வரலாற்றில் இன்று செப்டம்பர் 25.2021

 🗼🌏வரலாற்றில் இன்று செப்டம்பர் 25.2021  🌏🗼



 செப்டம்பர் 25.2021

செப்டம்பர் 25  கிரிகோரியன் ஆண்டின் 268 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 269 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 97 நாட்கள் உள்ளன.

*இன்றைய தின நிகழ்வுகள்.* 


👉275 – உரோமில் பேரரசர் அவுரேலியன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டசீட்டசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். 


👉 762 – அப்பாசியக் கலீபகத்திற்கு எதிராக அலீதுகள் கிளர்ச்சியில் இறங்கினர். 


👉1237 – இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் தமது பொது எல்லைகளை வரையறுக்கும் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன. 


👉1396 – உதுமானியப் பேரரசர் முதலாம் பயெசிது கிறித்தவ இராணுவத்தை நிக்கோபோலிசு நகரில் தோற்கடித்தார். 


👉1513 – எசுப்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பெருங்கடல் ஒன்றை அடைந்தார். இது பின்னர் பசிபிக் பெருங்கடல் என்ற பெயரைப் பெற்றது. 


👉1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப்பத்திரிகை (Publick Occurrences Both Foreign and Domestick) முதலும் கடைசித் தடவையாகவும் வெளிவந்தது. இது அரசினால் தடை செய்யப்பட்டது. 


👉1789 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க அரசியலமைப்பிற்கு உரிமைகளுக்கான 10 திருத்தங்கள் உட்பட 12 திருத்தங்களைக் கொண்டு வந்தது. 


👉1862 – செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 


👉1868 – இளவரசர் அலெக்சி அலெக்சாந்திரொவிச்சை ஏற்றிச் சென்ற உருசியப் பேரரசின் அலெக்சாந்தர் நேவ்ஸ்கி கப்பல் யுட்லாண்டு அருகே மூழ்கியது. 


👉1906 – கரையிலிருந்து படகை வழி நடத்தும் முறை எசுப்பானியாவில் இயக்கிக் காட்டப்பட்டது. தொலைக் கட்டுப்படுத்தி பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். 


👉1926 – அடிமை வணிகத்தைத் தடுக்கும் பன்னாட்டு ஒப்பந்தம் உலக நாடுகள் அணியின் ஆதரவில் கையெழுத்திடப்பட்டது. 


👉1942 – இரண்டாம் உலகப் போர்: பெரும் இனவழிப்பில் இருந்து தப்பிய யூதர்களை அகதிகளாக ஏற்க சுவிட்சர்லாந்து மறுத்தது. 


👉1956 – அத்திலாந்திக் பெருங்கடலைக் கடந்த முதலாவது தொலைபேசிக் கம்பித்திட்டம் TAT-1 நிறுவப்பட்டது. 


👉1957 – ஐக்கிய அமெரிக்காவில் ஆர்கன்சஸ் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9 கருப்பின மாணவர்கள் 300 இராணுவத்தினர்களின் பாதுகாப்புடன் பாடசாலை சென்றனர். 


👉1959 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சோமராம தேரர் என்ற புத்த பிக்கு ஒருவரினால் சுடப்பட்டுப் படுகாயமடைந்து அடுத்த நாள் இறந்தார். 


👉1962 – வடக்கு ஏமன் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. ஏமன் மன்னர் இமாம் அல்-பத்ர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அப்துல்லா அல்-சலால் ஏமனை ஒரு குடியரசாக்கி, தன்னை அதன் அரசுத்தலைவராக அறிவித்தார். 


👉1962 – அல்சீரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது. 


👉1964 – மொசாம்பிக்கில் போர்த்துகலுக்கு எதிரான விடுதலைப் போர் ஆரம்பமானது. 


👉1978 – கலிபோர்னியாவில் சான் டியாகோ நகரில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் 144 பேர் உயிரிழந்தனர். 


👉1981 – பெலீசு ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது. 


👉1983 – வட அயர்லாந்தில் 38 ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகள் சிறையை உடைத்து தப்பினர். 


👉1992 – செவ்வாய்க் கோளை நோக்கிய “செவ்வாய் நோக்கி” என்ற விண்கலத்தை நாசா ஏவியது. 11 மாதங்களின் பின்னர் இவ்விண்கலம் செயலிழந்தது. 


👉1992 – யாழ்ப்பாணம், பூநகரியில் 62 இராணுவக் காவலரண்கள் விடுதலைப் புலிகளினால் தாக்கி அழிக்கப்பட்டன. 


👉2002 – குஜராத் மாநிலத்தில் இந்துக் கோயில் ஒன்றில் இடம்பெற்ற வன்முறையில் 32 பேர் உயிரிழந்தனர். 


👉2003 – சப்பானில் ஒக்காய்டோ என்ற இடத்தில் 8.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில், 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.. 


👉2015 – இலங்கையின் மலையகத்தில் இறம்பொடையில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். 


👉2017 – இந்தோனேசியாவில் பாலித் தீவில் ஆகூங்க் மலையில் எரிமலை வெடித்தது. 


*இன்றைய தின பிறப்புகள்.* 


👉1644 – ஓலி ரோமர், தென்மார்க்கு வானியலாளர் (இ. 1710) 


👉1846 – விளாதிமிர் கோப்பென், உருசிய-செருமானிய அறிவியலாளர், காலநிலை ஆய்வாளர் (இ. 1940) 


👉1848 – செர்கேய் பாவ்லோவிச் கிளாசனாப், சோவியத் ஒன்றிய வானியலாளர் (இ. 1937) 


👉1857 – மூலம் திருநாள், திருவிதாங்கூர் மன்னர் (இ. 1924) 


👉1881 – லூ சுன், சீன எழுத்தாளர் (இ. 1936) 


👉1897 – வில்லியம் பால்க்னர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1962) 


👉1899 – உடுமலை நாராயணகவி, தமிழகக் கவிஞர், பாடலாசிரியர் (இ. 1981) 


👉1914 – தேவிலால், இந்திய அரசியல்வாதி (இ. 2001) 


👉1916 – தீனதயாள் உபாத்தியாயா, இந்தியப் பொருளியலாளர், சமூகவியலாளர் (இ. 1968) 


👉1920 – சதீஷ் தவான், இந்தியப் பொறியியலாளர் (இ. 2002) 


👉1922 – நாத் பாய், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1971) 


👉1924 – அ. பூ. பர்தன், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2016) 


👉1939 – பெரோசு கான், இந்திய நடிகர், இயக்குநர் (இ. 2009) 


👉1946 – பிசன் சிங் பேடி, இந்தியத் துடுப்பாளர். 


👉1952 – பெல் ஹூக்சு, அமெரிக்க எழுத்தாளர். 


👉1952 – கிறிஸ்டோபர் ரீவ், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (இ. 2004) 


👉1968 – வில் சிமித், அமெரிக்க நடிகர், பாடகர். 


👉1977 – திவ்யா தத்தா, இந்தி, பஞ்சாபி நடிகை. 


👉1977 – ஏ. ஆர். முருகதாஸ், தமிழகத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர். 


*இன்றைய தின இறப்புகள்.* 


👉1777 – யோகான் என்றிச் இலாம்பெர்ட், சுவிட்சர்லாந்து-செருமானியக் கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1728) 


👉1958 – ஜான் பி வாட்சன், அமெரிக்க உளவியலாளர் (பி. 1878) 


👉2003 – எட்வர்டு செயித், பாலத்தீன-அமெரிக்க மெய்யியலாளர் (பி. 1935) 


👉2007 – ஜனா கிருஷ்ணமூர்த்தி, தமிழக அரசியல்வாதி (பி. 1928) 


👉2011 – வாங்கரி மாத்தாய், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கென்ய சூழலியலாளர் (பி. 1940) 


👉2017 – பீலி சிவம், தமிழகத் திரைப்பட நடிகர் (பி. 1938) 


👉2018 – பி. வி. எஸ். வெங்கடேசன், தமிழக அரசியல்வாதி (பி. 1947) 


👉2020 – எஸ். பி. பாலசுப்ரமணியம், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1946) 


*இன்றைய தின சிறப்பு நாள்.* 


👉புரட்சி நாள் (மொசாம்பிக்) 


👉தேசிய இளைஞர் நாள் (நவூரு) 



No comments:

Post a Comment

MA UBAIDULLAH

Pages