A UBAIDULLAH: World News
Showing posts with label World News. Show all posts
Showing posts with label World News. Show all posts

Thursday, October 14, 2021

அன்பார்ந்த மக்களே தயவு செய்து மிக அவதானமாக இருக்கவும்
October 14, 20210 Comments

Games 

 தொலைபேசி பாவனை



........................................

Mobile Games



✅பிள்ளைகளுக்கு போன் கொடுக்க வேண்டாம் - கதறி அழும் தந்தை...!


✅அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள்


🟥In Sri Lanka - On, October 12, 2021


"ஒன்லைன் படிப்பிற்காக போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். பின்னர் ஒன்லைன் படிப்பு நின்று விட்டது. மகன் பின்னர் கேம் விளையாட பழகி விட்டார். 


பெற்றோரிடம் காலில் விழுந்து வேண்டுகிறேன். பிள்ளைகளுக்கு போன் கொடுக்கவே வேண்டாம்" என தனது ஒரேயொரு பிள்ளையை இழந்த தந்தை தெரிவித்துள்ளார்.


✅பண்டாரகம, ரய்கம, குன்கமுவ பிரதேசத்தை சேர்ந்த இருசு அஷேன் என்ற மாணவன் அவரின் வீட்டில் அமைந்திருந்த கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் நேற்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


வெற்றிலைக் கூறு விற்று தனது மகனின் கல்வி நடவடிக்கைகாக மாதாந்தம் பணம் செலுத்தும் வகையில் தவணை முறைக்கு கைப்பேசி ஒன்றை உயிரிழந்த மாணவரின் தந்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.


இந்நிலையில், கடந்த தினம் 11 வயதுடைய அஷேன் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.


🟪சம்பவம் தொடர்பில் அவரது தந்தை தெரிவித்ததாவது :-


மதியம் 2.45 மணியளவில் கீழ் கடையில் இருந்து எனக்கு போன் ஒன்று வந்தது. வெற்றிலைக்கூறு ஒன்று கூட இல்லை என்று. பின்னர் நான் மகனை அழைத்தேன். மகன் விரைவாக வந்தார். 


பின்னர் மகனிடம் நான் கூறினேன், விரைவாக வெற்றிலைக்கூறு கொஞ்சம் சுற்ற வேண்டும் என்று. அப்பா பாக்குகளை வெட்டி தாருங்கள் நான் விரைவாக வெற்றிலைக் கூறு சுற்றுகிறேன் என மகன் கூறினார். 


நான் வெற்றிக்கூறுகளை பையில் போட்டுக் கொண்டு வௌியேறும் போது மகனும் பின்னாலேயே வந்தார். பின்னர் நான் முச்சக்கரவண்டி ஒன்றை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றேன். 


பின்னர் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு பின்னர் வீட்டுக்கு வந்து மகனே என்று அழைத்த போது மகன் கதைக்க வில்லை. வழமையாக நான் வீட்டுக்கு வந்து மகனை அழைக்கும் போது எங்கிருந்தாலும் அப்பா என குரல் கொடுக்கும் பழக்கத்தை மகன் கொண்டிருந்தார். 


நான் அறைக்கு சென்று பார்த்தேன் அங்கு மகன் இருக்கவில்லை. பின்னர் சமையல் அறைக்கு சென்று பார்த்த போது, மகன் கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். 


பின்னர் மகனின் கால்களை பிடித்து தூக்கிக் கொண்டு கழுத்தில் இருந்த கயிற்றை அகற்ற முற்பட்டேன். எனினும் என்னால் அதை செய்ய முடியவில்லை. 


5 நிமிடங்களின் பின்னர் மகனை ஹொரனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மகன் இறந்து விட்டார். என்றார்.


சிறுவனின் திடீர் மரணம் தொடர்பில் பாணந்துறை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சிறுவன் கைப்பேசி விளையாட்டுக்களுக்கு அடிமையாகியிருந்தமை தெரியவந்துள்ளது.


சிறுவனின் சடலம் ஹொரணை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை திடீர் மரண பரிசோதகர் சுமேத குணவர்தன முன்னிலையில் இடம்பெறவுள்ளது.




Reading Time:

Friday, October 8, 2021

முழுமையாக திறக்கப்படுகின்றது பாடசாலைகள்...!
October 08, 20210 Comments


 


✅பாராளுமன்றில் வெளிவந்த புதிய 

செய்தி..!



 🟥In Sri Lanka - On, October 08, 2021


எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நாடளாவிய ரீதியில் பாடசாலையில் அனைத்து வகுப்பகளையும் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்க இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.


இன்றைய பாராளுமன்ற அமர்விலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,


21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பாடசாலைகள் பல கட்டங்களில் திறக்கப்படும்.

 

தொடர்ந்து நவம்பரில் அனைத்து தரங்களும் ஆரம்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.

 

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதை குறிப்பிட்டார்.

Reading Time:

Monday, October 4, 2021

 முஹம்மது நபியின் கார்ட்டூனை வரைந்தவர் விபத்தில் மரணம்.
October 04, 20210 Comments

BREAKING NEWS 



ஒக்டோபர் - 04, திங்கள் - 2021


IMW▪️முஹம்மது நபியின் கார்ட்டூனை வரைந்த சுவீடனை சேர்ந்த லோர்ஸ் வில்க்ஸ் விபத்தில் மரணமடைந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


IMW▪️இதன்படி ,பொலிஸ் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ஒரு ட்ரக்கில் மோதி விபத்து நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் அவருடன் சென்று கொண்டிருந்த இரு காவலர்களும் உயிரிழந்தனர்.


IMW▪️டென்மார்க் செய்தித்தாள் முகமது நபியின் கார்ட்டூன்களை வெளியிட்ட அடுத்த ஆண்டில், வில்க்ஸ் கார்ட்டூன் வரைந்தார்.


IMW▪️இதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்ததால், பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.


IMW▪️2007 ஆம் ஆண்டில் இந்த கார்ட்டூன் வரையப்பட்டபோது உலகம் முழுவதும் இஸ்லாமியர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.


மேலும் அல்-கைதா அவரது உயிருக்கு 1 இலட்சம் டொலர் வெகுமதி அளிப்பதாக அறிவித்தது.

Reading Time:
நீராடச் சென்ற குடும்பஸ்தர் மாயம்;
October 04, 20210 Comments

 I... M..W....



பூண்டுலோயா வெவஹேன பிரதேசத்தில் கொத்மலை ஓயாவில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மாயமான நிலையில் அவரை தேடும் பணிகள் மூன்றாவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி அன்று மாலை 5 பேர் கொண்ட தனது நண்பர்களுடன் வெவஹேன பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே அவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளானர்.

இதன் போது கால் தவறி ஆற்றில் விழுந்த குறித்த இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனாவர் பூண்டுலோயா கும்பாலொலுவ பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான 34 வயதுடைய இலங்க சஞ்சீவ என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காணாமல் போன இளைஞனை தேடி பூண்டுலோயா பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரும், நுவரெலியா இராணுவத்தினரும், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மூன்றாவது நாளாக இன்றும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Reading Time:
இம்முறை G.C.E(O/L) 2020 பெறுபேற்றினை பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு ....
October 04, 20210 Comments

 



இம்முறை G.C.E(O/L) 2020 பெறுபேற்றினை பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு அனைத்துப்பாடங்களிலும் W என்ற சித்தியின்மையினைப் பெற்றிருந்தாலும் உயர்தரம்( A/L) இரண்டு வருடங்கள் கற்று பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெறுவதற்கான சந்தர்ப்பத்தினை தற்போது கல்வி அமைச்சு வழங்கியுள்ளது. இதன்விபரம் பின்வருமாறு


தற்போது உள்ள.Bio, Maths, Commerce, Arts, E-Tech, B-Tech என்ற 6 பிரிவுகளுக்கும் மேலதிகமாக 7 ஆவது பிரிவாக தொழில் பிரிவு( Vocational Stream) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது O/L பரீட்சைப் பெறுபேற்றினைப் பெற்ற உயர்தரத்திற்கு இணையவுள்ள 2021/2023 ஆம் ஆண்டின் மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


இதற்கு O/L பரீட்சைப்பெறுபேறு கவனத்திற் கொள்ளப்படமாட்டாது, (all F/W உம் கற்கலாம், இரண்டு வருட கற்கை நெறியாகும் ஒவ்வொரு வருடத்திலும் 3 தவணை 2 வருடத்திலும் மொத்தம் 6 தவணைகளாகும், 1ஆம் வருடத்தில் ( first year) 1 ஆம் தவணையில் ஆரம்ப அறிமுகப்பாடங்களாக 9 பாடங்கள் நடைபெறும் தொழில் பிரிவு மாணவர்கள் இப்பாடங்களை( உ+ம்:- தமிழ்,சிங்களம்,ஆங்கிலம்,தொழில்வழிகாட்டல்கள்,உளவியியல்,ICT,தொழில் நுட்பம் இன்னும் பல......) கட்டாயம் எடுத்தாகவேண்டும் இதில் தெரிவு கிடையாது.


@ First year இல் மீதமாகவுள்ள 2 ஆம்,3 ஆம் தவணைகளில் 26 பாடங்களில்(உ+ம்:- QS, Web disining, ICT, பொறியியல், மின்னியியல், பிளம்பிங், Hotel Managment,பெண் அலங்காரம் போன்ற இன்னும் சில பாடங்கள்.......)இதில் கட்டாயம் 3 பாடங்களினை எடுத்தாக வேண்டும்.


2 ஆம் வருடம்(2nd year)

@1 ஆம் வருடத்தில் 2 ஆம்,3 ஆம் தவணையில் எடுத்த மூன்று பாடங்களிலும் ஏதாவது ஒரு பாடத்தினை தெரிவு செய்து 2 ஆம் வருடம் முழுவதும் அப்பாடம் ஒன்றினையே கற்று உயர்தரப் பொதுப்பரீட்சையில் அப்பாடமொன்றிலையே பரீட்சை எழுதி பல்கலைக் கழகம் செல்ல முடியும் உதாரணமாக 2 ஆம் வருடத்தில் QS என்ற ஒரு பாடத்தினைக் கற்ற ஒருவர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற முடியும்.


@ தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்( UGC) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச ரீதியான பல்கலைக்கழகமொன்று றட்மலாணையில் தொழில் பிரிவு பல்கலைக்கழகமாக தொழிற்பட்டுக்கொண்டு வருகின்றது இலங்கையில் ஏலவே 40 இற்கு மேற்பட்ட பாடசாலைகளில் தொழில் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


@2020/2021 இல் சகல பல்கலைக் கழகங்களிலும் தொழில் பிரிவு பீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது

@ உயர்தரப் பொதுப்பரீட்சையில் தொழில் பிரிவு மாணவர்கள் S தரத்தில் சித்தி பெற்றாலும் பல்கலைக்கழகந்தான் போக முடியாவிட்டாலும் NVQ Level 4 (National Vocational Qualification Level 4) இனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

@ பல்கலைக்கழகங்களில் NVQ Level 5,6,7 முடித்துவிட்டு பட்டத்தினைப்( Degree) பெற்றுக்கொள்ள முடியும்.

@ பல்கலைக்கழகம் சென்றுதான் NVQ Level 7 இனைப் பெறவேண்டும் என்பதல்ல அம்பாறை ஹாடி தொழில் நுட்பக் கல்லூரி போன்றவற்றிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.  

Reading Time:

@way2themes