பரீட்சைகள் திணைக்களத்தில் ஏற்படவுள்ள மாற்றம் - A UBAIDULLAH

Monday, September 27, 2021

பரீட்சைகள் திணைக்களத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

பரீட்சைகள் திணைக்களத்தில் ஏற்படவுள்ள மாற்றம்.



2021 September 27

பரீட்சைகள் திணைக்களத்தின் வரலாற்றில் முதற்தடவையாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்களின் ஊடாக பொருத்தமான நபரை தெரிவு செய்வதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

️அதன்படி ,காலமும் குறித்த பதவிக்கு நீண்ட கால சேவை அனுபவத்தின் கீழ் கல்வி நிர்வாக சேவையின் முதல்தர அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தார்கள்.


எவ்வாறாயினும், தற்போது பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் பதவிக்காக பொருத்தமான தேர்ச்சி மட்டத்தை கொண்டிருப்பவர்கள் கல்வி அமைச்சரின் நிர்வாக சேவையில் இல்லையென்பதால் இவ்வாறு விண்ணப்பங்களின் ஊடாக பொருத்தமான நபரை தேர்ந்தெடுப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.


இப்பதவிக்கான விண்ணப்பங்களை விரைவில் வெளியிட எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.


மேலும் முன்னதாக, முன்னாள் கல்வி அமைச்சர் ரிச்சட் பத்திரனவின் காலத்தில் மாத்திரமே குறித்த பதவிக்கு வெளிநபர் ஒருவர் நியமிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

MA UBAIDULLAH

@way2themes