மோசடிகள் அதிகரிப்பு - அவதானமாக இருந்து கொள்ளுங்கள்...!

    மோசடிகள் அதிகரிப்பு - அவதானமாக இருந்து கொள்ளுங்கள்...!



🟥In Sri Lanka - On, September 26, 2021


புத்தளம் பொலிஸாரின் பேரில் நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது.


அது மாத்திரம் அல்லாமல் இன்னும் பல மோசடிகள் இடம்பெற்று வருகின்றது. 👇


✅குலுக்கல் முறையில் நீங்கள் வெற்றியாளர் என குறுந்தகவல் மூலமாக தகவலை தெரியப்படுத்தி மோசடி.


✅10 இலட்சம் ரூபாவினை நீங்கள் வெற்றி கொண்டுள்ளீர்கள் அதனை பெற்றுக்கொள்ள ஒரு இலட்சம் வரி செலுத்தும் படி மோசடி.


✅வெளிநாட்டிலிருந்து நபரொருவர் நண்பராக பழகி தொலைபேசி மற்றும் பணம் நகைகளை அனுப்புவதாக கூறி அதனை பெற்றுக்கொள்ள விமான நிலையத்தில் நீங்கள் இரண்டு லட்சம் பணம் செலுத்த வேண்டும் என்று மோசடி.


✅டயலாக் (Dialog) நிறுவனத்திடமிருந்து தொடர்பை ஏற்படுத்துகின்றோம் எனக் கூறி 15 இலட்சம் பணத்தினை பரிசாக வெற்றி கொண்டுள்ளீர்கள் என தெரிவித்து அதற்காக நீங்கள் ஐம்பதினாயிரம் ரூபாவினை EZ Cash செய்யும்படி மோசடி.


எனவே இவ்வாறான பல சம்பவங்கள் எமது நாட்டில் இடம்பெற்று வருகின்றது.


தயவுசெய்து இத்தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்தி, பகிர்ந்து பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

MA UBAIDULLAH

Pages