A UBAIDULLAH: islamic news
Showing posts with label islamic news. Show all posts
Showing posts with label islamic news. Show all posts

Monday, April 28, 2025

By walking calmly Your livelihood Does not decrease...
April 28, 20250 Comments

By walking calmly Your livelihood Does not decrease...


hard work

your livelihood

Not adding up...


Pleasure does not last

Suffering doesn't last...


Prosperity does not last for you,

Misery doesn't last...


Mind enough

If you are the one who has...


You and the king who rules the world are equal...

                                                                                                                                     A Ubaidullah》

Reading Time:

Thursday, October 14, 2021

மதி கலங்கிப்போதே மங்கையே..!!
October 14, 20210 Comments

Info Mau World.com


 

மதி கலங்கிப்போகாதே மங்கையே! மட்டுப்பட்ட உலக வாழ்வை கண்டு..


மாண்புமிகு இறைவனின் ஆக்கரமிப்பில் நீ அவன் அடிமை என உணர்ந்து வாழ் மங்கையே!! .


முஸ்லிம் எனும் பெரும்பட்டம் உனக்கு தானாக கிடைத்ததால் உதாசீனப்படுத்தாதே மங்கையே!


மூ வாழ்க்கையிலும் வெற்றி பெறுவாய், முஹம்மத் நபியை பின்பற்றி வாழ்ந்தால் மங்கையே!


மெல்லிய ஆடையை அணிந்து மார்க்கத்தை இழிவுபடுத்தாதே மங்கையே!


மேன்மைமிகு மறையை தினமும் தவறாது ஓதி வா மங்கையே!


மெய்யையே உணர்த்தும் மாண்புமிகு இஸ்லாத்தை மதியாது வாழாதே மதி கலங்கிப்போய் மங்கையே!


மேதையாக இரு இஸ்லாத்தில் பார்வையில் மங்கையே!


மௌத்தை நினைத்தே வாழத்தொடங்கிடு வாழ்வே மகிழ்வாகும் மங்கையே!


 மதி கலங்கிபோகாதே மங்கையே!


மறைத்துக்கொள்ள வேண்டிய அவ்ரத்துக்களை மறைத்தல் என்ற பெயரில் மானக்கேடான ஆடையை அணியாதே மங்கையே!


மானத்தை போக்கும் ஆடையை அணிய அனுமதிக்கும் (Denim) உன் தந்தையாக இருக்கலாம் கணவனாக இருக்கலாம் மறுமை அன்று அவனுடன் பேச மறுப்பான் சர்வலோக அதிகாரி இறைவனவன்  தெரிந்துகொள்ள மங்கையே!


மறுமை ஆரம்பமாகும் போது ஆண்கள் அணியும் ஆடை மங்கையவளின் மேனியிலும் தென்படுவதும் அடையாளம் தான் என மாண்புமிகு முஹம்மத் நபி சொன்னாரல்லவா!?


மனதை தொட்டு சொல்?

சொன்னவாரே  உலகம் நடக்கிறதா? உன் மேனியிலும் அவை இருக்கிறதா? மறுமை வாழ்வை நினைத்தே ஆடையையும் அணி மங்கையே!


மேன்மை மிகு இஸ்லாம் எனும் மார்க்கத்தில் இருந்து கொண்டு டெனிம் எனும் ஆணாடையை அணிவது அந்த இறைவனுக்கே பொறுக்குமா? யோசித்தாயா மங்கையே!


மட்டுப்பட்ட வாழ்க்கையை வாழ வந்த உனக்கெதற்கு மறுமை வாழ்வை நரகமாக்கும் ஆடைகள்? சிந்தித்து செயல்படு மங்கையே!


மறை மறுக்கும் மார்க்கத்திற்கு இழிவை ஏற்படுத்தும் செயல்களை செய்து சுவனத்தை இழந்து விடாதே!! மங்கையே!


மாதாவைவிட 70 மடங்கு இரக்கம் உள்ள மனம் இறைவனவனது அவன் வழியில் நடக்காது அவவழியில் நடந்தால் உன் நிலைமை என்ன?? யோசி மங்கையே!


மறுமையை நினைக்காது மனம் போன போக்கில் உலக ஆசைக்கு அடிமையாகி விடாதே மங்கையே!


மங்கைக்கு அதிக உரிமை தந்த மாண்புமிகு இஸ்லாத்தை பாதுகாப்பது உனது உரிமை அல்லவா?


நரக நெருப்பிலிருந்து உன்னை பாதுகாப்பது உன் நல்லமல்களும் நன்னடத்தைகளுமே தவிர வேறொன்றுமில்லை!


மங்கையாக பிறந்துவிட்டோமே என்று சலித்துக்கொள்ளாதே!


ஆசைகளை அடக்கி வைக்கப்பழக்கப்படுத்து உன் அகத்தை இல்லயேல் உன்னை அடக்கம் செய்யப்படும் இடம் வேதனை தரக்கூடியதாக இருக்கும்.


மங்கையவள்  இருந்தால் உலகம் சரியாகும் என்பது வேறு மதத்திற்கு ஒப்பாகுமே தவிர இஸ்லாத்திற்கில்லை.


இஸ்லாத்தை பொறுத்தவரை மங்கையவள் சரியாக இருந்தாலே உலகமும் சரியாகும் மார்க்கமும் சரியாகும் புரிந்து நடந்து கொள் மங்கையே!


மங்கையாக பிறந்து விட்டோம் என்பது தப்பில்லை வாழும் வாழ்க்கை ஈறுலகிற்கும்  பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்!


மீண்டும் கூறுகிறேன், கவிவடித்தவளாய் இல்லை இஸ்லாத்தின் மங்கையாய்..


மதி கலங்கி போகாதே மங்கையே! உன் மதி கலங்கிவிட்டால், மதி கூட வெளிச்சம் தர தயங்கும் இறைவனின் கட்டளைப்படி..

Reading Time:

Monday, October 4, 2021

இஸ்லாமிய பெண்களே ....!!!!
October 04, 20210 Comments

╔═══❖✭᯽⊱❊🌹 ❊⊰᯽✭❖═══╗

 🌹🌹INFORMATION WORLD🌹🌹

╚═══❖✭᯽⊱❊🌹❊⊰᯽✭ ❖═══╝



 *ASSALAMU ALAIKUM....🖤


பொசுக்கு பொசுக்கென்று கோபப்பட்டு divorce கேட்டு நீதிமன்றம் செல்லும் பெண்களே இது உங்கள் கவனத்திற்கு:


ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் என்று பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது ! 


மிக கொடூர சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு விவாகரத்து தேவையே  அதில் மாற்று  கருத்து இல்லை. 


ஆனால் அன்பில் இசைந்து செல்ல வேண்டிய விஷயங்களுக்கு கூட ஈகோ பார்த்துக் கொண்டும் குடும்ப உறவுகளின் வற்புறுத்தலுக்கும் நண்பர்களின் தேவையற்ற ஆலோசனைகள் ஆகியவை இளம் வயதினர் அதிகம் விவாகரத்தை நாடி செல்ல காரணமாகி விடுகிறது. 

ஆணைச் சார்ந்து பெண் வாழும் சுழலும் இப்போது இல்லை இது மிகப் பெரிய காரணம் எனலாம்.


உனக்கு என்ன கை நிறைய சம்பாதிக்கிற உன்னால் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியும் யோசிக்காதே தைரியமாய் முடிவெடு என்று ஆலோசனைகள் அதிகம் கொடுத்து கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


பணம் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே வாழ்க்கை இல்லை அதையும் மீறிய விஷயங்கள் இருக்கின்றது.


உங்களுக்கு வேறொரு கணவன் கிடைக்கலாம் அல்லது கணவனென்றால் வேறொரு மனைவி கிடைக்கலாம் ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் அப்பாக்களோ & அம்மாக்களோ நிச்சயம் கிடைக்க மாட்டார்கள்.


பார்ன் சுவாலோ என்ற சின்னச் சிறு பறவையினம் இனப்பெருக்கத்திற்காக  8300 கி.மீ. கடலின் மீது பயணம் செய்கிறது. அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! 

அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது  சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் ஓய்வெடுத்து பறந்து வேறொரு நாட்டில் தன் இனத்தை விருத்தி செய்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் கடலின் மேலே தன் குஞ்சுகளுடன் பயணம் செய்து தன் சொந்த நாட்டை அடையும். 


ஒரு நல்வாழ்வை தன் குஞ்சுகளுக்கு கொடுக்க ஒரு பறவை இவ்வளவு போராடுகிறது பேரன்பு இருந்தால் மட்டுமே இந்த பயணம் சாத்தியம்.


சிறு சிறு விஷயத்திற்கும் சண்டையிட்டுக் கொண்டும் சகிப்புத் தன்மை அற்றும் அல்லது பிற ஈர்ப்பில்  மனம் மயங்கியும் ஏன் இந்த வாழ்வை தொடருகிறோம் என்று கசப்புடனும் இருக்கும் தம்பதியினர் அனைவருமே இந்த பறவையின் பயணத்தில் கற்றுக் கொள்ள நிறையவே உள்ளது.


தன் இனத்தை நல்லவிதமாக உருவாக்குவதில் இத்தனை போராட்டங்கள் ஒரு பறவையின் வாழ்விலேயே உண்டென்றால் மனித வாழ்வில் இதைக்காட்டிலும் அதிக போராட்டங்கள் இருக்கும்.


பெண்ணியம் என்றால்  விவாகரத்து பெறுதல் என்பது மட்டுமே அல்ல  என்ற புரிதல் வேண்டும் ! 

ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம் என்றால் அவள் மீண்டும் வாழ்வை பெற்றுக் கொள்ள  காத்திருக்கும் வர்க்கமும் இதே ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம்தான்! . 

மாற்றப்படவேண்டியது மனங்களே. எதையும் எதிர் கொள்ளும் தைரியம்தான்.!


தன் கணவனிடமே தன் சுயத்தை நிரூபிக்க முடியாமல் தோல்வியுறும் பெண் வேறு ஒரு ஆணிடம்  தன் சுதந்திரத்தை எப்படி மீட்டெடுப்பாள்?


அதே போன்று ஒரு பெண்ணிடம் அன்பை பெற சக்தியற்ற ஒருவன் வேறொரு பெண்ணில் தன் அன்பை எப்படி பெற முடியும்?


அனைவரிடமும் சிறு சிறு அளவில் அல்லது பெரிய அளவிலும் குறைகள் இருக்கலாம் பேரன்பு கண் கொண்டு காணில் அனைத்தும் சாத்தியமே ! 


மேலை நாடுகள் போல் சுதந்திர வாழ்வு அல்லது வேறு துணைதேடிக் கொள்ளுதல் என்று இப்போது மேற்கோள் காட்டிக் கொண்டிருக்க இயலாது குடும்பம் அமைப்பினை தொலைத்து வெளியில் தேடியவர்கள் இப்போது மகிழ்ச்சி என்பது அவரவர் குடும்பத்தில் மட்டுமே சாத்தியப்படும் என்ற உண்மையை உணர்ந்து 'ஒரே பெற்றோர்' என்ற வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுக்க துவங்கி இருக்கிறார்கள்.


அங்கு சில கீழ் தட்டு மக்களே விவாகாரத்துக்கள் இன்னும் அதிகமாக பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுகிறார்கள்.


இனம் காப்பதில் துணையை தேர்வு செய்வதில் பிற உயிரினங்களுக்கு இருக்கும் தெளிவு நமக்கு இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்துக் கொள்வோம் ! 


அறிவென்பது மகிழ்ச்சியை இருக்கும் இடத்திலேயே உருவாக்கிக் கொள்ளுதலிலும் அதற்கேற்ப மாற்றங்களை அழகாய் கொண்டு வருவதிலும் அடங்கும்.!



*╔═══❖✭᯽⊱❊🌹 ❊⊰᯽✭❖═══╗*

 *🌹🌹INFORMATION WORLD🌹🌹* 

*╚═══❖✭᯽⊱❊🌹❊⊰᯽✭ ❖═══╝*

Reading Time:

Sunday, October 3, 2021

கவலையான ஒரு சம்பவம் "" சிந்தனைக்காக..
October 03, 20210 Comments

I...M..W....


💞💞💞💞💞💞💞💞💞💞

🔴 ஒரு மனிதன் அழுது கொண்டிருந்தான். ! ! ! 


🔴 ஒருவர் அவரிடம் வந்து காரணம் கேட்டார்..


🔴 அதற்கு அவன் , எனக்கு ஒரு மகன் இருக்கிறான், 


நான் அவனை படிக்க வைத்தேன், அவனை சிறந்த மனிதனாக்கும் நோக்கத்துடன்...


அவனை பல்வேறு இடங்களில் படிக்கவைத்தேன்.


🔴 மெட்ரிக் , இன்டர் , பீ ஏ , எம் ஏ...


அத்தோடு அவனை வெளிநாட்டுக்கும் மேல் படிப்புக்காக அனுப்பினேன்,


🔴 ஆயினும் ?


திடீரென அவன் சுகயீனமுற்றான் , வைத்தியர்களும் அவன் மரண தருவாயில் இருக்கிறான் எங்களாலும் ஒன்றும் செய்ய முடியாது , அவன் அவனது இருதி நாளை அடைகின்றான் என்றனர்...


🔴மகன் சொன்னான் ,


 தந்தையே ! நான் படித்து பெற்ற சான்றிதழ்களை கொண்டு வாருங்கள் என்றான்..,


நான் கொண்டு வந்ததும் அவன் சொன்னான், இவை எல்லாம் நான் பெற்ற பக்கங்கள் , இருந்தாலும் நீங்கள் எனக்கு குர்ஆனை கற்பிக்க வில்லை..,


🔴 ஆகவே நான் எனது இறைவனை எவ்வாறு சந்திப்பது. ,


இதனை யாரும் பகிர மாட்டோம் காரணம் இது ஒரு சுவாரஸ்யமான நகைச்சுவை இல்லை,


உங்களுக்கு இஷ்டம் இருந்தால் இதனை பகிரவும்....


தயவு செய்து எந்த மாற்றமும் இல்லாமல் பகிரவும்..


பகிரும் முன் இதனை வாசிக்கவும்--ஜஸாகல்லாஹ்.,


📌உடனே எழுந்திருங்கள் பாங்கு அழைப்பு கேட்டதும்; உங்கள் மொபைலின் அழைப்பு கேட்டதும் எழுவதைப் போல


📌குர்ஆனை கவனமாக வாசிக்கவும் உங்களுக்கு வந்த மெஸேஜை வாசிப்பதை போல..


அல்லாஹ்வை மரணத்தை அஞ்சுவதைப்போல அஞ்சுங்கள்...


 மரணத்தை நினைவு கூறுங்கள் உங்கள் பெயர்களை நினைவு கூறுவதைப்போல


🌷ஒவ்வொரு நேர தொழுகைக்கும் எவ்வளவு நேரம் தான் பிடிக்கும்


பஜர்          4/6 நிமிடங்கள்

லுஹர்.     6/8 நிமிடங்கள்

அஸர்        6/8 நிமிடங்கள்

மஹ்ரிப்.   5/7 நிமிடங்கள்

இஷா     7/10 நிமிடங்கள்


🔴 மொத்தம் 28/39

நிமிடங்கள் 24 மணித்தியாலங்களில் செலவாகிறது


🌺நாங்கள் சிந்திப்போம்  அல்லாஹ்வுக்காக எங்களிடம் நேரம் உள்ளதா?...


🔴80% ஆனவர்கள் இதனை பகிரமாட்டார்கள் ! ! !

💞💞💞💞💞💞💞💞💞💞

Reading Time:
நெருக்கடியான நேரங்களைக் கையாள்வது எப்படி?
October 03, 20210 Comments

I...M..W....


இன்றைய உளவியல் குறிப்பு

நம் வாழ்க்கைப் பயணம் என்பது அடைய வேண்டிய இலக்குகளுக்கானது மட்டுமே அல்ல. நம்முடைய அறிவு, கல்வி, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நாம் சந்தித்த மக்களிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கியது. இந்தப்பயணத்தின் வழியில் ஒருவேளை எதிர்பாராத குறுக்கீடுகள் வரலாம். 


தீர்க்க முடியாதது போல தோன்றும் சிக்கல்கள் வரலாம். இந்த பிரச்னைகள் பொருளாதாரம், உறவுச்சிக்கல், உங்கள் உடல்நலம் என வேறு எதுவாகவும் இருக்கக்கூடும். இவற்றைச் சமாளிக்க தயாராகாமல் இருந்தால் நம்மை புரட்டிப்போட்டு செய்வதறியாது அப்படியே நிலைகுலைந்து நின்றுவிடுவீர்கள். இவற்றைக் கையாளக் கற்றுக் கொள்ள Crisis management பற்றி புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் உளவியலாளர்கள். அதுபோல், ஆபத்தைச் சந்திக்க உதவும் வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம்.


பிரச்னையின் தன்மை அறிதல்இழப்புகளையும், நெருக்கடிகளையும் சமாளிக்கும் விதத்தில் நாம் ஒவ்வொருவரும் வித்தியாசப்படுகிறோம். இழப்பை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்பதைப் பொருத்து, நீங்கள் யார் எனவும், எவ்வாறு மாறப்போகிறீர்கள் என்பதையும் தீர்மானிக்கிறீர்கள். சில நேரங்களில் பிரச்னையை கையாள்வது மிக எளிதானதாகவோ அல்லது நெருக்கடியானதாகவோ இருக்கலாம். 


நோய்கள், பொருளாதார நெருக்கடி, உறவுச்சிக்கல் இப்படி நாம் அடிக்கடி சந்திக்கக்கூடிய பிரச்னைகளை எடுத்துக் கொண்டால் அடிப்படையில் நம்முடைய பணி சார்ந்தவைகளாகவே இருக்கின்றன. இவற்றை எதிர்கொள்ள தேவை, சுய பராமரிப்பு பயிற்சிகள் மற்றும் வாழ்க்கை மேலாண்மை. அதற்கு, உங்கள் நேரத்தை, உங்கள் வேலையை, உங்கள் வாழ்க்கையை  நிர்வகிக்க வேண்டும். அதைக் கற்றுக் கொண்டால், நிச்சயம் எந்த மாதிரியான பிரச்னையையும் எதிர்கொள்ளத் தயாராகிவிடுவீர்கள்.


👉பயனில்லாதவற்றை செய்யாதே...


பலர் இதை புரிந்து கொள்வதில்லை. சுயநலம் என்று நினைக்கிறார்கள். அலுவலகத்திலோ, மற்ற இடத்திலோ ஒருவர் கொடுக்கும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. 


உங்களது நேரத்தை எடுத்துக்கொள்ளும் அல்லது உங்களது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வேலையாக இருக்குமானால், கண்டிப்பாக அதற்கு ‘நோ’ சொல்ல பழகிக் கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் ‘யெஸ்’ சொல்லாதீர்கள். அது சுயநலமாக இருக்காது, பதிலாக உங்கள்மீது கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கையை நிர்வகிக்க உதவும்.


👉நேர நிர்வாகம்


நேரத்தை நிர்வகிக்க முதலில் ஒவ்வொரு வேலைக்கும் கால அட்டவணை வகுத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து தவறாதீர்கள். குறைந்தபட்சம் அடிப்படை நேர ஒழுக்கத்தை பின்பற்றினாலே எதிர்பாராமல் ஏற்படும் சில நேர நெருக்கடிகளை சமாளிக்க முடியும். அலுவலக வேலை, தூங்குவது, டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது அல்லது ஃபேஸ்புக், டிவிட்டர் எதுவாக இருந்தாலும் அதற்காக நடுநிலையாக நேரத்தை செலவழிக்க முயற்சி செய்யுங்கள். 


👉வேலையை பகிர்தல்


வீட்டிலோ, அலுவலகத்திலோ எல்லா வேலைகளையும் நீங்களே செய்தால்தான் சரியாகச் செய்ய முடியும் என்று தவறாக கணக்குப் போடாதீர்கள். முக்கியமான, உங்கள் நேரடி கண்காணிப்பு தேவைப்படும் வேலையென்றால் நீங்களே செய்யலாம். சாதாரண வேலைகளை மற்றவர்களை செய்ய வைப்பதன் மூலம் அவர்களுக்கும் பயிற்சி அளிப்பது போல் இருக்கும், அதேவேளை உங்களது வேலையையும் குறைத்துக் கொள்ளலாம். 

இதனால் தேவையில்லாத மன அழுத்தத்தை தவிர்க்க முடியும். 


👉இடைவெளி


கடுமையான வேலைப்பளு இருக்கும்போது, சிறிது இடைவெளி கொடுத்து வெளியே சென்று வரலாம். மிகப்பெரிய புராஜெக்ட் ஒன்றை முடித்திருப்பீர்களானால் சின்னதாக ஒரு ட்ரிப் அடிக்கலாம். பணியிலிருந்து இடைவெளி பெறுவது குழம்பிப்போன உங்கள் மூளையை தெளிவாக்கவும், நெருக்கடிக்கு நடுவில் உங்கள் ஆற்றலை புதுப்பிக்கவும் உதவியாக இருக்கும்.


👉வெளிப்படைப் பேச்சு


நெருக்கடியான நேரங்களில் குடும்பத்தினரையும், நண்பர்களையும் சார்ந்திருக்க வேண்டும். அவர்களிடம் வெளிப்படையாகப் பேசி, கருத்துக்களை கேட்டறிவதும் அவசியம். உங்கள் குடும்பத்தாரும் பாதிக்கப்படுபவர்களாக இருந்தால், அவர்களுடனான உரையாடல், பிரச்னையிலிருந்து வெளிவருவதற்கான வழிகளை கண்டறிவதற்கும், பிரச்னையின் தீவிரத்தை குறைப்பதற்கும் உதவும்.


👉கனிவாக இருங்கள்


பிரச்னை உங்களுக்கோ, உங்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கோ இருக்கலாம் என்பதால் உங்களை நேசிக்கிறவர்களையும், நீங்கள் நேசிக்கிறவர்களையும் மறக்காதீர்கள். இந்த நேரத்தில் அவர்களிடம் மிகுந்த கனிவோடு நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்காக செய்யும் சின்னச்சின்ன செயல்களும் அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கலாம். உங்கள் வேலைப்பளுவில் அவர்களை புறக்கணித்துவிடாதீர்கள்.


👉நிலைமையை ஏற்றுக் கொள்ளுங்கள்


நமக்கு ஒரு நிகழ்வு ஏற்படுகிறதென்றால், கண்டிப்பாக இருக்காது என்று முதலில் அதை மறுப்போம். அதனால் கோபம் வரும்; அதைப்பற்றி விவாதம் செய்வோம். அதற்காக வருந்தி மன அழுத்தம் உண்டாகும். இறுதியில் அதுதான் உண்மை என்று ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். கோபப்பட்டு, அழுது, அங்கே நின்று கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.


👉தீய பழக்கங்களுக்கு அடிமையாக வேண்டாமே...


ஒரு இழப்பை எதிர்கொள்ளும்போது அதிலிருந்து தப்பிப்பதற்காக கெட்ட பழக்கங்களுக்கு தூண்டப்படுவீர்கள். அவை தற்காலிக சந்தோஷத்தைக் கொடுத்தாலும் நிரந்த அடிமையாகி, பின்னர் அதுவே வாழ்நாள்  போராட்டமாகிவிடும். உணர்ச்சியாக இருக்கும் இந்தத் தருணத்தில், கெட்ட பழக்கங்கள் கொண்ட நண்பர்களுடனான நட்பைத் தவிர்த்துவிடுங்கள். வேடிக்கைக்காகக்கூட போதைப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.


👉ஆரோக்கியம் அவசியம்


சோகமாக இருக்கிறோம் என்பதற்காக சரியான நேரத்தில் சாப்பிடாமல், உறங்காமல் உடலை கெடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் கவனத்தை திசை திரும்ப ஏதேனும் உடற்பயிற்சி அல்லது யோகா வகுப்புகளில் சேரலாம். மன ஆரோக்கியத்திற்கு சிறந்த மனநல ஆலோசகரை அணுகலாம். இன்பம், துன்பம் இரண்டையும் சமநிலையாக எடுத்துக்கொண்டு, உங்களுக்கான இந்த வாழ்க்கையை, முடிந்தவரை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம். அதற்கான எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு.

❁ ════ ❃•  *IMW*  •❃ ════ ❁

Reading Time:
அழிவின் விளிம்பில் புதிய தலைமுறையினர்
October 03, 20210 Comments

அழிவின் விளிம்பில் புதிய தலைமுறையினர்.


அழிவின் விளிம்பில் இருந்தது அன்புச் செல்வங்களை காப்பாற்றுங்கள்

போதை வஸ்துக்கள், அபாயகரமான போதை வஸ்துக்கள் இளம் தலை முறையினரை காவு கொள்ளும் பிரதான சவாலாக மாறி வருகின்றது.

இன்று இலங்கையில் தினமும் 45 கோடி ரூபாய்கள் போதைபொருள் பாவனைக்காக செலவிடப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.


அபாயகரமான போதை வஸ்துகள் குறுகிய காலத்தில் அதிக இலாபம் தருவதால் அதில் அதிகாரம் செல்வாக்கு உடைய பாதாள உலக வலையமைப்பு அதிதீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


இன்று பாடசாலைகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன, மிகவும் சிறந்த வினியோக மார்கமாக அவை பார்க்கப்படுகின்றன, வழமையான ஹிரோயின், கொகொயின் ஐஸ் போதை வஸ்துக்களுடன் டொஃபி, ச்விங்கம், இனிப்பு பானங்கள், வில்லைகள் என பலவேறு வடிவங்களில் போதை வஸ்துக்கள் சூட்சுமமாக சந்தைப்படுத்தப்பட்டு ஆண் பெண் பால் வேறுபாடின்றி பிள்ளைகள் போதைகளின் அடிமைகள் ஆக்கப்படுகின்றனர்


*வீட்டு சூழல் பாதுகாப்பானது என்று மட்டும் இருந்து விடாதீர்கள், வெளியுலகம்  மேலதிக வகுப்புக்கள் ஏன் பாடசாலை வளாகங்கள் கூட உங்கள் பிள்ளையை காவு கொள்ளலாம், அவர்களுடன் நெருக்கமாக இருங்கள், அவர்களுக்கு அன்பாக ஆபத்துக்களை எடுத்துச் சொல்லுங்கள், அவர்களது நடத்தைகளில் அவதானமாக இருங்கள்.*


அவர்களது பாடசாலை நட்புக்கள்  புதிய சமூக வலைதள நட்புக்கள் குறித்த அவதானம் தேவை, போதை வஸ்துகளுடன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் இளம் சிறார்கள் பதின்ம வயதினர் ஆளாகின்றனர்.


எவ்வாறு உலகில் ஆயுத உற்பத்தியாளர்கள் இன மத மொழி வேற்றுமைகளில் முதலீடு செய்கிறார்களோ அதே போன்றே போதை வஸ்து உற்பத்தியாளர்களும் ஒரு சமூகத்தின் இளம் மற்றும் மாணவ சமூகத்தை இலக்கு வைத்து அழிப்பதற்கு போதை வஸ்துக்களை ஆயுதமாக பயன்படுத்த இன மத வெறியர்களை தூண்டுகிறார்கள்.


*சமூக ஊடகங்கள், இன்டர்நெட்  விளையாட்டுக்கள் மற்றுமொரு வகையான போதையை, மதிமயக்கத்தை இளம் தலைமுறையினர் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன.*


ஆன்மீக நம்பிக்கைகள் குன்றிய பொருளாதாரப் பிராணியாக ஒரு சமூகம் மாறுவது குறித்து கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டது.


இப்பொழுது ஆன்மீக நம்பிக்கைகள் அற்ற பொருளாதாரமும் அற்ற சைபர் உலகில் மதிமயங்கி சஞ்சாரம் செய்யும் ஒரு தலை முறை உருவாகி வருகிறது.


அதேபோன்றே சகலவிதமான சன்மார்க்க குடும்ப சமூக கட்டுக் கோப்புகளையும் தகர்த்தெறியும் ஒரு (தறுதலை)  தலை முறை உருவாகி வருகிறது.


போதை வஸ்துக்கள், அபாயகரமான போதை வஸ்துக்கள் புதிய சந்ததியினரை இலக்கு வைத்து காவு கொண்டு வருகிறது.


இறையச்சம் தக்வா உடையவர்களுக்கு மாத்திரமே இஸ்லாம் மேற்படி அபாயகரமான தீங்குகளில் இருந்து அபயம் அளிக்கிறது.


இறையச்சம் ஒன்றே அழிவின் விளிம்பில் இருந்து எமது குழந்தைச் செல்வங்களை சந்ததிகளை பாது காத்திட முடியும்.


மது மற்றும் போதை வஸ்து பாவனைகளில் இருந்து சமூகத்தை காப்பது ஒவ்வொரு உறுப்பினரினதும் கடமையாகும்.


*யுகத்தின் புதிய நூதனமான சவால்களுக்கு முகம் கொடுக்கும் மத்திய நிலையங்களாக மஸ்ஜிதுகள் மாறுதல் வேண்டும், மிம்பர் மேடைகள் வலுவூட்டப்படல் வேண்டும், பாடசாலைகள் உளவள ஆலோசனைகளுடன் பதின்ம வயதினரை வழி நடாத்த வேண்டும்.*


எனது வீடும், விட்டுச் சூழலும் மாசின்றி தூய்மையாக இருக்கின்றது என்பதில் திருப்திப் பட்டுக் கொள்ளாதீர்கள், மரணத்தை விளைவிக்கும் நுளம்பு அண்டை அயலவர் வீடுகளில் இருந்து உங்களை நாடி வருவது போல

எல்லா விதமான சீர்கேடுகளும் நாளை உங்கள் வீட்டிற்குள் குடி புகுந்து குடும்பம் நடத்தும்.


போதைவஸ்த்து வியாபாரிகள், வினியோகஸ்தர்கள், பாவனையாளர்கள்  சொந்த பிள்ளைகளாக உறவினர்களாக இருந்தாலும் அவர்கள் குறித்த தகவல்களை பாதுகாப்புத் துறையினருக்கு வழங்குங்கள்.


*எனது குடும்பம், எனது சமூகம் எனது இனம் என்றில்லாது நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்கின்ற பணிகளில் கூட்டுப் பொறுப்புடன் தேசத்திற்கான பங்களிப்பினைச் செய்வதில் தான் "கிலாபாத்" பணி இருக்கிறது.*

Reading Time:
இஸ்லாமிய இளைஞர்களே!!!!!!
October 03, 2021 2 Comments

இஸ்லாமிய இளைஞர்களே!!!!!!  உங்களுக்கான உபதேசம்


*1,* அதிகாலையில் விழித்திடுங்கள்.


*2,* சுபுஹு தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தொழுகுங்கள்.


*3,* காலையில் சிறிது நேரம் குர்ஆன் ஷரீப்  ஓதுங்கள். 


*4,* தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். 


*5,* நேரங்களையும், செய்ய வேண்டிய வேலைகளையும் சரியாக திட்டமிடுங்கள்.


*6,* எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்குங்கள்.


*7,* பெற்றோர்களுக்கு பணிவிடை செய்யுங்கள். 


*8,* உற்றார், உறவினர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். 


*9,* ஸாலிஹான நல்ல நண்பர்களுடன் பழகுங்கள்.


*10,* ஆரோக்கியத்தை தரும் சத்தான ஆகாரங்களை சாப்பிடுங்கள்.


*11,* சமூக சேவையில் ஈடுபாடு காட்டுங்கள். 


*12,* செல்போனை அவசியத்தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.


*13,* கடந்த கால இஸ்லாமிய வரலாறுகளை நேரம் ஒதுக்கி படியுங்கள். 


*14,* மற்றவர்களிடம் சிரித்த முகத்துடன் கனிவாக பேசுங்கள். 


*15,* எப்பொழுதும் தூய்மையாக இருங்கள். 


*16,* வெட்கப்படாமல் சுன்னத்தான தாடி வையுங்கள். 


*17,* அழகிய நற்பண்புகளை நடைமுறை படுத்துங்கள். 


*18,* நீங்கள் பட்டதாரியாக இருந்தால் அரசு அதிகாரியாக ஆக முயற்சி செய்யுங்கள். 


*19,* ஹலாலான முறையில்  [மார்க்கம் அனுமதித்த வழியில் மட்டும் ] சம்பாதியுங்கள்.


*20,* இரவில் இறைவனிடம் பாவமன்னிப்பு  தேடிவிட்டு சீக்கிரம் தூங்கி விடுங்கள். 


இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.


நாளைய வரலாறாக நீங்கள் மாற வேண்டும்

Reading Time:
⚠️ நீங்களும் பாவம் செய்து பிறரையும் பாவம் செய்ய வைக்காதீர்கள் ⚠️
October 03, 20210 Comments

 ⚠️ நீங்களும் பாவம் செய்து பிறரையும் பாவம் செய்ய வைக்காதீர்கள் ⚠️




• இன்று அல்லாஹ் பாதுகாக்கணும் சகோதர! சகோதரிகளே !


•  இன்று அதிகமானனோர்! முஸ்லீம் என்ற தங்களை கூறி கொள்ள கூடியவர்கள்!  சமூகவலைத்தளங்களில் what's app - Face Book - Instagram - share Chat  etc போன்றவற்றில்! 


• இன்னும் சிலர் இவ்வாறு தங்களை photo எடுத்து post செய்வதால் அல்லது இது போன்று பெண்களின் புகைப்படங்களை post செய்வதால் அதிகம் likes comments மற்றும் followers கிடைக்கிறார்கள் என்று இவ்வாறு தங்களின் மானம் வெட்கம் கற்பு அனைத்தும் இழந்து இந்த செயலை செய்கிறார்கள்!


• profile photo - வாக அல்லது dawah சம்பந்தமான பதிவுகளில் அல்லது அந்த புகைப்படங்கள் உடன் அல் குர்ஆன் வசனங்கள் அல்லது ஹதீஸ்களை சேர்த்து post செய்கிறார்கள்! 


• உண்மையில் சமூகவலைத்தளங்களில் தங்கள் புகைப்படங்களை upload செய்யும் பெண்கள் அறியாமையினால் தான் செய்கிறார்கள்! ஏன் என்றால் தனது கணவனுக்கு மட்டும் காட்ட வேண்டிய உடலை அனைவருக்கும் காட்ட! Social media வில் upload செய்கிறார்கள்!


• ஆனால் இது அறியாமல் இவர்களை விட அறிவு குறைவாக உள்ள நாம் அதை எடுத்து  துஆ - குர்ஆன் வசனங்கள் சேர்த்து post செய்வது... அல்லாஹ்வையும் ரசூலையும் சொற்களை சேர்த்து post செய்ய மாட்டார்கள்!


*~ இதற்கு உதாரணம் :*


• மது பாட்டிலில் அல் குர்ஆன் வசனங்களை ஒட்டி விற்பது போன்றுது ஆகும்! மது ஹராம் தான் ஆனால் குர்ஆன் வசனம் நன்மை தானே! நாம் ஏன் மதுவை ஹராம் என்று ஏன் பார்க்க வேண்டும்? அதில் உள்ள அல் குர்ஆன் வசனத்தை மட்டும் பார்க்க வேண்டியது என்பது போன்று ஆகும்!


• ஒரு சாரார் நாங்கள் நல்ல எண்ணத்தில் தான் செய்கிறோம் நீங்கள் தவறாக பார்க்க வேண்டாம் என்று : நீங்கள் செய்யும் செயல் சரி என்றே வைத்து கொள்ளுவோம்!


*• இதே போன்று சமூக வலைத்தளங்களில் உங்கள் புகைப்படத்தையோ அல்லது உங்கள் தாய் அல்லது உங்கள் சகோதரி ! உங்கள் மனைவியின் புகைப்படம் எடுத்து post செய்வீர்களா!?  மனம் வருமா அவ்வாறு செய்ய?*


•  ஊரார் வீட்டு பெண் என்றால் நமக்கு இனிக்கிறது! தான் வீட்டு பெண் என்றால் மட்டும் கசக்குகிறதா???? 


• தெருவில் அல்லது வெளியே ஒரு அந்நிய பெண்ணை பார்த்தால் அது ஹராம் ! ஆனால் அதையே இது போன்ற பதிவுகளில் பதிவு செய்து பார்த்தால் ஹலாலாக ஆகி விடுமா?


• ஒரு சிலர் ஈமான் மானம் வெட்கம் கற்பு அனைத்தும் போனாலும் பரவில்லை சமூகவலைத்தளங்களில் பிரபலம் ஆனால் போதும் என்று செய்கிறார்கள் அதே செயலை நாமும் செய்தால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் உள்ளது???


• இன்னும் சிலர் அறிவாளி போன்று  முகத்தை கட்டினால் தானே தவறு! முகத்தை மறைத்து விட்டு அனைத்தையும் காட்டுகிறார்கள் அல்லது சிலர் கண்கள் தெரிவது போன்று புகைப்படம் எடுத்து profile வைக்கிறார்கள் அல்லது post செய்கிறார்கள் பிறர் பார்க்க!!!


•  இதனால் உள்ளத்தில் தீய ஆசை உள்ளவர்கள் ஆண்கள் உங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதை என்ன என்ன கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள்!? அவர்கள் பாவம் செய்ய நீங்களே ஒரு முக்கிய காரணம் ஆகி வீட்ட்டீர்கள்!?


• நாம் தெருவில் நீங்கள் செல்லும் போது ஒரு முறை பார்த்த ஆண் இன்று social media வில் உள்ள நமது புகைப்படங்களை download செய்து inch by inch ஆக ரசித்து பார்ப்பான்! (நவதுபில்லாஹ்)



• நீங்கள் இன்று மௌத் ஆனாலும் உங்கள் profile social media - வில் அப்படியே இருக்கும்! உங்கள் பதிவுகள் அப்படியே இருக்கும்! அதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்!


*• நீங்கள் மௌத் ஆன பின்பும் உங்கள் id யில் உள்ள புகைப்படம் post கள் மூலம் உங்களுக்கு தொடர்ந்து பாவம் வந்து கொண்டு தான் இருக்கும் நீங்கள் கபூரில் இருந்தாலும் சரியே!*


*⚠️  profile யை post செய்ய கூடியவர்களே இதை விட மோசமானது இன்னொன்று உள்ளது ⚠️*


• இதற்கு என்று சிலர் உள்ளார்கள்! இது போன்ற பெண்களின் புகைப்படங்களை download செய்து கொண்டு சில app மூலம் முகத்தை மறைத்து வைத்ததை நீக்கி உண்மையான முகத்தை வர வைக்கிறார்கள்!


• பின்பு photo editing செய்து ஆபாசமான website களில் upload செய்கிறார்கள் அதன் மூலம் அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள்!


*• ஆபாசமான website யில் முஸ்லீம் பெண்களுக்கு என்று தனி website யே உள்ளது! அதில் அவ்வளவு மோசமாக பெண்களை edit செய்து post செய்து உள்ளார்கள்!* (இதை ஒரு சிலர் எங்களுக்கு தெரிவித்தனர்)


• இவ்வளவு ஹராமான செயல் மானக்கேடான வெட்கக்கேடான செயல் என்று தெரிந்தும் இதற்கு பிறகும் உங்களை நீங்கள் மாற்றி கொள்ள வில்லை என்றால்??? நஷ்டம் யாருக்கு உங்களுக்கா? அல்லது எங்களுக்கா? 


*• இவ்வாறு செய்வதால் உங்களுக்கு அதிகம் like மற்றும் followers கிடைக்கலாம்! ஆனால் அதனால் உங்கள் வெட்கம் மானம் கற்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் இழந்து கொண்டு இருக்கிறீகள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்!*


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


*நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்துகொள்!*


(நூல் : புகாரி : 3483)


• நபி (ஸல்) அவர்களே வெட்கம் இல்லை என்றால் விரும்பியதை செய்ய சொல்லி விட்டார்கள்! ஏன் என்றால் உள்ளத்தில் சிறிது ஈமான் இருந்தாலும் பாவம் செய்யும் போதும் அல்லது வெட்கக்கேடான செயலை செய்யும் போது உள்ளத்தில் ஒரு நெருடல் ஏற்படும்!


• பாவம் செய்வதில் மகிழ்ச்சி காண்கிறீர்கள் அல்லது நீங்கள் செய்யும் செயலில் எந்த தவறும் தெரியவில்லை என்றால் அல்லாஹ் கூறுகிறான் :


*அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்!*


(அல்குர்ஆன் : 6 : 43)


• உங்கள் பாவ செயலை ஒவ்வொன்றையும் ஷைத்தான் அழகாக காட்டி உள்ளான் அதனால் நீங்கள் செய்யும் செயல் உங்களுக்கு தவறாக தெரியாது!


• அல்லாஹ் பாதுகாக்கணும்! இன்னும் சிலர் *ஹிஜாப் அணித்து ஊரில் 100 நபர்கள் முன் மறைத்த தங்கள் உடலை ஒரே ஒரு photo மூலம் 1000 நபர்கள் மேல் தங்கள் உடலை அல்லது முகத்தை காட்டி விடுகிறார்கள்* அல்லது காசு வாங்காமல் விற்று விடுகிறார்கள்! ஹிஜாப் அணித்து photo எடுத்து post செய்யும் பெண்களும் விதி விலக்கு கிடையாது இதில்!!!


•  எல்லோரும் செய்கிறார்கள் நாம் செய்தால் என்ன தவறு என்று சிலர் வைப்பார்கள் ஆனால் அவர்கள் நாளை மறுமையில் நரகம் சென்றாள் எல்லோரும் நரகம் செல்லுகிறார்கள் நானும் நரகம் சொல்லுவேன் என்று செல்லுவிர்களா??? சிந்தித்து கொள்ளுங்கள் சகோதரிகளே!


• இன்னும் சிலர் நீங்கள் தவறாக பார்க்கிறீர்கள்? உங்கள் பார்வையில் தான் தவறு உள்ளது : நீங்கள் தங்கச்சி அல்லது அக்காவாக பாருங்க என்று தங்கள் செய்யும் ஜினா (விபச்சாராம்) அல்லது மான கேடான செயலுக்கு காரணம் காட்டுகிறார்கள்! நவதுபில்லாஹ்!


• இன்னும் சிலர் இவ்வாறு செய்ய கூடாதுனு அல்லாஹ் சொல்லி இருக்கானா? நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்களா என்று கேட்கிறார்கள் இவை எல்லாம் நான் பாவம் செய்து கொண்டு தான் இருப்பேன் என்னால் அதில் இருந்து மீண்டு வரமுடியாது என்று மறைமுகமாக கூறுகிறார்கள்!!! நவதுபில்லாஹ்! ஷைத்தான் எவ்வளவு அழகாக அவர்களின் செயலை காட்டி உள்ளான்!!!


• இது போன்றவர்களை உலகிலயே அல்லாஹ் பிடிப்பான் விதி விளக்காக தப்பித்து கொண்டுவர்கள் ஆனால் மறுமை நாளில் மாட்டி கொள்ளுவார்கள் ;


*அன்றைய தினம் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம். அன்றியும், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும், அவர்களது கால்களும் சாட்சி கூறும்!*


(அல் குர்ஆன் : 36 : 65)


• நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அல்லாஹ்விடம் தனியாக பதில் கூற வேண்டும் அது வரை நாம் எங்கும் செல்ல முடியாது!


*• அல்லாஹ் பாதுகாத்த ஸாலிஹான முஃஹ்மினா பெண்களை தவிர!*


• பெண்கள் புகைப்படங்களை post ஆக அல்லது profile ஆக நீங்கள் வைப்பதாக இருந்தால் அதற்கு பதில் யாரையும் கவராத வகையில் எளிமையாக கண்ணியமான cartoon girl photo க்களை வைத்து கொள்ளலாம்! அல்லது இயற்கை காட்சிகள் ஏதேனும் வைத்து கொள்ளலாம்!


*❣️💐நேரான பாதை💐❣️*


தயவு  செய்து  அனைவருக்கும்  அனுப்பவும் 👇👇👇👇

Reading Time:

Monday, September 27, 2021

 அரபு தத்துவம்
September 27, 20210 Comments
 உறவினர்களை வைத்து யாரையாவது இழிவுபடுத்த முன்



*நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்,* 


- அடங்காத மகன் நூஹ் நபிக்கு இருந்தது,


- இணைவைப்பு தந்தை இப்ராஹீம் நபிக்கு இருந்தது,


- இறைமறுப்பு மனைவி  ழூத் நபிக்கு இருந்தது,


- நானே உங்கள் உயர்ந்த இறைவன் என்று கூறிய கணவன் ஆஸியாவுக்கு இருந்தது,


- லஹப் என்ற பெயரை கொண்ட சாச்சா நபி ஸல் அவர்களுக்கு இந்தது!!


- *நூல் تأملات قصيرة جدا இருந்து* -


❁ ═• *அரபு தத்துவங்கள்* •═ ❁

Reading Time:
  அரபு தத்துவம்
September 27, 20210 Comments

  அரபு தத்துவம் 




நேசித்த மனிதனுடன் ஏதேனும் ஒரு நாள் உங்கள் உறவு துண்டிப்பு பெற்றால்,


அவர் பற்றிய இரகசியங்கள்,பேச்சுக்கள் அனைத்தையும் உனது உள்ளத்தில் குழி தோண்டி புதைத்து விடு,


காரணம்,


*பல வித தொடர்புகள் பல வித குணங்கள்!!*


-அலாவுதீன் உபைதுல்லாஹ்-

Reading Time:

Friday, September 24, 2021

🇱🇰🇱🇰 رابطة طلاب المسلمين  🇱🇰🇱🇰
September 24, 20210 Comments

🇱🇰🇱🇰 رابطة طلاب المسلمين  🇱🇰🇱🇰



 *❤️*இக்குழுமத்தில் இணைந்து கொண்ட அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி* 


📀🎞️🎥📲📕📕📗📗📒📂📂📂📙📚📚📚📚 உங்களது தொலைபேசியினை நல்ல விடயங்களுக்கும் பயன்படுத்துங்கள்🟣🟣🟣


*இக்குழுவில் பகிரப்படும் விடயங்கள்*

📬இஸ்லாமிய பயான் வீடியோக்கள்


📬இஸ்லாமிய பயான் ஆடியோ


📬இஸ்லாமிய வரலாறுகள் ஆடியோ வீடியோ 



📬அல்குர்ஆன் வசனம்கள்


🎼🎼❌❌இசையில்லாத கஸீதாக்கள் 


போன்றன எமது குழுவில் பகிரப்படும் ஆகவே இணைய விருப்பம் உள்ளவர்கள் இணையலாம்.

*குறிப்பு group admin மட்டுமே இந்த குழுவில் பதிவுகள் இடலாம்.*

⸙◈━━━━━━━━ ⸙◈

*இச் செய்தியை பார்க்கும் ஒவ்வொருவரும் கட்டாயம்*

*இதனை நீங்கள்  ஒருவருக்கு  SHARE செய்து.... அதை யாரெல்லாம் மற்றவர்களுக்கு  SHARE செய்வார்களோ.... அதன்படி  யாரெல்லாம் பயன் பெறுவார்களோ ! அதன் ஒரு பங்கு  கூலி இப்பொழுதும், உங்கள் மறைவிற்க்கு பின்னும்... உங்கள் கபர்க்கும் வந்து சேரும் இன்-ஷாஃ-அல்லாஹ்!!*💯

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

👇👇👇👇👇👇👇👇

*Join us*

2️⃣qroup

Click Here....




❂- ════ ════ -❂

*_பகிர்வு செய்தமைக்காக அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானக!!_*

         *_ஆமீன்_*

                 💯

 ❂- ════ ════ -❂

Reading Time:

Wednesday, September 22, 2021

Islamic News
September 22, 20210 Comments


 பெண்கள் உயரமான கொண்டை போடலாமா?


قال الرسول صلى الله عليه وسلم ” صنفان من أهل النار لم أرهما ، قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس، ونساء كاسيات عاريات ، مائلات مميلات ، رؤوسهن كأسنمة البخت المائلة ، لا يدخلن الجنة و لا يجدن ريحها ، وإن ريحها يوجد في مسيرة كذا وكذا “


உயரமான கொண்டை போடும் பெண்கள் சொர்க்கத்தின் வாடையை நுகர முடியாது என்று கூறும் மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? அப்படி எனில் இதில் தலை முடி பற்றி வரும் செய்தி பர்தா அணிந்து தனது ஹிஜாப் உள்ளே கொண்டையை உயர்த்தியவர்களுக்கும் பொருந்துமா ?


நான் குவைத்தில் உள்ளதால் இங்கு அனேக பெண்கள் பர்தா மற்றும் ஹிஜாப் அணிந்து தனது கொண்டையை உயரமாக வைக்கும் பெண்களைக் காண முடிகிறது. அப்படியானால் அவர்களின் நிலை என்ன ?


பதில்


நீங்கள் குறிப்பிடும் செய்தி சஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரிலோ அல்லது இதன் கருத்திலோ எந்தக் குறையுமில்லை.


3971حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذ رواه مسلم


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) அவர்கள் உடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள், தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.


இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


நூல் : முஸ்லிம் (4316)


இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பர்தாவைக் கடைபிடிக்காத பெண்களையே குறிப்பிடுகிறார்கள். ஆடை அணிந்தும் நிர்ணவானமாக இருப்பார்கள் என்றால் உடலின் சில பாகங்களை ஆடையால் மறைத்துவிட்டு மறைக்க வேண்டிய பல பாகங்களை வெளிப்படுத்துவார்கள். அல்லது உடல் பாகங்களை வெளிப்படுத்திக் காட்டும் மெல்லிய ஆடைகளை அணிவார்கள் என்று பொருள்.


இந்தப் பெண்கள் பிறரைக் கவரும் வேலையில் ஈடுபடுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவே தான் மறைக்க வேண்டிய உடலையும் தலை முடியையும் வெளிப்படுத்துகின்றனர்.


இன்றைய காலத்தில் இதுபோன்ற ஆடைகளைப் பெண்கள் சர்வ சாதாரணமாக அணிந்து வருவதைப் பார்க்கின்றோம். இதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள்.


பெண்களின் தலைமுடி மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும். பர்தாவுடைய ஒழுங்கு முறைகளில் இதுவும் ஒன்று. இந்த நெறிமுறைக்கு மாற்றமாக நடக்கும் பெண்களையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள்.


பெண்கள் தங்களுடைய அலங்காரத்தை அந்நிய ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. இதை மீறாத வகையில் ஒரு பெண் தன்னை எப்படி வேண்டுமானாலும் அலங்கரித்துக் கொள்ளலாம். எனவே மேற்கண்ட செய்தி பர்தா அணியாத பெண்களையே குறிக்கின்றது.

Reading Time:

@way2themes