பு: தற்கொலைக் குண்டுவெடிப்பில் இலங்கையின் இராணுவத் தளபதி ஜானக பெரேரா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.


👉2010 – இன்ஸ்ட்டாகிராம் ஆரம்பிக்கப்பட்டது.


இன்றைய தின பிறப்புகள்.


👉1552 – மத்தேயோ ரீச்சி, இத்தாலிய மதப்பரப்புனர் (இ. 1610)


👉1732 – நெவில் மசுகெலினே, பிரித்தானிய அரசு வானியலாளர் (இ. 1811)


👉1831 – ரிச்சர்டு டீடிகைண்டு, செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1916)


👉1846 – ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ், அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 1914)


👉1887 – லெ கொபூசியே, சுவிட்சர்லாந்து-பிரான்சியக் கட்டிடக் கலைஞர், ஓவியர் (இ. 1965)


👉1893 – மேகநாத சாஃகா, இந்திய வானியலாளர் (இ. 1956)


👉1897 – புளோரன்ஸ் பி. சீபர்ட், அமெரிக்க உயிரிவேதியியலாளர் (இ. 1991)


👉1921 – அப்துல் அசீஸ், இலங்கை அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (இ. 1990)


👉1928 – டி. என். கிருஷ்ணன், கேரள வயலின் இசைக் கலைஞர்


👉1930 – பஜன்லால், அரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் (இ. 2011)


👉1930 – ரிச்சி பெனோட், ஆத்திரேலியத் துடுப்பாளர், ஊடகவியலாளர் (இ. 2015)


👉1931 – நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக், உருசிய வானியலாளர் (இ. 2004)


👉1931 – இரிக்கார்டோ ஜியாக்கோனி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2018)


👉1935 – புலமைப்பித்தன், தமிழகக் கவிஞர், பாடலாசிரியர் (இ. 2021)


👉1940 – சுகுமாரி, தென் இந்திய திரைப்பட நடிகை (இ. 2013)


👉1944 – ஜீதன் ராம் மாஞ்சி, பீகாரின் 23-வது முதலமைச்சர்


👉1946 – டோனி கிரெய்க், தென்னாப்பிரிக்க-ஆங்கிலேயத் துடுப்பாளர், ஊடகவியலாளர் (இ. 2012)


👉1946 – வினோத் கன்னா, இந்தி நடிகர்


👉1957 – ஏ. எல். எம். அதாவுல்லா, இலங்கை அரசியல்வாதி


👉1969 – கெலந்தானின் ஐந்தாம் முகம்மது, மலேசிய மன்னர்


👉1982 – சிபிராஜ், தமிழகத் திரைப்பட நடிகர்


இன்றைய தின இறப்புகள்.


👉 1661 – குரு ஹர் ராய், 7வது சீக்கிய குரு (பி. 1630)


👉1892 – ஆல்பிரட் டென்னிசன், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1809)


👉1905 – பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென், செருமானியப் புவியியலாளர் (பி. 1833)


👉1944 – ஆர்தர் பெரிடேல் கீத்து, இசுக்காட்லாந்து அரசியல்சட்ட அறிஞர், இந்தியவியலாளர் (பி. 1879)


👉1951 – ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1884)


👉1962 – ப. சுப்பராயன், சென்னை மாகாணத்தின் முதல்வர் (பி. 1889)


👉1974 – வி. கே. கிருஷ்ண மேனன், இந்திய அரசியல்வாதி (பி. 1896)


👉1981 – அன்வர் சாதாத், எகிப்தின் 3வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)


👉2008 – ஜானக பெரேரா, இலங்கை இராணுவத் தளபதி (பி. 1946)


இன்றைய தின சிறப்பு நாள்.


👉யோம் கிப்பூர் நினைவு நாள் (சிரியா)


👉உலக விண்வெளி வாரம் (அக்டோபர் 4–10)


👉ஆசிரியர் நாள் (இலங்கை)


Reading Time:

Tuesday, October 5, 2021

வரலாற்றில் இன்று October 05
October 05, 20210 Comments

 


அக்டோபர் 5  கிரிகோரியன் ஆண்டின் 278 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 279 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 87 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉610 – எராகிளியசு ஆப்பிரிக்காவில் இருந்து கான்ஸ்டண்டினோபோலை கப்பல் மூலம் அடைந்து பைசாந்தியப் பேரரசன் போக்காசை ஆட்சியில் இருந்து கவிழ்த்து பேரரசனானான்.


👉816 – புனித உரோமைப் பேரரசராக லூயி பயசு முடிசூடினார்.


👉1143 – லெயோன், காசுட்டில் மன்னர் ஏழாம் அல்பொன்சோ போர்த்துகலை ஒரு இராச்சியமாக அங்கீகரித்தார்.


👉1450 – பவேரியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.


👉1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.


👉1780 – வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது.


👉1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் பெண்கள் பதினாறாம் லூயி மன்னனுக்கு எதிராக வெர்சாய் அரண்மனை நோக்கி அணிதிரண்டு சென்றனர்.


👉1795 – இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.


👉1799 – ஆங்கிலேயரினால் பிடிக்கப்பட்ட கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான்.


👉1838 – கிழக்கு டெக்சாசில் 18 குடியேறிகள் படுகொலை செய்யப்பட்டனர்.


👉1864 – இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் இடம்பெற்ற சூறாவளி நகரை முற்றாக சேதப்படுத்தியது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.


👉1905 – ரைட் சகோதரர்கள் 24 மைல்களை 39 நிமிடங்களில் விமானத்தில் பறந்து சாதனை படைத்தனர்.


👉1910 – போர்த்துக்கலில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து அங்கு மன்னராட்சி முடிவுக்கு வந்து குடியரசாகியது.


👉1911 – கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை ஆரம்பமானது.


👉1915 – முதலாம் உலகப் போர்: பல்கேரியா போரில் இறங்கியது.


👉1930 – பிரித்தானிய வான்கப்பல் ஆர்101 தனது முதலாவது பயணத்தில் இந்தியா செல்லும் வழியில் பிரான்சில் விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்தனர்.


👉1938 – நாட்சி செருமனியில் யூதர்களின் கடவுச்சீட்டுகள் செல்லுபடியற்றதாக்கப்பட்டன.


👉1943 – இரண்டாம் உலகப் போர்: வேக் தீவில் 98 அமெரிக்கப் போர்க் கைதிகள் சப்பானியப் படைகளால் கொல்லப்பட்டனர்.


👉1947 – பஞ்சத்தில் வாடும் ஐரோப்பியருக்காக தானியங்கள் உட்கொள்ளுதலைக் குறைக்குமாறு தொலைக்காட்சி உரையில் அரசுத்தலைவர் ட்ரூமன் அமெரிக்க மக்களைக் கேட்டுக் கொண்டார்.


👉1948 – துருக்மெனிஸ்தான் தலைநகர் அசுகாபாத் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.


👉1974 – இங்கிலாந்தில் ஐரியக் குடியரசு இராணுவத்தினர் மதுபான சாலை ஒன்றில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். 65 பேர் காயமடைந்தனர்.


👉1970 – அமெரிக்காவில் பொது ஒளிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.


👉1978 – ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு கிருஷ்ணா வைகுந்தவாசன் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றினார்.


👉1987 – விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேர் இந்தியப் படையின் காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி மரணமானார்கள்.


👉1988 – சிலியின் எதிர்க்கட்சிக் கூட்டணி அகஸ்தோ பினோசெட்டை அரசுத்தலைவர் தேர்தலில் தோற்கடித்தனர்.


👉1991 – இந்தோனேசியாவின் இராணுவ விமானம் ஒன்று ஜகார்த்தாவில் விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் இறந்தனர்.


👉1999 – மேற்கு லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 31 பேர் கொல்லப்பட்டனர்.


👉2000 – செர்பியாவில் சிலோபதான் மிலோசேவிச்சுக்கு எதிரான மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.


👉2008 – கிர்கிஸ்தானில் சீன எல்லை மலைப்பகுதியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 65 பேர் உயிரிழந்தனர்.


👉2011 – மேக்கொங் ஆற்றில் இரண்டு சீன சரக்குப் படகுகள் கடத்தப்பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.


இன்றைய தின பிறப்புகள்.


👉 1524 – ராணி துர்காவதி, கோண்டுவானா அரசி (இ. 1564)


👉1823 – இராமலிங்க அடிகளார், இந்திய சன்மார்க்க சிந்தனையாளர் (இ. 1873)


👉1864 – லூயி சான், பிரான்சியத் தயாரிப்பாளர், இயக்குநர் (இ. 1948)


👉1882 – இராபர்ட் காடர்ட், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1945)


👉1882 – ஜியார்ஜியோ அபெட்டி, இத்தாலிய வானியலாளர் (இ. 1982)


👉1885 – அருணாசலம் மகாதேவா, இலங்கை அரசியல்வாதி (இ. 1969)


👉1907 – ராக்னர் நர்க்சு, எசுத்தோனிய-அமெரிக்க பொருளியலாளர் (இ. 1959)


👉1911 – ப. கண்ணாம்பா, தமிழ்த் திரைப்பட நடிகை (இ. 1964)


👉1927 – ரா. கி. ரங்கராஜன், தமிழக எழுத்தாளர், இதழாளர் (இ. 2012)


👉1934 – சோ, பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர் (இ. 2016)


👉1936 – வாக்லாவ் அவொல், செக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (இ. 2011)


👉1945 – ரமா பிரபா, தென்னிந்தியத் தெலுங்கு நடிகை


👉1946 – கோ. கேசவன் தமிழக எழுத்தாளர் (இ. 1998)


👉1950 – வி. வைத்தியலிங்கம், புதுச்சேரியின் அரசியல்வாதி, முன்னாள் முதலைமைச்சர்


👉1952 – இம்ரான் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர், அரசியல்வாதி


👉1957 – பெர்னி மாக், அமெரிக்க நடிகர் (இ. 2008)


👉1965 – கல்பனா, தென்னிந்திய-மலையாளத் திரைப்பட நடிகை (இ. 2016)


👉1975 – கேட் வின்ஸ்லெட், ஆங்கிலேய நடிகை


இன்றைய தின இறப்புகள்.


👉1565 – லியூஜி ஃபெறாரி, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1522)


👉1805 – காரன்வாலிஸ், ஆங்கிலேய இராணுவ அதிகாரி, அரசியல்வாதி (பி. 1738)


👉1813 – டிக்கம்சா, அமெரிக்க பழங்குடித் தலைவர் (பி. 1768)


👉1938 – மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா, போலந்து புனிதர் (பி. 1905)


👉1942 – டோரத்தியா கிளம்ப்கே இராபட்சு, அமெரிக்க வானியலாளர் (பி. 1861)


👉1960 – அல்பிரட் எல். குறோபெர், அமெரிக்க மானிடவியலாளர் (பி. 1876)


👉1976 – லார்ஸ் ஒன்சாகர், நோபல் பரிசு பெற்ற நோர்வே-அமெரிக்க வேதியலாளர், இயற்பியலாளர் (பி. 1903)


👉1976 – பி. எல். பட்நகர், இந்தியக் கணிதவியலாளர் (பி. 1912)


👉1996 – யாழ்வாணன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)


👉2009 – இசுரேல் கெல்ஃபாண்ட், சோவியத் கணிதவியலாளர் (பி. 1913)


👉2011 – ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்தவர் (பி. 1955)


👉2015 – திருமாவளவன், ஈழத்துக் கவிஞர் (பி. 1955)


இன்றைய தின சிறப்பு நாள்.

👉உலக விண்வெளி வாரம் (அக்டோபர் 4-10)


👉உலக ஆசிரியர் நாள்


👉குடியரசு நாள் (போர்த்துகல்)


👉பால்வினைத் தொழிலுக்கு எதிரான பன்னாட்டு நாள்.

Reading Time:

Monday, October 4, 2021

 முஹம்மது நபியின் கார்ட்டூனை வரைந்தவர் விபத்தில் மரணம்.
October 04, 20210 Comments

BREAKING NEWS 



ஒக்டோபர் - 04, திங்கள் - 2021


IMW▪️முஹம்மது நபியின் கார்ட்டூனை வரைந்த சுவீடனை சேர்ந்த லோர்ஸ் வில்க்ஸ் விபத்தில் மரணமடைந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


IMW▪️இதன்படி ,பொலிஸ் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ஒரு ட்ரக்கில் மோதி விபத்து நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் அவருடன் சென்று கொண்டிருந்த இரு காவலர்களும் உயிரிழந்தனர்.


IMW▪️டென்மார்க் செய்தித்தாள் முகமது நபியின் கார்ட்டூன்களை வெளியிட்ட அடுத்த ஆண்டில், வில்க்ஸ் கார்ட்டூன் வரைந்தார்.


IMW▪️இதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்ததால், பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.


IMW▪️2007 ஆம் ஆண்டில் இந்த கார்ட்டூன் வரையப்பட்டபோது உலகம் முழுவதும் இஸ்லாமியர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.


மேலும் அல்-கைதா அவரது உயிருக்கு 1 இலட்சம் டொலர் வெகுமதி அளிப்பதாக அறிவித்தது.

Reading Time:
நீராடச் சென்ற குடும்பஸ்தர் மாயம்;
October 04, 20210 Comments

 I... M..W....



பூண்டுலோயா வெவஹேன பிரதேசத்தில் கொத்மலை ஓயாவில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மாயமான நிலையில் அவரை தேடும் பணிகள் மூன்றாவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி அன்று மாலை 5 பேர் கொண்ட தனது நண்பர்களுடன் வெவஹேன பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே அவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளானர்.

இதன் போது கால் தவறி ஆற்றில் விழுந்த குறித்த இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனாவர் பூண்டுலோயா கும்பாலொலுவ பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான 34 வயதுடைய இலங்க சஞ்சீவ என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காணாமல் போன இளைஞனை தேடி பூண்டுலோயா பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரும், நுவரெலியா இராணுவத்தினரும், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மூன்றாவது நாளாக இன்றும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Reading Time:
அறிவுக்கு விருந்து
October 04, 20210 Comments

 🍃 பிரதிபலன் பாராது உதவுவோம்🍃



🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀

➖➖➖➖➖➖➖➖➖➖

பிரதியீடு சிலநேரங்களில்  எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே இருக்கும்

➖➖➖➖➖➖➖➖➖➖


படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு  ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.


அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.


பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை  கவனித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.


வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.


அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிபு மிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.


பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.


அதற்கு உரிமையாளர் . இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் .


" இல்லை சார்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர்.


" நண்பரே... உங்களுக்கு விசயம் புரியவில்லை. நடந்த விசயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.


" நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன். 


பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.


படகில் ஓட்டை இருந்த விசயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு  இருக்கவுமில்லை.


நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விசயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன். 


கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.


உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது  சிறியதொரு வேலையா?  நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்?  உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார்.


நண்பர்களே... இதிலிருந்து என்ன புரிகிறது. ​யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. *நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம்.* 

 பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பான். 

Reading Time:
இம்முறை G.C.E(O/L) 2020 பெறுபேற்றினை பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு ....
October 04, 20210 Comments

 



இம்முறை G.C.E(O/L) 2020 பெறுபேற்றினை பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு அனைத்துப்பாடங்களிலும் W என்ற சித்தியின்மையினைப் பெற்றிருந்தாலும் உயர்தரம்( A/L) இரண்டு வருடங்கள் கற்று பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெறுவதற்கான சந்தர்ப்பத்தினை தற்போது கல்வி அமைச்சு வழங்கியுள்ளது. இதன்விபரம் பின்வருமாறு


தற்போது உள்ள.Bio, Maths, Commerce, Arts, E-Tech, B-Tech என்ற 6 பிரிவுகளுக்கும் மேலதிகமாக 7 ஆவது பிரிவாக தொழில் பிரிவு( Vocational Stream) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது O/L பரீட்சைப் பெறுபேற்றினைப் பெற்ற உயர்தரத்திற்கு இணையவுள்ள 2021/2023 ஆம் ஆண்டின் மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


இதற்கு O/L பரீட்சைப்பெறுபேறு கவனத்திற் கொள்ளப்படமாட்டாது, (all F/W உம் கற்கலாம், இரண்டு வருட கற்கை நெறியாகும் ஒவ்வொரு வருடத்திலும் 3 தவணை 2 வருடத்திலும் மொத்தம் 6 தவணைகளாகும், 1ஆம் வருடத்தில் ( first year) 1 ஆம் தவணையில் ஆரம்ப அறிமுகப்பாடங்களாக 9 பாடங்கள் நடைபெறும் தொழில் பிரிவு மாணவர்கள் இப்பாடங்களை( உ+ம்:- தமிழ்,சிங்களம்,ஆங்கிலம்,தொழில்வழிகாட்டல்கள்,உளவியியல்,ICT,தொழில் நுட்பம் இன்னும் பல......) கட்டாயம் எடுத்தாகவேண்டும் இதில் தெரிவு கிடையாது.


@ First year இல் மீதமாகவுள்ள 2 ஆம்,3 ஆம் தவணைகளில் 26 பாடங்களில்(உ+ம்:- QS, Web disining, ICT, பொறியியல், மின்னியியல், பிளம்பிங், Hotel Managment,பெண் அலங்காரம் போன்ற இன்னும் சில பாடங்கள்.......)இதில் கட்டாயம் 3 பாடங்களினை எடுத்தாக வேண்டும்.


2 ஆம் வருடம்(2nd year)

@1 ஆம் வருடத்தில் 2 ஆம்,3 ஆம் தவணையில் எடுத்த மூன்று பாடங்களிலும் ஏதாவது ஒரு பாடத்தினை தெரிவு செய்து 2 ஆம் வருடம் முழுவதும் அப்பாடம் ஒன்றினையே கற்று உயர்தரப் பொதுப்பரீட்சையில் அப்பாடமொன்றிலையே பரீட்சை எழுதி பல்கலைக் கழகம் செல்ல முடியும் உதாரணமாக 2 ஆம் வருடத்தில் QS என்ற ஒரு பாடத்தினைக் கற்ற ஒருவர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற முடியும்.


@ தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்( UGC) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச ரீதியான பல்கலைக்கழகமொன்று றட்மலாணையில் தொழில் பிரிவு பல்கலைக்கழகமாக தொழிற்பட்டுக்கொண்டு வருகின்றது இலங்கையில் ஏலவே 40 இற்கு மேற்பட்ட பாடசாலைகளில் தொழில் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


@2020/2021 இல் சகல பல்கலைக் கழகங்களிலும் தொழில் பிரிவு பீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது

@ உயர்தரப் பொதுப்பரீட்சையில் தொழில் பிரிவு மாணவர்கள் S தரத்தில் சித்தி பெற்றாலும் பல்கலைக்கழகந்தான் போக முடியாவிட்டாலும் NVQ Level 4 (National Vocational Qualification Level 4) இனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

@ பல்கலைக்கழகங்களில் NVQ Level 5,6,7 முடித்துவிட்டு பட்டத்தினைப்( Degree) பெற்றுக்கொள்ள முடியும்.

@ பல்கலைக்கழகம் சென்றுதான் NVQ Level 7 இனைப் பெறவேண்டும் என்பதல்ல அம்பாறை ஹாடி தொழில் நுட்பக் கல்லூரி போன்றவற்றிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.  

Reading Time:
இஸ்லாமிய பெண்களே ....!!!!
October 04, 20210 Comments

╔═══❖✭᯽⊱❊🌹 ❊⊰᯽✭❖═══╗

 🌹🌹INFORMATION WORLD🌹🌹

╚═══❖✭᯽⊱❊🌹❊⊰᯽✭ ❖═══╝



 *ASSALAMU ALAIKUM....🖤


பொசுக்கு பொசுக்கென்று கோபப்பட்டு divorce கேட்டு நீதிமன்றம் செல்லும் பெண்களே இது உங்கள் கவனத்திற்கு:


ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் என்று பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது ! 


மிக கொடூர சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு விவாகரத்து தேவையே  அதில் மாற்று  கருத்து இல்லை. 


ஆனால் அன்பில் இசைந்து செல்ல வேண்டிய விஷயங்களுக்கு கூட ஈகோ பார்த்துக் கொண்டும் குடும்ப உறவுகளின் வற்புறுத்தலுக்கும் நண்பர்களின் தேவையற்ற ஆலோசனைகள் ஆகியவை இளம் வயதினர் அதிகம் விவாகரத்தை நாடி செல்ல காரணமாகி விடுகிறது. 

ஆணைச் சார்ந்து பெண் வாழும் சுழலும் இப்போது இல்லை இது மிகப் பெரிய காரணம் எனலாம்.


உனக்கு என்ன கை நிறைய சம்பாதிக்கிற உன்னால் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியும் யோசிக்காதே தைரியமாய் முடிவெடு என்று ஆலோசனைகள் அதிகம் கொடுத்து கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


பணம் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே வாழ்க்கை இல்லை அதையும் மீறிய விஷயங்கள் இருக்கின்றது.


உங்களுக்கு வேறொரு கணவன் கிடைக்கலாம் அல்லது கணவனென்றால் வேறொரு மனைவி கிடைக்கலாம் ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் அப்பாக்களோ & அம்மாக்களோ நிச்சயம் கிடைக்க மாட்டார்கள்.


பார்ன் சுவாலோ என்ற சின்னச் சிறு பறவையினம் இனப்பெருக்கத்திற்காக  8300 கி.மீ. கடலின் மீது பயணம் செய்கிறது. அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! 

அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது  சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் ஓய்வெடுத்து பறந்து வேறொரு நாட்டில் தன் இனத்தை விருத்தி செய்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் கடலின் மேலே தன் குஞ்சுகளுடன் பயணம் செய்து தன் சொந்த நாட்டை அடையும். 


ஒரு நல்வாழ்வை தன் குஞ்சுகளுக்கு கொடுக்க ஒரு பறவை இவ்வளவு போராடுகிறது பேரன்பு இருந்தால் மட்டுமே இந்த பயணம் சாத்தியம்.


சிறு சிறு விஷயத்திற்கும் சண்டையிட்டுக் கொண்டும் சகிப்புத் தன்மை அற்றும் அல்லது பிற ஈர்ப்பில்  மனம் மயங்கியும் ஏன் இந்த வாழ்வை தொடருகிறோம் என்று கசப்புடனும் இருக்கும் தம்பதியினர் அனைவருமே இந்த பறவையின் பயணத்தில் கற்றுக் கொள்ள நிறையவே உள்ளது.


தன் இனத்தை நல்லவிதமாக உருவாக்குவதில் இத்தனை போராட்டங்கள் ஒரு பறவையின் வாழ்விலேயே உண்டென்றால் மனித வாழ்வில் இதைக்காட்டிலும் அதிக போராட்டங்கள் இருக்கும்.


பெண்ணியம் என்றால்  விவாகரத்து பெறுதல் என்பது மட்டுமே அல்ல  என்ற புரிதல் வேண்டும் ! 

ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம் என்றால் அவள் மீண்டும் வாழ்வை பெற்றுக் கொள்ள  காத்திருக்கும் வர்க்கமும் இதே ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம்தான்! . 

மாற்றப்படவேண்டியது மனங்களே. எதையும் எதிர் கொள்ளும் தைரியம்தான்.!


தன் கணவனிடமே தன் சுயத்தை நிரூபிக்க முடியாமல் தோல்வியுறும் பெண் வேறு ஒரு ஆணிடம்  தன் சுதந்திரத்தை எப்படி மீட்டெடுப்பாள்?


அதே போன்று ஒரு பெண்ணிடம் அன்பை பெற சக்தியற்ற ஒருவன் வேறொரு பெண்ணில் தன் அன்பை எப்படி பெற முடியும்?


அனைவரிடமும் சிறு சிறு அளவில் அல்லது பெரிய அளவிலும் குறைகள் இருக்கலாம் பேரன்பு கண் கொண்டு காணில் அனைத்தும் சாத்தியமே ! 


மேலை நாடுகள் போல் சுதந்திர வாழ்வு அல்லது வேறு துணைதேடிக் கொள்ளுதல் என்று இப்போது மேற்கோள் காட்டிக் கொண்டிருக்க இயலாது குடும்பம் அமைப்பினை தொலைத்து வெளியில் தேடியவர்கள் இப்போது மகிழ்ச்சி என்பது அவரவர் குடும்பத்தில் மட்டுமே சாத்தியப்படும் என்ற உண்மையை உணர்ந்து 'ஒரே பெற்றோர்' என்ற வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுக்க துவங்கி இருக்கிறார்கள்.


அங்கு சில கீழ் தட்டு மக்களே விவாகாரத்துக்கள் இன்னும் அதிகமாக பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுகிறார்கள்.


இனம் காப்பதில் துணையை தேர்வு செய்வதில் பிற உயிரினங்களுக்கு இருக்கும் தெளிவு நமக்கு இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்துக் கொள்வோம் ! 


அறிவென்பது மகிழ்ச்சியை இருக்கும் இடத்திலேயே உருவாக்கிக் கொள்ளுதலிலும் அதற்கேற்ப மாற்றங்களை அழகாய் கொண்டு வருவதிலும் அடங்கும்.!



*╔═══❖✭᯽⊱❊🌹 ❊⊰᯽✭❖═══╗*

 *🌹🌹INFORMATION WORLD🌹🌹* 

*╚═══❖✭᯽⊱❊🌹❊⊰᯽✭ ❖═══╝*

Reading Time:
இன்று உலக விலங்குகள் தினம்!
October 04, 20210 Comments

I...M..W.... 



அக்டோபர் 4,  இன்று உலக விலங்குகள் தினம். 


இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர், பிரான்சிஸ் அசிசி என்பவருடைய நினைவு நாளைக் கொண்டாடும் வகையில், உலக வன விலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. முதன்முதலாக 1931-ம் ஆண்டு, இத்தாலியின் புளோரன்ஸ் நகரில்தான் வனவிலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. 


அதன் பின்னர், விலங்குகள் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டுவருகிறது. 


இறைத் தூதுவராக போற்றப்பட்ட அசிசி, தனது வாழ்நாளில் விலங்குகள்மீது அன்புகொண்ட ஆர்வலராக விளங்கினார். 


அவற்றைக் காப்பதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்தார்.


இதன் காரணமாகவே அவரது நினைவு நாள், உலக விலங்குகள் தினமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கடைபிடிக்கப்படுகிறது. 


உலகில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை தன்மையைப் பொறுத்தே, ஒவ்வோர் இடத்தின் சூழலியல் மண்டலமும் இயங்குகிறது. 


விலங்குகள்தான் மனிதனைப் பாதுகாத்து, மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றன. 


இயற்கையும் விலங்குகளும் ஒன்றோடொன்று இணைந்த சூழல்தான், மனிதனின் வாழ்க்கையைச் சிறப்பாக வழிநடத்த முடியும். 


இப்போதைய காலகட்டத்தில், விலங்குகளுக்கு மனிதர்களாகிய நாம் தீமை செய்யாமல் இருந்தாலே போதும், விலங்குகள் தங்களைத் தங்களே பாதுகாத்துக்கொள்ளும்.

Reading Time:
அப்துல் கலாமின் சிறந்த 24 பொன்மொழிகள்
October 04, 20210 Comments


 📆📆*04th of October 2021* 


1️⃣. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.


2️⃣. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.


3️⃣ ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.


4️⃣ ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.


5️⃣. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.


6️⃣. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.


7️⃣. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.


8️⃣. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.


9️⃣. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.


1️⃣0️⃣. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.


1️⃣1️⃣. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.


1️⃣2️⃣. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.


1️⃣3️⃣. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.


1️⃣4️⃣. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.


1️⃣5️⃣. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.


1️⃣6️⃣. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.



1️⃣7️⃣ சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும்.


1️⃣8️⃣. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.


1️⃣9️⃣. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.


2️⃣0️⃣ பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.


2️⃣1️⃣. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.


2️⃣2️⃣. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.


2️⃣3️⃣ அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.


2️⃣4️⃣ தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்கஇழிவானது

Reading Time:
மனதை தொட்ட சில வரிகள்..........!!!!!
October 04, 20210 Comments


 


கதையும் 

படிப்பினையும்..........!!!!!


கணவன் : 

அஸர் தொழுதீர்களா...?


மனைவி :

........இல்லை....


கணவன் : 

அஸர் தொழுதீர்களா...?


மனைவி : 

.......இல்லை......


கணவன் : ஏன்?


மனைவி : 

வேலைகள் முடியும் போது 

மிகவும் களைப்பாக இருந்தது,

எனவே சிறிது தூங்கினேன்....!


கணவன் : 

.......ம்ம்ம் நல்லது.....

இஷாவுக்கு அதான் சொல்ல 

முதல் தற்போது போய் அஸரை.... தொழுதுவிட்டு மஃரிபையும், தொழுங்கள்....!


அடுத்த நாள்....................!!!!


கணவர்.... 

அவரது வேலை நிமித்தம் 

ஒரு பயணத்தை மேற்கொண்டார்....


ஆனால் ...அன்று அவர் வழமைக்கு மாற்றமாக"தான் எந்த பிரச்சினையும் இன்றி பாதுகாப்பாக சென்றடைந்தேன்" 


என்பதை... தொலைபேசியினுடாகதொடர்பு கொண்டோ அல்லது ஒரு குறுந்தகவலினூடிகவோ (sms) மனைவிக்கு அறிவிக்கவில்லை...!


மனைவி l....

தன் கணவன் பாதுகாப்பாக சென்றடைந்தாரா...?


என்பதை... 

அறிந்து கொள்ள தொலைபேசியினூடாக

அவரை தொடர்பு கொண்டாள்....!


ஆனால்...

அவர் பதிலளிக்கவில்லை......


மீண்டும் மீண்டும் 

அழைப்பை ஏற்படுத்தினால்.....


தொலைபேசி மணி ஒழிக்கிறது.........

ஆனால் 

மறுமுனையிலிருந்து பதில் எதுவுமில்லை.....


அவளது மனம் தடுமாறத்தொடங்கியது........


இது வழமைக்கு 

முற்றிலும் மாற்றமானது........


அவள் மீண்டும் மீண்டும் 

அழைப்பை ஏற்படுத்தினாள்.......


ஆனால் 

மறுமுனையிலிருந்து பதில் எதுவுமில்லை.......


பல நிமிடங்கள் கழித்து 

இறுதியாக அவன் அவளைத்...

தொடர்பு கொண்டான்.....


அவள் அவ்வழைப்புக்கு 

பதற்றத்துடன் பதிலளித்தாள்.......


மனைவி : நீங்கள்... 

பாதுகாப்பாக சென்றடைந்தீர்களா...?


கணவன் : ஆமாம்...... அல்ஹம்துலில்லாஹ்........


மனைவி : எப்போது?

கணவன் : கிட்ட தட்ட நான்கு மாணித்தியாலயங்களுக்கு முன்பு...


மனைவி : (கோபத்துடன்)நான்கு மாணித்தியாலயங்களுக்கு முன்னரா?.......


ஏன் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை...?.......


கணவன் : வந்து சேரும் போது 

மிகவும் களைப்பாக இருந்தது...

எனவே சிறிது தூங்கினேன்.....


மனைவி : என்னுடன் 

சிறிது கதைத்திருந்தால்

உங்களுக்கு என்னவாகப் போகிறது?...


நான் உங்களுடன் தொடர்பு கொண்ட போதாவது தொலைபேசியினுடைய

மணி ஓசையைக்கேட்கவில்லையா..?.


கணவன் : கேட்டேன்....


மனைவி : பின்னர் ஏன் பதிலளிக்கவில்லை...?....


நீங்கள் என் விடயத்தில் பொடுபோக்காய் இருந்துள்ளீர்கள்...


கணவன் : ஆமாம்......


ஆனால் 

நேற்று நீயும் இவ்வாறு தானே... 


#அதானுடைய ஓசையைக்கேட்டும் பொடுபோக்காய் இருந்தாய்?...... 


#அதான்....... 

அது அல்லாஹ்வினுடைய அழைப்பு.....


அவள் பதிலளிக்கவில்லை..... அமைதிகாத்தாள்..........


மனைவி : (சிறிது மௌனத்திற்குப் பின் கண்ணீருடன்.....)


ஆம்.... 

நீங்கள் உண்மையைத் தான் கூறுகிறீர்கள்.....

அதை நினைத்து நான் கவலைப்படுகிறேன்.....


கணவன் : அதற்கு என்னால் 

ஒன்றும் செய்ய முடியாது.....


அதற்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்.....


ஆனால்..........

மறுபடியும் இவ்வாறு செய்யாதீர்கள்....


"நான் விரும்புவது....

அல்லாஹ்விடம் கேட்பதெல்லாம்....... 


அல்லாஹ் என்னையும் உங்களையும் சுவனத்தின் ஒரு மாளிகையில் ஒன்று சேர்க்க வேண்டும்......


அங்கு நிரந்தரமான ஒரு வாழ்வை நாம் ஆரம்பிக்க வேண்டும்... 


என்பதே......


"அன்றிலிருந்து அவள் 

கடமையான எந்த அமலையும்.... பிற்போடுவதில்லை....!


"உங்களை உண்மையாக 

நேசிக்கக் கூடிய ஒருவர் எப்போதும்...

அல்லாஹ்வினுடைய பாதையில், நீங்கள் முன் நோக்கிச் செல்ல... உங்களை தூண்டிக் கொண்டே, இருப்பதுடன்.....!!!


உங்கள் பாதையில் நின்று நீங்கள் பின் நோக்கி வராது உங்களை தடுத்துக் கொண்டே இருப்பார்.......!!


==================================

மனதைத் தொட்ட வரிகள்....!!!!!!!!!!!

Reading Time:
அறிவுக்கு விருந்து
October 04, 20210 Comments

2021 October 04

🔰வெப்ப மண்டலத்தின் சராசரி வெப்பநிலை 

1500°c


🔰வாயுக் குழப்பங்கள் எதுவும் நிகழாத வளிமண்டலப் படை

படை மண்டலம் 


🔰வானிலுள்ள முகில் படையை விபரிக்க பயன்படும் அளவீடு

ஒக்ராஸ்


🔰Yellowstone  எனும் பூங்கா அமைந்துள்ள இடம் 

ஐக்கிய அமெரிக்காவின் வையோமின் மாநிலம் 


🔰இலங்கையின் உமாஓயா  நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி உதவி வழங்கும் நாடு

ஈரான் 


🔰இலங்கையில் திவிநெகும திணைக்களம் தொடங்கப்பட்ட ஆண்டு

2014


🔰 இலங்கையானது இந்து சமுத்திர டியூனா ஆணைக்குழுவில் இணைந்த ஆண்டு 

1994 


🔰சர்வதேச கால்வாய் என அழைக்கப்படும் கால்வாய் 

பனாமா கால்வாய் 


🔰ஆயிரம் ஏரிகளின் நாடு என அழைக்கப்படும் நாடு 

பின்லாந்து 


🔰காற்று மின்சார சக்தி உற்பத்தியில் தென்னாசியாவில் முதலாவது நாடு 

இந்தியா 


Done By: *Alawdheen Ubaidhullah* 🖊️🖊️


Reading Time:
 வரலாற்றில் இன்று October  04
October 04, 20210 Comments
 I...
M..W....

.......................................

 இந்த நாளில் என்ன நடந்தது – October 04 


October  4  கிரிகோரியன் ஆண்டின் 277 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 278 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 88 நாட்கள் உள்ளன.


👉23 – சீனத் தலைநகர் சாங்கான் நகரை கிளர்ச்சிவாதிகள் கைப்பற்றி சூறையாடினர். இரண்டு நாட்களின் பின்னர் சீனப் பேரரசர் வாங் மாங் கொல்லப்பட்டார்.


👉 1227 – மொரோக்கோ கலீபா அப்தல்லா அல்-அடில் படுகொலை செய்யப்பட்டார்.


👉1302 – பைசாந்திய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது.


👉1511 – பிரான்சுக்கு எதிராக அரகொன், திருத்தந்தை நாடுகள், வெனிசு ஆகியன இணைந்து புனித முன்னணியை உருவாக்கின.


👉1537 – மெத்தியூ விவிலியம் எனப்படும் முதலாவது முழுமையான ஆங்கில விவிலிய நூல் அச்சிடப்பட்டது.


👉1582 – கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக அக்டோபர் 15 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.


👉1636 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் இராணுவம் புனித உரோமைப் பேரரசு, சாக்சனி இராணுவத்தை விட்சுடொக் சமரில் தோற்கடித்தது.


👉1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிலடெல்பியாவின் ஜெர்மண்டவுன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஜார்ஜ் வாசிங்டனின் படைகளை வில்லியம் ரோவின் பிரித்தானியப் படைகள் தோற்கடித்தன.


👉1824 – மெக்சிகோ குடியரசு ஆகியது.


👉1830 – பெல்ஜியம் நெதர்லாந்து நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாகியது.


👉1853 – கிரிமியப் போர்: உதுமானியப் பேரரசு உருசியா மீது போர் தொடுத்தது.


👉1883 – ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் விரைவுத் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.


👉1918 – அமெரிக்காவில் நியூ செர்சியில் ஷெல் கம்பனியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.


👉1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா சொலமன் தீவுகளைக் கைப்பற்றியது.


👉1957 – பண்டா – செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக சிங்கள இனவாதிகள் கண்டிக்கு நடைப்பயணம் நடத்தினர்.


👉1957 – புவியைச் சுற்றி வந்த முதலாவது செயற்கைக்கோள் என்ற சாதனையை சோவியத் ஒன்றியத்தின் இசுப்புட்னிக் 1 ஏற்படுத்தியது.


👉1959 – லூனா 3 விண்ணுக்கு ஏவப்பட்டது. இது சந்திரனைச் சுற்றி வந்து அதன் தொலைவுப் படத்தை பூமிக்கு அனுப்பியது.


👉1960 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் விமானம் ஒன்று பறவையினால் தாக்கப்பட்டதை அடுத்து வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 72 பேரில் 62 பேர் உயிரிழந்தனர்.


👉1963 – கியூபா, எயிட்டி ஆகிய நாடுகளைத் சூறாவளி புளோரா தாக்கியதில் 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.


👉1966 – பசூட்டோலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று லெசோத்தோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.


👉1985 – கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை நிறுவப்பட்டது.


👉1992 – மொசாம்பிக்கின் 16 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.


👉1992 – ஆம்ஸ்டர்டாம் நகரில் குடியிருப்பு மனைகள் மீது விமானம் ஒன்று மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.


👉1993 – உருசியத் தலைவர் போரிசு யெல்ட்சினுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தாங்கிகள் நாடாளுமன்றத்தின் மீது குண்டுகளை வீசின.


👉1997 – ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரிய வங்கிக் கொள்ளை வட கரொலைனாவில் இடம்பெற்றது. 17.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இவற்றில் 95 விழுக்காடு பணம் திரும்பப் பெறப்பட்டது.


👉2001 – சைபீரியாவில் விமானம் ஒன்றை உக்ரைனின் ஏவுகணை தாக்கியதில் விமானம் கருங் கடலில் வீழ்ந்து 78 பேர் உயிரிழந்தனர்.


👉2003 – இசுரேலில் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.


👉2006 – விக்கிலீக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது.


இன்றைய தின பிறப்புகள்.


👉1542 – ராபர்ட் பெல்லார்மின், இத்தாலியப் புனிதர் (இ. 1621)


👉1840 – விக்தர் நோர், செருமானிய-உருசிய வானியலாளர் (இ. 1919)


👉1884 – சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், எழுத்தாளர் (இ. 1925)


👉1895 – பஸ்டர் கீடன், அமெரிக்கத் திரைப்பட நடிகர். இயக்குநர் (இ. 1966)


👉1904 – திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (இ. 1932)


👉1911 – ஏ. எம். ஏ. அசீஸ், இலங்கை கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1973)


👉1916 – வித்தாலி கீன்ஸ்புர்க், நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (இ. 2009)


👉1923 – சார்ள்டன் ஹெஸ்டன், அமெரிக்க நடிகர் (இ. 2008)


👉1926 – வி. மாணிக்கவாசகம், மலேசிய அரசியல்வாதி


👉1926 – அப்துல் சமது, தமிழக அரசியல்வாதி (இ. 1999)


👉1928 – ஆல்வின் டாப்லர், செருமானிய-அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2016)


👉1930 – அனிருத் லால் நகர், இந்தியப் பொருளியலாளர் (இ. 2014)


👉1931 – பேசில் ட’ஒலிவேரா, தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர், (இ. 2011)


👉1936 – கிறிஸ்தோபர் அலெக்சாண்டர், ஆத்திரியக் கட்டடக் கலைஞர்


👉1938 – குர்த் வியூத்ரிச், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து வேதியியலாளர்


👉1941 – மணிசங்கர் அய்யர், இந்திய அரசியல்வாதி


👉1942 – ரி. ராஜகோபால், இலங்கையின் மேடை, வானொலி நடிகர்


👉1975 – சங்கவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை


👉1989 – டகோட்டா ஜோன்சன், அமெரிக்க நடிகை


 இன்றைய தின இறப்புகள்.


👉1226 – அசிசியின் பிரான்சிசு (பி. 1182)


👉1582 – அவிலாவின் புனித தெரேசா, எசுப்பானியப் புனிதர் (பி. 1515)


👉1669 – ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (பி. 1606)


👉1904 – பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி, விடுதலைச் சிலையை வடிவமைத்த பிரான்சியச் சிற்பி (பி. 1834)


👉1904 – கார்ல் பேயர், ஆத்திரிய வேதியியலாளர் (பி. 1847)


👉1947 – மேக்ஸ் பிளாங்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1858)


👉1972 – சேனரத் பரணவிதான, இலங்கை தொல்லியலாளர், கல்வெட்டியலாளர் (பி. 1896)


👉1982 – கோபால் சுவரூப் பதக், இந்தியாவின் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் (பி. 1896)


👉1986 – சரளாதேவி, இந்திய சுதந்திர இயக்க செயற்பாட்டாளர், பெண்ணியவாதி, எழுத்தாளர் (பி. 1904)


👉1992 – எர்பர்ட் தம்பையா, இலங்கை நீதிபதி (பி. 1926)


👉1998 – சாலை இளந்திரையன், தமிழகத் தமிழறிஞர், திறனாய்வாளர், சொற்பொழிவாளர், அரசியற் செயற்பாட்டாளர், தமிழ்த் தேசியவாதி (பி. 1930)


👉2009 – பசவ பிரேமானந்த், கேரளப் பகுத்தறிவாளர் (பி. 1930)


👉2011 – ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்க கணினி அறிவியலாளர், உணரறிவியல் அறிஞர் (பி. 1927)


👉2013 – வோ இங்குயென் கியாப், வியட்நாமிய இராணுவத் தளபதி, அரசியல்வாதி (பி. 1911)


இன்றைய தின சிறப்பு நாள்.


👉விடுதலை நாள் (லெசோத்தோ, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966)


👉உலக விலங்கு நாள்.


👉உலக விண்வெளி வாரம் ஆரம்பம்

Reading Time:

Sunday, October 3, 2021

😔😔😔சிருக்கதை😔😔😔
October 03, 20210 Comments

MAU WORLD


 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

மனைவி இறந்த பிறகு மறுமணம் செய்து கொண்ட தந்தை மகனிடம் கேட்டார்...

இப்போ இருக்கிற புதிய அம்மாவை உனக்கு பிடித்திருக்கிறதா...


அப்போது மகன் சொன்னான்.

என் அம்மா என்னிடம் பொய் சொல்வார்...

ஆனாலும் இப்போ புதிதாக வந்திருக்கிற அம்மா என்னிடம் பொய் சொல்லவில்லை என்றான்.


இதைக் கேட்ட தந்தை உன் அம்மா சொன்ன பொய் என்ன? என்று கேட்டார்.


அதற்கு அவன் நான் ஏதாவது சேட்டைப் பண்ணினால் உனக்கு இன்று சாப்பாடு கிடையாது என்று சொல்லிவிட்டு எனக்குப் பசி எடுத்தவுடன் என்னைத் தூக்கி மடியில் உட்கார வைத்து பாசத்துடன் ஒவ்வொரு உருண்டையாக ஊட்டி விடுவார்.


ஆனால் தற்போது உள்ள அம்மா நான் சேட்டை பண்ணின போது என்னை அடித்து உனக்கு சோறு கிடையாது என்று சொன்ன வார்த்தையை இரண்டு நாட்களாக காப்பாற்றிக் கொண்டுள்ளார் என்றான்.


அவன் சொன்ன வார்த்தையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட அப்பா அவனை உடனடியாக தூக்கி ஓட்டலுக்கு கொண்டுபோய் உணவு வாங்கி கொடுக்கிறார் கண்ணீருடன்.


"அம்மா மட்டுமே அம்மாவுக்கு சமம்"

பூமியில் கண்களால் காணும் வரம் அம்மா.


 🛑 *படித்ததில் பிடித்தது* 🛑

Reading Time:
திங்கட்கிழமை முதல் விசேட கண்காணிப்பு!
October 03, 20210 Comments

2021 October 03

வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து தொடர்பில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி செயற்படும் பஸ்கள் தொடர்பில் விசேட கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் போது ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்வதோடு , பஸ் அனுமதி பத்திரங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மேல் மாகாணத்தில் சுமார் 6000 பஸ்கள் முன்னர் சேவையில் ஈடுபட்டன. எனினும் கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 900 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டன. ஏனெனில் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் அந்த தொழில்களைக் கைவிட்டு வேறு தொழில்களுக்குச் சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


அத்துடன் எந்த காரணத்திற்காகவும் சுகாதார விதிமுறைகளை மீறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும், பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

Reading Time:
கவலையான ஒரு சம்பவம் "" சிந்தனைக்காக..
October 03, 20210 Comments

I...M..W....


💞💞💞💞💞💞💞💞💞💞

🔴 ஒரு மனிதன் அழுது கொண்டிருந்தான். ! ! ! 


🔴 ஒருவர் அவரிடம் வந்து காரணம் கேட்டார்..


🔴 அதற்கு அவன் , எனக்கு ஒரு மகன் இருக்கிறான், 


நான் அவனை படிக்க வைத்தேன், அவனை சிறந்த மனிதனாக்கும் நோக்கத்துடன்...


அவனை பல்வேறு இடங்களில் படிக்கவைத்தேன்.


🔴 மெட்ரிக் , இன்டர் , பீ ஏ , எம் ஏ...


அத்தோடு அவனை வெளிநாட்டுக்கும் மேல் படிப்புக்காக அனுப்பினேன்,


🔴 ஆயினும் ?


திடீரென அவன் சுகயீனமுற்றான் , வைத்தியர்களும் அவன் மரண தருவாயில் இருக்கிறான் எங்களாலும் ஒன்றும் செய்ய முடியாது , அவன் அவனது இருதி நாளை அடைகின்றான் என்றனர்...


🔴மகன் சொன்னான் ,


 தந்தையே ! நான் படித்து பெற்ற சான்றிதழ்களை கொண்டு வாருங்கள் என்றான்..,


நான் கொண்டு வந்ததும் அவன் சொன்னான், இவை எல்லாம் நான் பெற்ற பக்கங்கள் , இருந்தாலும் நீங்கள் எனக்கு குர்ஆனை கற்பிக்க வில்லை..,


🔴 ஆகவே நான் எனது இறைவனை எவ்வாறு சந்திப்பது. ,


இதனை யாரும் பகிர மாட்டோம் காரணம் இது ஒரு சுவாரஸ்யமான நகைச்சுவை இல்லை,


உங்களுக்கு இஷ்டம் இருந்தால் இதனை பகிரவும்....


தயவு செய்து எந்த மாற்றமும் இல்லாமல் பகிரவும்..


பகிரும் முன் இதனை வாசிக்கவும்--ஜஸாகல்லாஹ்.,


📌உடனே எழுந்திருங்கள் பாங்கு அழைப்பு கேட்டதும்; உங்கள் மொபைலின் அழைப்பு கேட்டதும் எழுவதைப் போல


📌குர்ஆனை கவனமாக வாசிக்கவும் உங்களுக்கு வந்த மெஸேஜை வாசிப்பதை போல..


அல்லாஹ்வை மரணத்தை அஞ்சுவதைப்போல அஞ்சுங்கள்...


 மரணத்தை நினைவு கூறுங்கள் உங்கள் பெயர்களை நினைவு கூறுவதைப்போல


🌷ஒவ்வொரு நேர தொழுகைக்கும் எவ்வளவு நேரம் தான் பிடிக்கும்


பஜர்          4/6 நிமிடங்கள்

லுஹர்.     6/8 நிமிடங்கள்

அஸர்        6/8 நிமிடங்கள்

மஹ்ரிப்.   5/7 நிமிடங்கள்

இஷா     7/10 நிமிடங்கள்


🔴 மொத்தம் 28/39

நிமிடங்கள் 24 மணித்தியாலங்களில் செலவாகிறது


🌺நாங்கள் சிந்திப்போம்  அல்லாஹ்வுக்காக எங்களிடம் நேரம் உள்ளதா?...


🔴80% ஆனவர்கள் இதனை பகிரமாட்டார்கள் ! ! !

💞💞💞💞💞💞💞💞💞💞

Reading Time:
நெருக்கடியான நேரங்களைக் கையாள்வது எப்படி?
October 03, 20210 Comments

I...M..W....


இன்றைய உளவியல் குறிப்பு

நம் வாழ்க்கைப் பயணம் என்பது அடைய வேண்டிய இலக்குகளுக்கானது மட்டுமே அல்ல. நம்முடைய அறிவு, கல்வி, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நாம் சந்தித்த மக்களிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கியது. இந்தப்பயணத்தின் வழியில் ஒருவேளை எதிர்பாராத குறுக்கீடுகள் வரலாம். 


தீர்க்க முடியாதது போல தோன்றும் சிக்கல்கள் வரலாம். இந்த பிரச்னைகள் பொருளாதாரம், உறவுச்சிக்கல், உங்கள் உடல்நலம் என வேறு எதுவாகவும் இருக்கக்கூடும். இவற்றைச் சமாளிக்க தயாராகாமல் இருந்தால் நம்மை புரட்டிப்போட்டு செய்வதறியாது அப்படியே நிலைகுலைந்து நின்றுவிடுவீர்கள். இவற்றைக் கையாளக் கற்றுக் கொள்ள Crisis management பற்றி புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் உளவியலாளர்கள். அதுபோல், ஆபத்தைச் சந்திக்க உதவும் வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம்.


பிரச்னையின் தன்மை அறிதல்இழப்புகளையும், நெருக்கடிகளையும் சமாளிக்கும் விதத்தில் நாம் ஒவ்வொருவரும் வித்தியாசப்படுகிறோம். இழப்பை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்பதைப் பொருத்து, நீங்கள் யார் எனவும், எவ்வாறு மாறப்போகிறீர்கள் என்பதையும் தீர்மானிக்கிறீர்கள். சில நேரங்களில் பிரச்னையை கையாள்வது மிக எளிதானதாகவோ அல்லது நெருக்கடியானதாகவோ இருக்கலாம். 


நோய்கள், பொருளாதார நெருக்கடி, உறவுச்சிக்கல் இப்படி நாம் அடிக்கடி சந்திக்கக்கூடிய பிரச்னைகளை எடுத்துக் கொண்டால் அடிப்படையில் நம்முடைய பணி சார்ந்தவைகளாகவே இருக்கின்றன. இவற்றை எதிர்கொள்ள தேவை, சுய பராமரிப்பு பயிற்சிகள் மற்றும் வாழ்க்கை மேலாண்மை. அதற்கு, உங்கள் நேரத்தை, உங்கள் வேலையை, உங்கள் வாழ்க்கையை  நிர்வகிக்க வேண்டும். அதைக் கற்றுக் கொண்டால், நிச்சயம் எந்த மாதிரியான பிரச்னையையும் எதிர்கொள்ளத் தயாராகிவிடுவீர்கள்.


👉பயனில்லாதவற்றை செய்யாதே...


பலர் இதை புரிந்து கொள்வதில்லை. சுயநலம் என்று நினைக்கிறார்கள். அலுவலகத்திலோ, மற்ற இடத்திலோ ஒருவர் கொடுக்கும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. 


உங்களது நேரத்தை எடுத்துக்கொள்ளும் அல்லது உங்களது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வேலையாக இருக்குமானால், கண்டிப்பாக அதற்கு ‘நோ’ சொல்ல பழகிக் கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் ‘யெஸ்’ சொல்லாதீர்கள். அது சுயநலமாக இருக்காது, பதிலாக உங்கள்மீது கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கையை நிர்வகிக்க உதவும்.


👉நேர நிர்வாகம்


நேரத்தை நிர்வகிக்க முதலில் ஒவ்வொரு வேலைக்கும் கால அட்டவணை வகுத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து தவறாதீர்கள். குறைந்தபட்சம் அடிப்படை நேர ஒழுக்கத்தை பின்பற்றினாலே எதிர்பாராமல் ஏற்படும் சில நேர நெருக்கடிகளை சமாளிக்க முடியும். அலுவலக வேலை, தூங்குவது, டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது அல்லது ஃபேஸ்புக், டிவிட்டர் எதுவாக இருந்தாலும் அதற்காக நடுநிலையாக நேரத்தை செலவழிக்க முயற்சி செய்யுங்கள். 


👉வேலையை பகிர்தல்


வீட்டிலோ, அலுவலகத்திலோ எல்லா வேலைகளையும் நீங்களே செய்தால்தான் சரியாகச் செய்ய முடியும் என்று தவறாக கணக்குப் போடாதீர்கள். முக்கியமான, உங்கள் நேரடி கண்காணிப்பு தேவைப்படும் வேலையென்றால் நீங்களே செய்யலாம். சாதாரண வேலைகளை மற்றவர்களை செய்ய வைப்பதன் மூலம் அவர்களுக்கும் பயிற்சி அளிப்பது போல் இருக்கும், அதேவேளை உங்களது வேலையையும் குறைத்துக் கொள்ளலாம். 

இதனால் தேவையில்லாத மன அழுத்தத்தை தவிர்க்க முடியும். 


👉இடைவெளி


கடுமையான வேலைப்பளு இருக்கும்போது, சிறிது இடைவெளி கொடுத்து வெளியே சென்று வரலாம். மிகப்பெரிய புராஜெக்ட் ஒன்றை முடித்திருப்பீர்களானால் சின்னதாக ஒரு ட்ரிப் அடிக்கலாம். பணியிலிருந்து இடைவெளி பெறுவது குழம்பிப்போன உங்கள் மூளையை தெளிவாக்கவும், நெருக்கடிக்கு நடுவில் உங்கள் ஆற்றலை புதுப்பிக்கவும் உதவியாக இருக்கும்.


👉வெளிப்படைப் பேச்சு


நெருக்கடியான நேரங்களில் குடும்பத்தினரையும், நண்பர்களையும் சார்ந்திருக்க வேண்டும். அவர்களிடம் வெளிப்படையாகப் பேசி, கருத்துக்களை கேட்டறிவதும் அவசியம். உங்கள் குடும்பத்தாரும் பாதிக்கப்படுபவர்களாக இருந்தால், அவர்களுடனான உரையாடல், பிரச்னையிலிருந்து வெளிவருவதற்கான வழிகளை கண்டறிவதற்கும், பிரச்னையின் தீவிரத்தை குறைப்பதற்கும் உதவும்.


👉கனிவாக இருங்கள்


பிரச்னை உங்களுக்கோ, உங்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கோ இருக்கலாம் என்பதால் உங்களை நேசிக்கிறவர்களையும், நீங்கள் நேசிக்கிறவர்களையும் மறக்காதீர்கள். இந்த நேரத்தில் அவர்களிடம் மிகுந்த கனிவோடு நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்காக செய்யும் சின்னச்சின்ன செயல்களும் அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கலாம். உங்கள் வேலைப்பளுவில் அவர்களை புறக்கணித்துவிடாதீர்கள்.


👉நிலைமையை ஏற்றுக் கொள்ளுங்கள்


நமக்கு ஒரு நிகழ்வு ஏற்படுகிறதென்றால், கண்டிப்பாக இருக்காது என்று முதலில் அதை மறுப்போம். அதனால் கோபம் வரும்; அதைப்பற்றி விவாதம் செய்வோம். அதற்காக வருந்தி மன அழுத்தம் உண்டாகும். இறுதியில் அதுதான் உண்மை என்று ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். கோபப்பட்டு, அழுது, அங்கே நின்று கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.


👉தீய பழக்கங்களுக்கு அடிமையாக வேண்டாமே...


ஒரு இழப்பை எதிர்கொள்ளும்போது அதிலிருந்து தப்பிப்பதற்காக கெட்ட பழக்கங்களுக்கு தூண்டப்படுவீர்கள். அவை தற்காலிக சந்தோஷத்தைக் கொடுத்தாலும் நிரந்த அடிமையாகி, பின்னர் அதுவே வாழ்நாள்  போராட்டமாகிவிடும். உணர்ச்சியாக இருக்கும் இந்தத் தருணத்தில், கெட்ட பழக்கங்கள் கொண்ட நண்பர்களுடனான நட்பைத் தவிர்த்துவிடுங்கள். வேடிக்கைக்காகக்கூட போதைப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.


👉ஆரோக்கியம் அவசியம்


சோகமாக இருக்கிறோம் என்பதற்காக சரியான நேரத்தில் சாப்பிடாமல், உறங்காமல் உடலை கெடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் கவனத்தை திசை திரும்ப ஏதேனும் உடற்பயிற்சி அல்லது யோகா வகுப்புகளில் சேரலாம். மன ஆரோக்கியத்திற்கு சிறந்த மனநல ஆலோசகரை அணுகலாம். இன்பம், துன்பம் இரண்டையும் சமநிலையாக எடுத்துக்கொண்டு, உங்களுக்கான இந்த வாழ்க்கையை, முடிந்தவரை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம். அதற்கான எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு.

❁ ════ ❃•  *IMW*  •❃ ════ ❁

Reading Time:
மகிழ்ச்சி வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு உணர்வு. அதை தூண்டிவிட உங்களுக்கு சில பொன்மொழிகள் தேவைப்படலாம். அதற்கான தீர்வாக இது இருக்கட்டும்...!
October 03, 20210 Comments

I...M..W....



=========================


🌺“எந்த ஒரு கடினமான சூழலையும் நினைவில் கொள்ளாத கலை தான் மகிழ்ச்சி” – unknown. 


🌺 "ஒரு மணி நேரம் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் – உறங்குங்கள் 


நீங்கள் ஒரு நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் – மீன் பிடிக்க செல்லுங்கள் 


நீங்கள் ஒரு வருடம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் – அதிர்ஷ்டத்தை நம்புங்கள் 


நீங்கள் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் – மற்றவர்களுக்கு உதவுங்கள் ”- Chinese Proverb 


🌺  நீங்கள் யார்?.. நீங்கள் என்ன செய்கிறீர்கள்… நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? என்பதில் உங்கள் மகிழ்ச்சி இல்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதில் தான் உங்கள் மகிழ்ச்சி உள்ளது_ Dale Carnegie. 


🌺 மகிழ்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான், அதாவது உங்கள் சக்திக்கு மிகுந்ததை பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள்” – Epictetus 


🌺 நம்மிடம் இல்லாத ஒன்றை பற்றி கவலைப்படுவதில் அர்த்தமில்லை. காரணம் நம்மிடம் இருக்கும் ஒன்றுக்கு தான் அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும் – Frederick Keonig 


🌺 சிலவேளைகளில் மகிழ்ச்சி உங்கள் புன்னகையில் இருந்து தோன்றலாம்… சில வேளைகளில் உங்கள் புன்னகை உங்கள் மகிழ்ச்சியில் இருந்து தோன்றலாம் – Thich Nhat Hanh 


🌺 தீங்கு ஏற்படுவதை விட எச்சரிக்கையில் தான் பல விஷயங்கள் அடங்கியுள்ளது. காரணம் எதார்த்தத்தை விட பயத்தில் தான் நாம் அதிகம் பாதிக்கப்படுகிறோம் – Seneca 


🌺மகிழ்ச்சியானவர்கள் செயல்களையே திட்டமிடுகின்றனர், முடிவுகளை அல்ல! – Dennis Waitley 


🌺 உலகின் தலைசிறந்த மகிழ்ச்சி “ஒன்றை தொடங்குவது” –Cesare Pavese 


🌺உனக்கு ஒன்று எங்கோ உண்டு...

அதைக்கண்டு கொண்டால் நீதான் உலகம்...-ஏன்

உலகிற்கே நீதான்... 


சோக வாழ்வை தூக்கிப்போடு

சுதந்திர வழியில் உனை நீ தேடு...

நீ வாழ்வை ஏற்றால் வரலாறு உன்னை ஏற்கும்...

காத்திருந்து போராடு...

உன் நன்பனாக நான் உன்னோடு... 


A UBAIDULLAH ............

Reading Time:
அழிவின் விளிம்பில் புதிய தலைமுறையினர்
October 03, 20210 Comments

அழிவின் விளிம்பில் புதிய தலைமுறையினர்.


அழிவின் விளிம்பில் இருந்தது அன்புச் செல்வங்களை காப்பாற்றுங்கள்

போதை வஸ்துக்கள், அபாயகரமான போதை வஸ்துக்கள் இளம் தலை முறையினரை காவு கொள்ளும் பிரதான சவாலாக மாறி வருகின்றது.

இன்று இலங்கையில் தினமும் 45 கோடி ரூபாய்கள் போதைபொருள் பாவனைக்காக செலவிடப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.


அபாயகரமான போதை வஸ்துகள் குறுகிய காலத்தில் அதிக இலாபம் தருவதால் அதில் அதிகாரம் செல்வாக்கு உடைய பாதாள உலக வலையமைப்பு அதிதீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


இன்று பாடசாலைகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன, மிகவும் சிறந்த வினியோக மார்கமாக அவை பார்க்கப்படுகின்றன, வழமையான ஹிரோயின், கொகொயின் ஐஸ் போதை வஸ்துக்களுடன் டொஃபி, ச்விங்கம், இனிப்பு பானங்கள், வில்லைகள் என பலவேறு வடிவங்களில் போதை வஸ்துக்கள் சூட்சுமமாக சந்தைப்படுத்தப்பட்டு ஆண் பெண் பால் வேறுபாடின்றி பிள்ளைகள் போதைகளின் அடிமைகள் ஆக்கப்படுகின்றனர்


*வீட்டு சூழல் பாதுகாப்பானது என்று மட்டும் இருந்து விடாதீர்கள், வெளியுலகம்  மேலதிக வகுப்புக்கள் ஏன் பாடசாலை வளாகங்கள் கூட உங்கள் பிள்ளையை காவு கொள்ளலாம், அவர்களுடன் நெருக்கமாக இருங்கள், அவர்களுக்கு அன்பாக ஆபத்துக்களை எடுத்துச் சொல்லுங்கள், அவர்களது நடத்தைகளில் அவதானமாக இருங்கள்.*


அவர்களது பாடசாலை நட்புக்கள்  புதிய சமூக வலைதள நட்புக்கள் குறித்த அவதானம் தேவை, போதை வஸ்துகளுடன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் இளம் சிறார்கள் பதின்ம வயதினர் ஆளாகின்றனர்.


எவ்வாறு உலகில் ஆயுத உற்பத்தியாளர்கள் இன மத மொழி வேற்றுமைகளில் முதலீடு செய்கிறார்களோ அதே போன்றே போதை வஸ்து உற்பத்தியாளர்களும் ஒரு சமூகத்தின் இளம் மற்றும் மாணவ சமூகத்தை இலக்கு வைத்து அழிப்பதற்கு போதை வஸ்துக்களை ஆயுதமாக பயன்படுத்த இன மத வெறியர்களை தூண்டுகிறார்கள்.


*சமூக ஊடகங்கள், இன்டர்நெட்  விளையாட்டுக்கள் மற்றுமொரு வகையான போதையை, மதிமயக்கத்தை இளம் தலைமுறையினர் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன.*


ஆன்மீக நம்பிக்கைகள் குன்றிய பொருளாதாரப் பிராணியாக ஒரு சமூகம் மாறுவது குறித்து கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டது.


இப்பொழுது ஆன்மீக நம்பிக்கைகள் அற்ற பொருளாதாரமும் அற்ற சைபர் உலகில் மதிமயங்கி சஞ்சாரம் செய்யும் ஒரு தலை முறை உருவாகி வருகிறது.


அதேபோன்றே சகலவிதமான சன்மார்க்க குடும்ப சமூக கட்டுக் கோப்புகளையும் தகர்த்தெறியும் ஒரு (தறுதலை)  தலை முறை உருவாகி வருகிறது.


போதை வஸ்துக்கள், அபாயகரமான போதை வஸ்துக்கள் புதிய சந்ததியினரை இலக்கு வைத்து காவு கொண்டு வருகிறது.


இறையச்சம் தக்வா உடையவர்களுக்கு மாத்திரமே இஸ்லாம் மேற்படி அபாயகரமான தீங்குகளில் இருந்து அபயம் அளிக்கிறது.


இறையச்சம் ஒன்றே அழிவின் விளிம்பில் இருந்து எமது குழந்தைச் செல்வங்களை சந்ததிகளை பாது காத்திட முடியும்.


மது மற்றும் போதை வஸ்து பாவனைகளில் இருந்து சமூகத்தை காப்பது ஒவ்வொரு உறுப்பினரினதும் கடமையாகும்.


*யுகத்தின் புதிய நூதனமான சவால்களுக்கு முகம் கொடுக்கும் மத்திய நிலையங்களாக மஸ்ஜிதுகள் மாறுதல் வேண்டும், மிம்பர் மேடைகள் வலுவூட்டப்படல் வேண்டும், பாடசாலைகள் உளவள ஆலோசனைகளுடன் பதின்ம வயதினரை வழி நடாத்த வேண்டும்.*


எனது வீடும், விட்டுச் சூழலும் மாசின்றி தூய்மையாக இருக்கின்றது என்பதில் திருப்திப் பட்டுக் கொள்ளாதீர்கள், மரணத்தை விளைவிக்கும் நுளம்பு அண்டை அயலவர் வீடுகளில் இருந்து உங்களை நாடி வருவது போல

எல்லா விதமான சீர்கேடுகளும் நாளை உங்கள் வீட்டிற்குள் குடி புகுந்து குடும்பம் நடத்தும்.


போதைவஸ்த்து வியாபாரிகள், வினியோகஸ்தர்கள், பாவனையாளர்கள்  சொந்த பிள்ளைகளாக உறவினர்களாக இருந்தாலும் அவர்கள் குறித்த தகவல்களை பாதுகாப்புத் துறையினருக்கு வழங்குங்கள்.


*எனது குடும்பம், எனது சமூகம் எனது இனம் என்றில்லாது நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்கின்ற பணிகளில் கூட்டுப் பொறுப்புடன் தேசத்திற்கான பங்களிப்பினைச் செய்வதில் தான் "கிலாபாத்" பணி இருக்கிறது.*

Reading Time:
 வரலாற்றில்  இன்று  October  03
October 03, 20210 Comments

I..M..W... 


இந்த நாளில் என்ன நடந்ததுOctober  03

  1. 1995 நிக்கோல் பிரவுன் சிம்ப்சன் மற்றும் ரொனால்ட் லைல் கோல்ட்மேன் ஆகியோரின் கொலைகளில் ஓ.ஜே. சிம்ப்சன் விடுவிக்கப்பட்டார்

முன்னாள் கால்பந்து வீரர் ஜூன் 13, 1994 அன்று தனது முன்னாள் மனைவியையும் அவரது நண்பரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். சிம்ப்சனின் உயர் வழக்கு மற்றும் அடுத்தடுத்த வழக்கு அமெரிக்காவிலும் உலகெங்கிலும் பரவலான ஊடகங்களையும் மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.

  1. 1952 இங்கிலாந்து தனது முதல் அணுகுண்டை சோதனை செய்கிறது

ஆபரேஷன் சூறாவளி என்று அழைக்கப்படும் இந்த சோதனை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மான்டபெல்லோ தீவுகளுக்கு அருகே நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கை இங்கிலாந்தை அணு ஆயுதங்களைக் கொண்ட மூன்றாவது நாடாக மாற்றியது, அமெரிக்காவும் சோவியத் யூனியனும் முதல் இரண்டு நாடுகளாக இருந்தன.

  1. 1932 ஈராக் ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெற்றது

முதல் உலகப் போர் முடிந்த பின்னர் 1920 ல் மேற்கு ஆசிய நாடு பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பின்னர், பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரிய மன்னர் பைசல் I ஐ ஈராக் மன்னராக ஆங்கிலேயர்கள் நிறுவினர்.

  1. 1863 தேசிய நன்றி தின பிரகடனம்

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் நவம்பர் கடைசி வியாழக்கிழமை நன்றி தினமாக அறிவித்தார். அந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் விடுமுறை கொண்டாடப்படுகிறது.

 

  1. 1849 எட்கர் ஆலன் போ கடைசியாக பொதுவில் காணப்பட்டார்

மேரிலாந்தை தளமாகக் கொண்ட அமெரிக்க கவிஞரும் எழுத்தாளருமான பால்டிமோர், தி ராவன் என்ற கவிதைக்கு மிகவும் பிரபலமானவர் தெருக்களில் நோய்வாய்ப்பட்டவராகவும், மயக்கமாகவும் காணப்பட்டார், வாஷிங்டன் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சில நாட்களுக்குப் பிறகு இறந்தார். அவர் இறக்கும் போது அவருக்கு 40 வயது.

இந்த நாளில் பிறப்புகள்October  03

  • 1984 ஆஷ்லீ சிம்ப்சன் – அமெரிக்க பாடகர்-பாடலாசிரியர், நடிகை
  • 1969 க்வென் ஸ்டெபானி – அமெரிக்க பாடகி-பாடலாசிரியர், நடிகை, ஆடை வடிவமைப்பாளர்
  • 1954 அல் ஷார்ப்டன் – அமெரிக்க மந்திரி, பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளர், ஆர்வலர்
  • 1954 ஸ்டீவி ரே வாகன் – அமெரிக்க பாடகர்-பாடலாசிரியர், கிதார் கலைஞர், தயாரிப்பாளர்
  • 1925 கோர் விடல் – அமெரிக்க எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர்

இந்த நாளில் இறப்புகள் –  October  03

  • 2005 ரோனி பார்கர் – ஆங்கில நகைச்சுவை நடிகர், நடிகர்
  • 1967 உட்டி குத்ரி – அமெரிக்க பாடகர்-பாடலாசிரியர், இசைக்கலைஞர்
  • 1931 கார்ல் நீல்சன் – டேனிஷ் வயலின் கலைஞர், இசையமைப்பாளர், நடத்துனர்
  • 1896 வில்லியம் மோரிஸ் – ஆங்கிலக் கவிஞர், வடிவமைப்பாளர்
  • 1226 அசிசியின் பிரான்சிஸ் – இத்தாலிய பிரியர், துறவி
Reading Time:

@way2themes