A UBAIDULLAH: World News
Showing posts with label World News. Show all posts
Showing posts with label World News. Show all posts

Thursday, October 14, 2021

அன்பார்ந்த மக்களே தயவு செய்து மிக அவதானமாக இருக்கவும்
October 14, 20210 Comments

Games 

 தொலைபேசி பாவனை



........................................

Mobile Games



✅பிள்ளைகளுக்கு போன் கொடுக்க வேண்டாம் - கதறி அழும் தந்தை...!


✅அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள்


🟥In Sri Lanka - On, October 12, 2021


"ஒன்லைன் படிப்பிற்காக போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். பின்னர் ஒன்லைன் படிப்பு நின்று விட்டது. மகன் பின்னர் கேம் விளையாட பழகி விட்டார். 


பெற்றோரிடம் காலில் விழுந்து வேண்டுகிறேன். பிள்ளைகளுக்கு போன் கொடுக்கவே வேண்டாம்" என தனது ஒரேயொரு பிள்ளையை இழந்த தந்தை தெரிவித்துள்ளார்.


✅பண்டாரகம, ரய்கம, குன்கமுவ பிரதேசத்தை சேர்ந்த இருசு அஷேன் என்ற மாணவன் அவரின் வீட்டில் அமைந்திருந்த கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் நேற்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


வெற்றிலைக் கூறு விற்று தனது மகனின் கல்வி நடவடிக்கைகாக மாதாந்தம் பணம் செலுத்தும் வகையில் தவணை முறைக்கு கைப்பேசி ஒன்றை உயிரிழந்த மாணவரின் தந்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.


இந்நிலையில், கடந்த தினம் 11 வயதுடைய அஷேன் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.


🟪சம்பவம் தொடர்பில் அவரது தந்தை தெரிவித்ததாவது :-


மதியம் 2.45 மணியளவில் கீழ் கடையில் இருந்து எனக்கு போன் ஒன்று வந்தது. வெற்றிலைக்கூறு ஒன்று கூட இல்லை என்று. பின்னர் நான் மகனை அழைத்தேன். மகன் விரைவாக வந்தார். 


பின்னர் மகனிடம் நான் கூறினேன், விரைவாக வெற்றிலைக்கூறு கொஞ்சம் சுற்ற வேண்டும் என்று. அப்பா பாக்குகளை வெட்டி தாருங்கள் நான் விரைவாக வெற்றிலைக் கூறு சுற்றுகிறேன் என மகன் கூறினார். 


நான் வெற்றிக்கூறுகளை பையில் போட்டுக் கொண்டு வௌியேறும் போது மகனும் பின்னாலேயே வந்தார். பின்னர் நான் முச்சக்கரவண்டி ஒன்றை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றேன். 


பின்னர் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு பின்னர் வீட்டுக்கு வந்து மகனே என்று அழைத்த போது மகன் கதைக்க வில்லை. வழமையாக நான் வீட்டுக்கு வந்து மகனை அழைக்கும் போது எங்கிருந்தாலும் அப்பா என குரல் கொடுக்கும் பழக்கத்தை மகன் கொண்டிருந்தார். 


நான் அறைக்கு சென்று பார்த்தேன் அங்கு மகன் இருக்கவில்லை. பின்னர் சமையல் அறைக்கு சென்று பார்த்த போது, மகன் கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். 


பின்னர் மகனின் கால்களை பிடித்து தூக்கிக் கொண்டு கழுத்தில் இருந்த கயிற்றை அகற்ற முற்பட்டேன். எனினும் என்னால் அதை செய்ய முடியவில்லை. 


5 நிமிடங்களின் பின்னர் மகனை ஹொரனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மகன் இறந்து விட்டார். என்றார்.


சிறுவனின் திடீர் மரணம் தொடர்பில் பாணந்துறை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சிறுவன் கைப்பேசி விளையாட்டுக்களுக்கு அடிமையாகியிருந்தமை தெரியவந்துள்ளது.


சிறுவனின் சடலம் ஹொரணை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை திடீர் மரண பரிசோதகர் சுமேத குணவர்தன முன்னிலையில் இடம்பெறவுள்ளது.




Reading Time:

Friday, October 8, 2021

முழுமையாக திறக்கப்படுகின்றது பாடசாலைகள்...!
October 08, 20210 Comments


 


✅பாராளுமன்றில் வெளிவந்த புதிய 

செய்தி..!



 🟥In Sri Lanka - On, October 08, 2021


எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நாடளாவிய ரீதியில் பாடசாலையில் அனைத்து வகுப்பகளையும் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்க இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.


இன்றைய பாராளுமன்ற அமர்விலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,


21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பாடசாலைகள் பல கட்டங்களில் திறக்கப்படும்.

 

தொடர்ந்து நவம்பரில் அனைத்து தரங்களும் ஆரம்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.

 

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதை குறிப்பிட்டார்.

Reading Time:

Monday, October 4, 2021

 முஹம்மது நபியின் கார்ட்டூனை வரைந்தவர் விபத்தில் மரணம்.
October 04, 20210 Comments

BREAKING NEWS 



ஒக்டோபர் - 04, திங்கள் - 2021


IMW▪️முஹம்மது நபியின் கார்ட்டூனை வரைந்த சுவீடனை சேர்ந்த லோர்ஸ் வில்க்ஸ் விபத்தில் மரணமடைந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


IMW▪️இதன்படி ,பொலிஸ் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ஒரு ட்ரக்கில் மோதி விபத்து நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் அவருடன் சென்று கொண்டிருந்த இரு காவலர்களும் உயிரிழந்தனர்.


IMW▪️டென்மார்க் செய்தித்தாள் முகமது நபியின் கார்ட்டூன்களை வெளியிட்ட அடுத்த ஆண்டில், வில்க்ஸ் கார்ட்டூன் வரைந்தார்.


IMW▪️இதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்ததால், பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.


IMW▪️2007 ஆம் ஆண்டில் இந்த கார்ட்டூன் வரையப்பட்டபோது உலகம் முழுவதும் இஸ்லாமியர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.


மேலும் அல்-கைதா அவரது உயிருக்கு 1 இலட்சம் டொலர் வெகுமதி அளிப்பதாக அறிவித்தது.

Reading Time:
நீராடச் சென்ற குடும்பஸ்தர் மாயம்;
October 04, 20210 Comments

 I... M..W....



பூண்டுலோயா வெவஹேன பிரதேசத்தில் கொத்மலை ஓயாவில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மாயமான நிலையில் அவரை தேடும் பணிகள் மூன்றாவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி அன்று மாலை 5 பேர் கொண்ட தனது நண்பர்களுடன் வெவஹேன பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே அவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளானர்.

இதன் போது கால் தவறி ஆற்றில் விழுந்த குறித்த இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனாவர் பூண்டுலோயா கும்பாலொலுவ பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான 34 வயதுடைய இலங்க சஞ்சீவ என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காணாமல் போன இளைஞனை தேடி பூண்டுலோயா பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரும், நுவரெலியா இராணுவத்தினரும், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மூன்றாவது நாளாக இன்றும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Reading Time:
இம்முறை G.C.E(O/L) 2020 பெறுபேற்றினை பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு ....
October 04, 20210 Comments

 



இம்முறை G.C.E(O/L) 2020 பெறுபேற்றினை பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு அனைத்துப்பாடங்களிலும் W என்ற சித்தியின்மையினைப் பெற்றிருந்தாலும் உயர்தரம்( A/L) இரண்டு வருடங்கள் கற்று பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெறுவதற்கான சந்தர்ப்பத்தினை தற்போது கல்வி அமைச்சு வழங்கியுள்ளது. இதன்விபரம் பின்வருமாறு


தற்போது உள்ள.Bio, Maths, Commerce, Arts, E-Tech, B-Tech என்ற 6 பிரிவுகளுக்கும் மேலதிகமாக 7 ஆவது பிரிவாக தொழில் பிரிவு( Vocational Stream) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது O/L பரீட்சைப் பெறுபேற்றினைப் பெற்ற உயர்தரத்திற்கு இணையவுள்ள 2021/2023 ஆம் ஆண்டின் மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


இதற்கு O/L பரீட்சைப்பெறுபேறு கவனத்திற் கொள்ளப்படமாட்டாது, (all F/W உம் கற்கலாம், இரண்டு வருட கற்கை நெறியாகும் ஒவ்வொரு வருடத்திலும் 3 தவணை 2 வருடத்திலும் மொத்தம் 6 தவணைகளாகும், 1ஆம் வருடத்தில் ( first year) 1 ஆம் தவணையில் ஆரம்ப அறிமுகப்பாடங்களாக 9 பாடங்கள் நடைபெறும் தொழில் பிரிவு மாணவர்கள் இப்பாடங்களை( உ+ம்:- தமிழ்,சிங்களம்,ஆங்கிலம்,தொழில்வழிகாட்டல்கள்,உளவியியல்,ICT,தொழில் நுட்பம் இன்னும் பல......) கட்டாயம் எடுத்தாகவேண்டும் இதில் தெரிவு கிடையாது.


@ First year இல் மீதமாகவுள்ள 2 ஆம்,3 ஆம் தவணைகளில் 26 பாடங்களில்(உ+ம்:- QS, Web disining, ICT, பொறியியல், மின்னியியல், பிளம்பிங், Hotel Managment,பெண் அலங்காரம் போன்ற இன்னும் சில பாடங்கள்.......)இதில் கட்டாயம் 3 பாடங்களினை எடுத்தாக வேண்டும்.


2 ஆம் வருடம்(2nd year)

@1 ஆம் வருடத்தில் 2 ஆம்,3 ஆம் தவணையில் எடுத்த மூன்று பாடங்களிலும் ஏதாவது ஒரு பாடத்தினை தெரிவு செய்து 2 ஆம் வருடம் முழுவதும் அப்பாடம் ஒன்றினையே கற்று உயர்தரப் பொதுப்பரீட்சையில் அப்பாடமொன்றிலையே பரீட்சை எழுதி பல்கலைக் கழகம் செல்ல முடியும் உதாரணமாக 2 ஆம் வருடத்தில் QS என்ற ஒரு பாடத்தினைக் கற்ற ஒருவர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற முடியும்.


@ தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்( UGC) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச ரீதியான பல்கலைக்கழகமொன்று றட்மலாணையில் தொழில் பிரிவு பல்கலைக்கழகமாக தொழிற்பட்டுக்கொண்டு வருகின்றது இலங்கையில் ஏலவே 40 இற்கு மேற்பட்ட பாடசாலைகளில் தொழில் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


@2020/2021 இல் சகல பல்கலைக் கழகங்களிலும் தொழில் பிரிவு பீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது

@ உயர்தரப் பொதுப்பரீட்சையில் தொழில் பிரிவு மாணவர்கள் S தரத்தில் சித்தி பெற்றாலும் பல்கலைக்கழகந்தான் போக முடியாவிட்டாலும் NVQ Level 4 (National Vocational Qualification Level 4) இனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

@ பல்கலைக்கழகங்களில் NVQ Level 5,6,7 முடித்துவிட்டு பட்டத்தினைப்( Degree) பெற்றுக்கொள்ள முடியும்.

@ பல்கலைக்கழகம் சென்றுதான் NVQ Level 7 இனைப் பெறவேண்டும் என்பதல்ல அம்பாறை ஹாடி தொழில் நுட்பக் கல்லூரி போன்றவற்றிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.  

Reading Time:
இன்று உலக விலங்குகள் தினம்!
October 04, 20210 Comments

I...M..W.... 



அக்டோபர் 4,  இன்று உலக விலங்குகள் தினம். 


இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர், பிரான்சிஸ் அசிசி என்பவருடைய நினைவு நாளைக் கொண்டாடும் வகையில், உலக வன விலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. முதன்முதலாக 1931-ம் ஆண்டு, இத்தாலியின் புளோரன்ஸ் நகரில்தான் வனவிலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. 


அதன் பின்னர், விலங்குகள் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டுவருகிறது. 


இறைத் தூதுவராக போற்றப்பட்ட அசிசி, தனது வாழ்நாளில் விலங்குகள்மீது அன்புகொண்ட ஆர்வலராக விளங்கினார். 


அவற்றைக் காப்பதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்தார்.


இதன் காரணமாகவே அவரது நினைவு நாள், உலக விலங்குகள் தினமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கடைபிடிக்கப்படுகிறது. 


உலகில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை தன்மையைப் பொறுத்தே, ஒவ்வோர் இடத்தின் சூழலியல் மண்டலமும் இயங்குகிறது. 


விலங்குகள்தான் மனிதனைப் பாதுகாத்து, மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றன. 


இயற்கையும் விலங்குகளும் ஒன்றோடொன்று இணைந்த சூழல்தான், மனிதனின் வாழ்க்கையைச் சிறப்பாக வழிநடத்த முடியும். 


இப்போதைய காலகட்டத்தில், விலங்குகளுக்கு மனிதர்களாகிய நாம் தீமை செய்யாமல் இருந்தாலே போதும், விலங்குகள் தங்களைத் தங்களே பாதுகாத்துக்கொள்ளும்.

Reading Time:

Sunday, October 3, 2021

திங்கட்கிழமை முதல் விசேட கண்காணிப்பு!
October 03, 20210 Comments

2021 October 03

வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து தொடர்பில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி செயற்படும் பஸ்கள் தொடர்பில் விசேட கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் போது ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்வதோடு , பஸ் அனுமதி பத்திரங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மேல் மாகாணத்தில் சுமார் 6000 பஸ்கள் முன்னர் சேவையில் ஈடுபட்டன. எனினும் கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 900 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டன. ஏனெனில் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் அந்த தொழில்களைக் கைவிட்டு வேறு தொழில்களுக்குச் சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


அத்துடன் எந்த காரணத்திற்காகவும் சுகாதார விதிமுறைகளை மீறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும், பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

Reading Time:
மதுபான நிலையங்களுக்கு இன்று பூட்டு
October 03, 20210 Comments

மதுபான நிலையங்களுக்கு இன்று பூட்டு



2021 October 03


IMW▪️சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (03) நாட்டில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.


IMW▪️இந்நிலையில், நாளைய தினம் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

❁ ════ ❃•  *IMW*  •❃ ════ ❁

Reading Time:

Saturday, October 2, 2021

அவதானம் அதிகரிக்கும் போதை பாவனை
October 02, 20210 Comments
அவதானம் அதிகரிக்கும் போதை பாவனை

🟥In Sri Lanka - On, October 02, 2021


✅மூன்று வயது சிறுவனை ஈடுபடுத்தி போதைப்பொருள் கடத்தல்....!

வேவல்தெனிய பிரதேசத்தில் மூன்று வயது சிறுவனை ஈடுபடுத்தி போதைப்பொருள் கடத்தலை முன்னெடுத்துவந்த குழுவினரை மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்தக் கடத்தல் நடவடிக்கைக்குச் சிறுவனின் தாயும் உதவியளித்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


சந்தேக நபர்களைக் கைது செய்து விசாரணைகளுக்கு உட்படுத்தியதன் பின்னர், சிறுவனின் உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிராம் போதைப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Reading Time:
🇱🇰⭕ *சுகாதார அமைச்சின் கீழ் தேசிய உளநல நிறுவனம் நடாத்தும்  கட்டுரை மற்றும் சித்திரப் போட்டி..*
October 02, 20210 Comments

 🏆competition notice-2021 🏆



🏆 *ESSAY AND ART COMPETITION- HEALTH MINISTRY*🏆 


✅ போட்டிகளின் வகை 

1️⃣கட்டுரைப்போட்டி (வயது 12-18 வரை)

2️⃣சித்திரப்போட்டி-(12 வயதிற்கு கீழ் )

3️⃣சித்திரப்போட்டி-(வயது12--18 வரை)


✅ *வெற்றி பெறுபவர்களுக்கு பெறுமதியான பண பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்..*


✅ *பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்..*


*முழு விபரங்களை பெற்றுக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்* -

    👇👇👇👇👇

 Click Here........


🌐 இணையத்தின் மூலமாக ஆக்கங்களை அனுப்பி வைக்க முடியும்..


🗓️ *முடிவு திகதி - 05.10.2021*

Reading Time:
ஓய்வூதியம் தொடர்பில் ரணில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
October 02, 20210 Comments

2021 October 02.

 கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்பே இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது என ஐ.தே.க வின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க ( Ranil Wickremesinghe) தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஓய்வூதியம் வழங்கக்கூட அரசாங்கத்திடம் பணம் இல்லையென தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசின் பொருளாதார திட்டங்கள் கைவிடப்பட்டமையே தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம். மாறாக முன்னைய அரசு 2019-இல் தனது பொருளாதார கொள்கையை மாற்றியதை தொடர்ந்தே பொருளாதார வீழ்ச்சி ஆரம்பமானது.

ஏனைய நாடுகளில் கொரோனாவால் உருவான பிரச்சினைகள் மாத்திரம் காணப்படுகின்றது. ஆனால் இலங்கையில் கொரோனாவாலும் அரசாங்கத்தினாலும் ஏற்பட்ட பிரச்சினைகள் மாத்திரமே காணப்படுவதாக ரணில்  (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

நேபாளத்தை விட இலங்கையின் வெளிநாட்டு நாணயக்கையிருப்பு குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Reading Time:

Thursday, September 30, 2021

இலங்கையர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!
September 30, 20210 Comments

இலங்கையர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!



2021:09:30

================ 

இலங்கையர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


60 வயதுக்கு மேற்பட்டோர், மற்றும் 30 – 60 வயதுக்கு உட்பட்ட சிறுநீரக கோளாறு, புற்று நோய் போன்ற பாரதூரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கும் மூன்றாவது தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.



Reading Time:

Wednesday, September 29, 2021

நபிகள் பற்றி தவறாக கூறியவருக்கு மரண தண்டனை...!
September 29, 20210 Comments

 Info Mau World


2021 September 29

பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் கல்லூரி முதல்வா் சல்மா தன்வீருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.


✅இதுகுறித்து ஊடகங்கள் கூறியதாவது :-


நிஷ்டாா் காலனி பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரி முதல்வராக இருந்து வந்த சல்மா தன்வீா் மீது லாகூா் போலீஸாா் கடந்த 2013 ஆம் ஆண்டு மதநிந்தனை வழக்கு பதிவு செய்தனா்.


நபிகள் நாயகம் இஸ்லாம் மதத்தின் கடைசி இறைதூதா் இல்லை என்று அவா் கூறியதாக குற்றம் சாட்டப்படுகிறது.


இதுதொடா்பாக லாகூரின் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், சல்மா தன்வீா் மனநிலை சரியில்லாதவா் என்பதால் அவரை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அவரது வழக்குரைஞா் வாதாடினாா்.


எனினும், அந்த வாதத்தை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.


இந்த நிலையில், நபிகள் நாயகம் குறித்து சல்மா கூறிய கருத்து மதநிந்தனைக் குற்றம் எனவும் அந்தக் குற்றத்துக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி மன்சூா் அகமது திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


பாகிஸ்தானின் சா்ச்சைக்குரிய மதநிந்தனைச் சட்டத்தின்கீழ் இதுவரை 1,472 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.


சுதந்திரத்துக்கு முன்பிலிருந்தே இருந்து வந்த அந்தச் சட்டம், முன்னாள் சா்வாதிகாரி ஜியாவுல் ஹக்கின் ஆட்சிக் காலத்தின்போது மிக் கடுமையாக்கப்பட்டது.


அந்தச் சட்டத்தின்கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்படுவோருக்கு மரண தண்டனை வரை விதிக்க முடியும்.


மதநிந்தனைக் குற்றம் சாட்டப்படுவோருக்கு தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைப்பதற்கான முழு உரிமை மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. 


மேலும், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே பெரும்பாலானவா்கள் மீது மதநிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக மனித உரிமை ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

Reading Time:

Tuesday, September 28, 2021

இன்று நள்ளிரவு முதல் தடுப்பூசி பெற்று இலங்கை வருவோருக்கு வீடு செல்ல அனுமதி
September 28, 20210 Comments

இன்று நள்ளிரவு முதல் தடுப்பூசி பெற்று இலங்கை வருவோருக்கு வீடு செல்ல அனுமதி

                    Info Mau world

2021 September 28 

IMW▪️இலங்கைக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள், விமானத்தில் ஏறும் முன் மேற்கொண்ட கொவிட்-19 தொற்று தொடர்பான PCR முடிவுகளுக்கமைய, மீண்டும் இலங்கையில் PCR சோதனை மேற்கொள்ளாது விமான நிலையத்திலிருந்து வீடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


IMW▪️இன்று நள்ளிரவு (29) முதல் இந்நடைமுறை அமுலுக்கு வருவதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.


IMW▪️இதற்காக, கொவிட்-19 தடுப்பூசிகள் இரண்டையும் முழுமையாக பூர்த்தி செய்து 14 நாட்கள் பூர்த்தி செய்திருப்பது கட்டாயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


IMW▪️சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் இன்று (28) பிற்பகல் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், இது தொடர்பான தொழில்நுட்பக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


IMW▪️சுற்றுலா அமைச்சர் பிரசன்ன  வேண்டுகோளின் பேரில் இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதுடன், இதில் சுகாதார மற்றும் சுற்றுலா அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் சுற்றுலா துறையில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.


IMW▪️இதேவேளை, முழுமையாக தடுப்பூசி போடாத வெளிநாட்டவர்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்படும் ஹோட்டலுக்கு, தனிமைப்படுத்தல் உயிர்க் குமிழி பாதுகாப்பின் அடிப்படையில், செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவுள்ளதுடன், அங்கு வைத்து அவர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். 


எனினும், இலங்கையர்களுக்கு விமான நிலையத்தில் அல்லது அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் PCR சோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் அவர்களுக்கு தொற்று ஏற்படாவிட்டால், அவர்களை வீட்டிற்கு அனுப்ப வாய்ப்பு உள்ளதாகவும், அவர்களுக்கு 12ஆவது நாளில் மீண்டும் மேற்கொள்ளும் PCR சோதனையில் அவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படாவிட்டால், அவர்களை சமூகத்துடன் இணைக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.


IMW▪️வீட்டு தனிமைப்படுத்தல் வசதிகள் இல்லாதவர்கள், அரசாங்க தனிமைப்படுத்தல் மையங்களில் அல்லது அவர்கள் விரும்பும் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இது தொடர்பான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


IMW▪️தற்போது, ​​நாட்டிற்கு வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன் கட்டாயம் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், அவர்களது சோதனை முடிவுகளின் அடிப்படையில், அவர்கள் தொற்றாளர்களாக இல்லையெனின் மாத்திரம் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். 


IMW▪️அத்துடன் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, இரண்டு வாரங்கள் பூரணப்படுத்தப்பட்ட பயணிகள் இலங்கை திரும்பும்போது, அவர்களுக்கு மீண்டும் PCR சோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளுக்கமைய, அவர்கள் சமூகத்தில் இணைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


*உங்கள் தேவை எங்கள் சேவை*


❁ ════ ❃•*IMW*  •❃ ════ 

Reading Time:
உங்களுடைய தனித்தன்மை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ?
September 28, 20210 Comments




             EFFECTIVE

*_ASSESSMENT OF PERSONALITY !_*


*{{ DO YOU KNOW WHAT IS YOUR PERSONALITY ?? & HOW TO IDENTIFY YOUR PERSONALITY ?? }}*


*((உங்களுடைய தனித்தன்மை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ??*

*உங்கள் ஆளுமையை எப்படி அடையாளம் காண்பது ??))*


*யாருக்கு ?? *

*_”மத்ரஸா” பெரிய வகுப்பு  மாணவர்கள் இன்னும் உலமாக்களுக்கான மிகவும் சிறந்த வாய்ப்பு_*



*_வளவாளர் :_*

*_அன்பFஸ் முப்தி தேவபந்தி ஹஸரத்_*


   *Conducted By_*

*M A M ANFAS Mufthi Hashimi Deobandi*

Senior Lecture Dipartment of Higher Education Deenyia College,

_Psychologist / Counselor /Motivational speaker / Consultant Drug addicted,_

Practitioner *IBNLP*(Canada), 

Member Divisional Ayurveda preservation Board.

 *Participants* : Above 16 years old “Madrasa” students & “Ulama”

📲 மேலதிக தகவல்களுக்கு

Abdhurrahman  Hazarath 

0760176761

Visit google form..............




Reading Time:
 சினோர்பாம் குறித்து மக்கள் அச்சமடையவேண்டிய அவசியமில்லை – மருத்துவர்கள்.
September 28, 20210 Comments

சினோர்பாம் குறித்து மக்கள் அச்சமடையவேண்டிய அவசியமில்லை – மருத்துவர்கள்.



      INFO MAU WORLD


2021 September 28


சினோர்பார்ம் குறித்து மக்கள் அச்சப்படவேண்டிய சந்தேகமடையவேண்டிய தேவையில்லை என மருத்துவதுறை சார்ந்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


️பெருமளவானவர்கள் சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுள்ளனர் இதன்காரணமாக உயிரிழப்புகளும் பாதிப்புகளும் குறைவடைந்துள்ளன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தடுப்பூசி வழங்கப்பட்டவர்களில் அதிகளவானவர்களிற்கு சினோபார்மே வழங்கப்பட்டது என தெரிவித்துள்ள மருத்துவர் எரங்க நாரங்கொட இதுவே உயிரிழப்புகள் குறைவடைவதற்கும் தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்கள் குறைவதற்கும் நிமோனியாவினால் பாதிக்கப்படுவது குறைவதற்கும்  காரணமாக அமைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.


சினோர்பார்ம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


18 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு குறித்த ஒரு தடுப்பூசியை வழங்கவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்யவில்லை அனைத்து தடுப்பூசிகளும் ஒரேமாதிரியான பலனை அளிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Reading Time:
*வாட்ஸ்அப்பில் விரைவில் வெளியாக உள்ள புதிய அப்டேட்டுகள் - முழு விவரம்.*
September 28, 20210 Comments

 

வாட்ஸ்அப்பில் விரைவில் வெளியாக உள்ள புதிய அப்டேட்டுகள் - முழு விவரம்.


      IFO MAU WORLD 


செப்டம்பர் - 28, செவ்வாய் - 2021


IMW▪️வாட்ஸ்அப் ஆப்பை 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உடனடி செய்தியிடல் தளமாகும். 


IMW▪️வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பிளாட்பார்மை மேலும் யூஸர் பிரெண்ட்லியாக மாற்ற, அவ்வப்போது புதிய அப்டேட்ஸ்களை வெளியிட்டு வருகிறது. அண்மையில் பல வாட்ஸ்அப் அப்டேட்கள் வெளியிடப்பட்டுள்ளன, மேலும் எதிர்காலத்தில் யூசர்கள், அவர்களின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களை ஈர்க்க உதவும் வகையில் பல்வேறு அப்டேஸ்களை வெளியிட உள்ளது.


IMW▪️Android சாதனங்களிலிருந்து iOS சாதனங்களுக்கு அரட்டைகளை மாற்றுவது, Disappearing messages அம்சத்தில் மேம்பாடு, புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக அனுப்பும் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் வரவுள்ள அப்டேட்ஸ்களில் வெளியிட உள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,


👉 *ஹை - குவாலிட்டி புகைப்படங்கள்.*


IMW▪️வாட்ஸ்அப்பில் தற்போது ஹை - குவாலிட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதற்கு முக்கிய காரணம், வாட்ஸ்அப் கம்ப்ரஸ் அம்சத்தில் அனுப்புவதால் அதன் குவாலிட்டியில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் தற்போது யூசர்களுக்கு பெஸ்ட் குவாலிட்டி (Best Quality), டேட்டா சேவர் (Data Saver) உள்ளிட்ட அம்சத்தை வழங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் யூசர்கள் உயர்தர படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியும்.


👉 *Disappearing messages அம்சத்தில் மேம்பாடு.*


IMW▪️வாட்ஸ்அப் சமீபத்தில் அறிமுகப்படுத்திய காணாமல் போகும் செய்தி (Disappearing messages) அம்சத்தை தொடந்து 'ஒருமுறை பார்க்கவும்' (View once) என்பதை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த அம்சத்தை மேம்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 


குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அல்லது ஏழு நாட்களுக்குப் பிறகு செய்திகளை தானாகவே நீக்குகிறது. இந்த நிலையில் எதிர்கால அப்டேட்டில் அனைத்து புதிய உரையாடல்களுக்கும் யூசர்கள் பயனர்கள் காணாமல் போகும் செய்திகளை தானாகவே செயல்படுத்த முடியும் என கூறப்படுகிறது.


👉 *காண்டாக்ட் பிரைவசி*


IMW▪️வாட்ஸ்அப் ஏற்கனவே யூசர்கள் தங்கள் ப்ரொபைல் புகைப்படம், தனிப்பட்ட விவரம், ஸ்டேட்டஸ், Last Seen ஆகியவற்றை ‘My contacts’, ‘Everyone’ and ‘Nobody’ என்பதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தெரியும்படி வைத்துக்கொள்ளும் அம்சம் உள்ளது. 


IMW▪️தற்போது வரவுள்ள அப்டேட்டில் ப்ரொபைல் புகைப்படம், தனிப்பட்ட விவரம், ஸ்டேட்டஸ், Last Seen ஆகியவற்றை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் காட்டும் வகையில் கொண்டு வர உள்ளது. இதற்காக ‘My contacts except’ என்ற புதிய அம்சத்தை இணைக்க உள்ளனர்.


👉 *புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக அனுப்பும் வசதி*


𝑰𝑴W▪️புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவாக வெளியிட உள்ளது. இதன்மூலம் நீங்கள் ஒரு படத்தை வாட்ஸ்ஆப்பில் அனுப்ப முயற்சிக்கும் போது அப்டேட்டில் வர உள்ள புதிய பொத்தானை பயன்படுத்தி ஸ்டிக்கர்களாக படங்களை அனுப்ப முடியும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் அனைத்து யூசர்களையும் கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Reading Time:
  இன்று முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் Google-Gmail-YouTube​ இயங்காது.
September 28, 20210 Comments

  இன்று முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் Google-Gmail-YouTube​ இயங்காது.


2021 September 28

நீங்கள் பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனையும் பயன்படுத்துகிறீர்களா? 

ஆம் எனில், உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி இருக்கிறது. இன்று முதல், கூகுள் மேப், யூடியூப், ஜிமெயில் போன்ற சேவைகள் உங்கள் போனில் வேலை செய்வதை நிறுத்திவிடும். இதன் பின்னணியில் உள்ள காரணத்தைப் பற்றி பேசுகையில், கூகுள் மேப்ஸ், யூடியூப் மற்றும் கூகுள் காலெண்டரை ஆண்ட்ராய்டு பதிப்பு 2.3 பதிப்பில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியாது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் Android 3 க்கு புதுப்பிக்க வேண்டும்.


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை கூகுள் நிறுத்துகிறது. இது செப்டம்பர் 27, 2021 இன்று  முதல் தொடங்கும், அதன் பிறகு இதுபோன்ற பயனர்கள் கூகுள் டிரைவ், கூகுள் அக்கவுண்ட், ஜிமெயில் மற்றும் யூடியூப்பை தங்கள் போன்களில் அணுக முடியாது.


யூசர்களின் போன்கள் இப்போது ஆண்ட்ராய்டின் குறைந்தபட்சம் 3.0 Honeycomb பதிப்பைக் கொண்டிருக்க வேண்டும், இருப்பினும் பழைய பதிப்புகளைக் கொண்ட யூசர் தங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் உலாவி மூலம் அணுக முடியும் என்று கூகுள் விடுவித்துள்ளது.


*GMAIL, YOUTUBE மற்றும் GOOGLE நிரந்தரமாக மூடப்படும்:*


ஆண்ட்ராய்டு 2.3 பதிப்பு இப்போது மிகவும் பழையது என்று கூகிள் நம்புகிறது, ஏனெனில் இப்போது ஆண்ட்ராய்டு 12 தொடங்கப்பட உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்த பழைய பதிப்பில் பயனர்களின் தரவு கசிவு அபாயமும் அதிகரித்துள்ளது. இந்த பதிப்பில் ஜிமெயில், யூடியூப் மற்றும் கூகுளை நிறுத்த நிறுவனம் முடிவு செய்ததற்கு இதுவே காரணம்.இதன் பொருள் நீங்கள் இப்போது வரை ஆண்ட்ராய்டு 2.3 பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இன்று முதல் உங்களுக்கு ஜிமெயில், யூடியூப் மற்றும் கூகுள் சேவைகள் வழங்கப்படாது. உங்கள் போன் ஆண்ட்ராய்டு 3.0 அல்லது அதற்கு மேல் இயங்கினால், இந்த சேவைகளின் பலனை நீங்கள் பெறுவீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

 

9to5Google ஒரு யூசருக்கு கூகுள் அனுப்பிய ஈமெயில் ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளது. ஆண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 மற்றும் அதற்கும் குறைவான யூசர் ஜிமெயிலில் உள்நுழையும்போது username அல்லது  password error பிழையின் மெசேஜ் கிடைக்கின்றது.

 

இது தவிர, ஒரு யூசர் அந்த போனில் ஒரு புதிய கூகுள் அக்கவுண்ட் உருவாக்கினால் அல்லது புதிய அக்கவுண்டில் லாகின் செய்தால் அல்லது பாக்ட்டீரி ரீசெட் செய்தால், ஒவ்வொரு விஷயத்திலும் அவருக்கு ஒரு பிழை வரும். இது தவிர, பழைய வேர்சின் கொண்ட யூசர் கூகுள் அக்கவுண்ட்  பாஸ்வேர்ட் மாற்றும்போது பிழையைப் பெறுவார்கள்.


*ANDROID 2.3 பதிப்பைப் பயன்படுத்தும் பயனர்கள் என்ன செய்ய வேண்டும்:*


நீங்கள் இன்னும் ஆண்ட்ராய்டு 2.3 பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் ஆண்ட்ராய்டு 3 க்கு செல்ல வேண்டும். இதைச் செய்தால் மட்டுமே நீங்கள் யூடியூப், ஜிமெயில் மற்றும் கூகுளைப் பயன்படுத்த முடியும். அதே நேரத்தில், நீங்கள் புதுப்பிக்கப்பட்ட பதிப்பிற்கு மேம்படுத்த முடியாவிட்டால், நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். நீங்கள் விரும்பினால், குறைந்த விலையில் ஸ்மார்ட்போனையும் வாங்கலாம். இப்போதெல்லாம் சந்தையில் பல ஸ்மார்ட்போன்கள் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளுடன் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

Reading Time:
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் நிலக்கரி ஏற்றி இறக்கும் இயந்திரம் கரையொதுங்கியது
September 28, 20210 Comments

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் நிலக்கரி ஏற்றி இறக்கும் இயந்திரம் கரையொதுங்கியது


2021 September 27


Colombo (News 1st) புத்தளம், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் நிலக்கரியை ஏற்றி இறக்கும் பாரிய இயந்திரமொன்று நேற்று (26) இரவு கரையொதுங்கியுள்ளது. 


புத்தளம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் வீசிவரும் கடுங்காற்று காரணமாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலக்கரி ஏற்றி இறக்கும் பாரிய இயந்திரம் நுரைச்சோலை -இலந்தையடி பகுதியில் கரையொதுங்கியுள்ளது. 


வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்படும் நிலக்கரியை நடுக்கடலுக்கு சென்று ஏற்றி இறக்கும் குறித்த இயந்திரம் சுமார் 120 அடி நீளம் கொண்டதாகும்.

Reading Time:

Monday, September 27, 2021

ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடடு
September 27, 20210 Comments

ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடடு

=========================


2021 September 27

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.


அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், அல்ஹாபிழ் நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலி சப்ரி ரஹீம் மற்றும் சட்டத்தரணி முஸர்ரப் மற்றும் இசாக் ரஹ்மான் ஆகியோரே இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.


அண்மையில் சிங்கள ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த ஞானசார தேரர், கடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்திய குழு மற்றும் அவர்களை அந்த நடவடிக்கையில் ஈடுபட தூண்டிய விடயம் சில குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன் அவர்கள் வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்கு முழுக்காரணம் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reading Time:

@way2themes