ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடடு

ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடடு

=========================


2021 September 27

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.


அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், அல்ஹாபிழ் நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலி சப்ரி ரஹீம் மற்றும் சட்டத்தரணி முஸர்ரப் மற்றும் இசாக் ரஹ்மான் ஆகியோரே இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.


அண்மையில் சிங்கள ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த ஞானசார தேரர், கடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்திய குழு மற்றும் அவர்களை அந்த நடவடிக்கையில் ஈடுபட தூண்டிய விடயம் சில குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன் அவர்கள் வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்கு முழுக்காரணம் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

MA UBAIDULLAH

Pages