I...M..W....
அக்டோபர் 4, இன்று உலக விலங்குகள் தினம்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர், பிரான்சிஸ் அசிசி என்பவருடைய நினைவு நாளைக் கொண்டாடும் வகையில், உலக வன விலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. முதன்முதலாக 1931-ம் ஆண்டு, இத்தாலியின் புளோரன்ஸ் நகரில்தான் வனவிலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டது.
அதன் பின்னர், விலங்குகள் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டுவருகிறது.
இறைத் தூதுவராக போற்றப்பட்ட அசிசி, தனது வாழ்நாளில் விலங்குகள்மீது அன்புகொண்ட ஆர்வலராக விளங்கினார்.
அவற்றைக் காப்பதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்தார்.
இதன் காரணமாகவே அவரது நினைவு நாள், உலக விலங்குகள் தினமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை தன்மையைப் பொறுத்தே, ஒவ்வோர் இடத்தின் சூழலியல் மண்டலமும் இயங்குகிறது.
விலங்குகள்தான் மனிதனைப் பாதுகாத்து, மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றன.
இயற்கையும் விலங்குகளும் ஒன்றோடொன்று இணைந்த சூழல்தான், மனிதனின் வாழ்க்கையைச் சிறப்பாக வழிநடத்த முடியும்.
இப்போதைய காலகட்டத்தில், விலங்குகளுக்கு மனிதர்களாகிய நாம் தீமை செய்யாமல் இருந்தாலே போதும், விலங்குகள் தங்களைத் தங்களே பாதுகாத்துக்கொள்ளும்.
No comments:
MA UBAIDULLAH