மதி கலங்கிப்போதே மங்கையே..!!

Info Mau World.com


 

மதி கலங்கிப்போகாதே மங்கையே! மட்டுப்பட்ட உலக வாழ்வை கண்டு..


மாண்புமிகு இறைவனின் ஆக்கரமிப்பில் நீ அவன் அடிமை என உணர்ந்து வாழ் மங்கையே!! .


முஸ்லிம் எனும் பெரும்பட்டம் உனக்கு தானாக கிடைத்ததால் உதாசீனப்படுத்தாதே மங்கையே!


மூ வாழ்க்கையிலும் வெற்றி பெறுவாய், முஹம்மத் நபியை பின்பற்றி வாழ்ந்தால் மங்கையே!


மெல்லிய ஆடையை அணிந்து மார்க்கத்தை இழிவுபடுத்தாதே மங்கையே!


மேன்மைமிகு மறையை தினமும் தவறாது ஓதி வா மங்கையே!


மெய்யையே உணர்த்தும் மாண்புமிகு இஸ்லாத்தை மதியாது வாழாதே மதி கலங்கிப்போய் மங்கையே!


மேதையாக இரு இஸ்லாத்தில் பார்வையில் மங்கையே!


மௌத்தை நினைத்தே வாழத்தொடங்கிடு வாழ்வே மகிழ்வாகும் மங்கையே!


 மதி கலங்கிபோகாதே மங்கையே!


மறைத்துக்கொள்ள வேண்டிய அவ்ரத்துக்களை மறைத்தல் என்ற பெயரில் மானக்கேடான ஆடையை அணியாதே மங்கையே!


மானத்தை போக்கும் ஆடையை அணிய அனுமதிக்கும் (Denim) உன் தந்தையாக இருக்கலாம் கணவனாக இருக்கலாம் மறுமை அன்று அவனுடன் பேச மறுப்பான் சர்வலோக அதிகாரி இறைவனவன்  தெரிந்துகொள்ள மங்கையே!


மறுமை ஆரம்பமாகும் போது ஆண்கள் அணியும் ஆடை மங்கையவளின் மேனியிலும் தென்படுவதும் அடையாளம் தான் என மாண்புமிகு முஹம்மத் நபி சொன்னாரல்லவா!?


மனதை தொட்டு சொல்?

சொன்னவாரே  உலகம் நடக்கிறதா? உன் மேனியிலும் அவை இருக்கிறதா? மறுமை வாழ்வை நினைத்தே ஆடையையும் அணி மங்கையே!


மேன்மை மிகு இஸ்லாம் எனும் மார்க்கத்தில் இருந்து கொண்டு டெனிம் எனும் ஆணாடையை அணிவது அந்த இறைவனுக்கே பொறுக்குமா? யோசித்தாயா மங்கையே!


மட்டுப்பட்ட வாழ்க்கையை வாழ வந்த உனக்கெதற்கு மறுமை வாழ்வை நரகமாக்கும் ஆடைகள்? சிந்தித்து செயல்படு மங்கையே!


மறை மறுக்கும் மார்க்கத்திற்கு இழிவை ஏற்படுத்தும் செயல்களை செய்து சுவனத்தை இழந்து விடாதே!! மங்கையே!


மாதாவைவிட 70 மடங்கு இரக்கம் உள்ள மனம் இறைவனவனது அவன் வழியில் நடக்காது அவவழியில் நடந்தால் உன் நிலைமை என்ன?? யோசி மங்கையே!


மறுமையை நினைக்காது மனம் போன போக்கில் உலக ஆசைக்கு அடிமையாகி விடாதே மங்கையே!


மங்கைக்கு அதிக உரிமை தந்த மாண்புமிகு இஸ்லாத்தை பாதுகாப்பது உனது உரிமை அல்லவா?


நரக நெருப்பிலிருந்து உன்னை பாதுகாப்பது உன் நல்லமல்களும் நன்னடத்தைகளுமே தவிர வேறொன்றுமில்லை!


மங்கையாக பிறந்துவிட்டோமே என்று சலித்துக்கொள்ளாதே!


ஆசைகளை அடக்கி வைக்கப்பழக்கப்படுத்து உன் அகத்தை இல்லயேல் உன்னை அடக்கம் செய்யப்படும் இடம் வேதனை தரக்கூடியதாக இருக்கும்.


மங்கையவள்  இருந்தால் உலகம் சரியாகும் என்பது வேறு மதத்திற்கு ஒப்பாகுமே தவிர இஸ்லாத்திற்கில்லை.


இஸ்லாத்தை பொறுத்தவரை மங்கையவள் சரியாக இருந்தாலே உலகமும் சரியாகும் மார்க்கமும் சரியாகும் புரிந்து நடந்து கொள் மங்கையே!


மங்கையாக பிறந்து விட்டோம் என்பது தப்பில்லை வாழும் வாழ்க்கை ஈறுலகிற்கும்  பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்!


மீண்டும் கூறுகிறேன், கவிவடித்தவளாய் இல்லை இஸ்லாத்தின் மங்கையாய்..


மதி கலங்கி போகாதே மங்கையே! உன் மதி கலங்கிவிட்டால், மதி கூட வெளிச்சம் தர தயங்கும் இறைவனின் கட்டளைப்படி..

No comments:

Post a Comment

MA UBAIDULLAH

Pages