பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் விடுமுறை வழங்கப்படமாட்டாது - கல்வி அமைச்சு அறிவிப்பு

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் விடுமுறை வழங்கப்படமாட்டாது - கல்வி அமைச்சு அறிவிப்பு



2021  September 27

ஒக்டோபர் மாதம் முதல் பாடசாலைகளை கட்டங்கட்டமாக திறப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். அவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக வழங்கப்படும் டிசம்பர் மாத விடுமுறை இம்முறை வழங்கப்படமாட்டாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

அதேவேளை, பாடசாலைகளை நான்கு கட்டங்களாக ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


இதன்படி 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டிலே 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் 5, 131 பாடசாலைகள் உள்ளதாகவும், அவற்றில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 3, 884 எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த வகையில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகளை திறக்க முடியும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

MA UBAIDULLAH

Pages