2021 October 03
வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து தொடர்பில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி செயற்படும் பஸ்கள் தொடர்பில் விசேட கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் போது ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்வதோடு , பஸ் அனுமதி பத்திரங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மேல் மாகாணத்தில் சுமார் 6000 பஸ்கள் முன்னர் சேவையில் ஈடுபட்டன. எனினும் கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 900 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டன. ஏனெனில் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் அந்த தொழில்களைக் கைவிட்டு வேறு தொழில்களுக்குச் சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் எந்த காரணத்திற்காகவும் சுகாதார விதிமுறைகளை மீறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும், பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
MA UBAIDULLAH