இஸ்லாமிய நெஞ்சங்களே...!!!!! விழித்துக்கொள்ளுங்கள்
வீண் விடையங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்
விடிய விடிய தொலைபேசியில் தேவையற்ற வீண் தொடர்புகள்
பஜ்ர் அதானை கடந்தும்
உறங்கும் சோர்வான விழிகள்
தொழுகையை மறந்து
பப்ஜி விளையாடும் கைகள்
அல்குர்ஆன் வரிகளையே மறந்த
கறுமை உள்ளங்கள்
ஒருமுறையாவது சலவாத்து உச்சரிக்கத நாக்கு
டேட்டா போடுவதற்காக
மட்டுமே அசையும் கால்கள்
யாரென்றே தெரியாத
பெண்களிடம் மணிக்கணக்கில் கதை பேசி நட்பு எனும் போர்வைலே
விபச்சாரத்தின் சுவடுகள்
நல்லவனாய் நயனம் செய்து
முகத்திரை போட்டுக் கொண்டு தனது வல்லமையால் ஹராமின் வழியில் தடுமாறும் இஸ்லாமிய நெஞ்சங்களே...!!!!!
விழித்துக் கொள்ளுங்கள்
நிச்சயம் ஒரு நாள்
உற்சாகமான உங்கள் உடல்கள் உறங்கப் போகும் காலம் வரும்
மரணம் நெருங்கும் முன்னே மன்னரைக்காய் சேமிய்யுங்கள் மனிதப் புனிதர்களாக
மண் மீது மிளிர்ந்ததிடுங்கள்
மரணப்படுக்கையில் கழித்து வந்த வாலிபத்தை நினைத்து
மனம் நொந்து போகும்
வண்ணம் வாழ்ந்து விடாதீர்கள்
சுவனத்து பூஞ்சோலையில்
சுதாகர் பலருடன்
சுகமாக வாழும் வாழ்வின்
இலக்காக கொள்ளுங்கள்
No comments:
MA UBAIDULLAH