நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் நிலக்கரி ஏற்றி இறக்கும் இயந்திரம் கரையொதுங்கியது

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் நிலக்கரி ஏற்றி இறக்கும் இயந்திரம் கரையொதுங்கியது


2021 September 27


Colombo (News 1st) புத்தளம், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் நிலக்கரியை ஏற்றி இறக்கும் பாரிய இயந்திரமொன்று நேற்று (26) இரவு கரையொதுங்கியுள்ளது. 


புத்தளம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் வீசிவரும் கடுங்காற்று காரணமாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலக்கரி ஏற்றி இறக்கும் பாரிய இயந்திரம் நுரைச்சோலை -இலந்தையடி பகுதியில் கரையொதுங்கியுள்ளது. 


வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்படும் நிலக்கரியை நடுக்கடலுக்கு சென்று ஏற்றி இறக்கும் குறித்த இயந்திரம் சுமார் 120 அடி நீளம் கொண்டதாகும்.

No comments:

Post a Comment

MA UBAIDULLAH

Pages