சிந்தனை துளி

 உறவுகளிடம் ஏன் உளவேதனைகளைப் பகிர்வதில்லை

                     🌹🌹💐💐 💐💐🌹🌹

                    🌹🌹💐💐 💐💐🌹🌹


~~உளப் ~பிரச்சினைகளுடன் வாழும் நபர்கள் தங்களது உள-வேதனைகளை பகிர்வதற்கு / கலந்துரையாடுவதற்கு யாருமில்லாமல் தங்களது பிரச்சினைகளின் தீவிரத் தன்மைகளால் மனதிற்குள்ளேயே புதைத்து அதிலிருந்து மீற்வதற்கு வழி தெரியாமல் மிகவும்``` தடுமாறுகின்றனர்.```~

மன வேதனைகளின் ஆதிக்கம் குறையாது மீண்டும், மீண்டும் பிரச்சினைகள் தொடர்வதால் செய்வதறியாது வாழ்க்கையில் வெறுப்புற்று கவலையுணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர்.  இந் நிலைமைகள்தான் மனிதர்கள் விரக்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

உள நோயாளிகள் தங்களது பிரச்சினைகளை யாரிடமாவது பரிமாறலாம், சொல்லலாம் என்று நினைக்கின்றபோது அங்கே எவனோ/ளோ அறியாத நபர்கள்தான் கிடைக்கின்றனர். 


சிலர் உளவியல் பயிற்றப்பட்டவர்களாக இருக்கின்றனர், அல்லது பயிற்சிபெறாத நபர்கள், அப்படியும் இல்லாமல் அனுபவும், தேர்ச்சியும் இல்லாத அறியாத நபர்களிடம் தங்களது உள வேதனைகளைப் பரிமாறி பல பிரச்சினைகளுக்கு ஆழாகியும் விடுகின்றனர்.


உறவினர்கள் முறையான அணுகுமுறைகளுடனும், பூரண பொறுப்புனர்வற்ற உளப்பாங்குடன் வழிநடத்துவதால் பாதிக்கப்பட்ட நபர்கள் அறிமுகமில்லாத நபர்களிடம் தங்களது வாழ்க்கையினை பரிகொடுத்து தவிக்கின்ற பக்கம் ஒரு புறம். காரணம் உதவுவதற்கு உறவுகள் தயாரில்லை, பிரச்சினைகளின் ஆழம் புரியாமை, சரியான புரிந்துணர்வின்மை, போதிய வழிகாட்டலின்மை, பிரச்சினைகளின் ஆழம் புரியாமை, கேட்பதற்கு நேரமோ, மனப்பான்மையோ இல்லாமை இது போன்ற பல கீழ்வரும் காரணங்களால் பலர் செய்வதறியாது தாங்களே தங்களை குறைகூறும் குற்ற உணர்வுகளால் பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகளால் வாழ்ந்து உளநோயாளிகளாக வாழ்வதைப் பார்க்கலாம். 


மனவேதனையுடன் வாழும் ஒரு நபருக்கு தனது வீட்டிற்குள் ஆறுதலும், ஆலோசனைகளும், வழிகாட்டலும் முறையாகக் கிடைக்காமல் *பிறர்மீது தங்கிவாழ்வதற்கு முயற்சிக்கின்றனர்.* வீட்டில் யாராவது உளவியல் பிரச்சினைகளை சொல்வதற்கு முயலுகின்றபோது நாம் பிரச்சினைகளை *காது தாழ்த்திக் கேட்காமல் விடை பகிருகின்றோம்.* தங்களது பிரச்சினைகளை முழுமையாக காது தாழ்த்திக் கேட்காது நமது கோணத்தில் விடை கொடுத்து வாயை அவ்வாறு அடைத்து விடுகின்றோம். *சொல்ல வந்த முழுமையான கதைகளை கேட்பதற்கு நாம் தயாரி்ல்லை* அவள்/ன் என்ன செய்வான் *அறிமுகமில்லாதவனிடம் சென்று தனது அந்தரங்கம் பிரச்சினைகளைப் பரிமாறுவார்கள்.* இச் சந்தரப்பத்தில் முழுமையாக *மற்றவர்களை சார்ந்தும், தங்கி வாழ்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.* 


பிரச்சினைகளுடன் வாழும் நபர்களுடன் நாம் *உடனிருக்க வேண்டும்.* அவர்களுக்கு ஏற்பட்ட மனக் கசப்பு எமக்கு சாதாரணமானதாகத் தோன்றினாலும் பிரச்சினைகளுககுள்ளானவருக்கு இது ஒரு பாரிய பிரச்சினையாகவும், முகங்கொடுப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். இவ்வாறான விரக்தியான சூழ்நிலையில் நாம் அவர்களுக்கு *ஒத்துணர்வாகவும், ஆறுதலான மனப்பாங்குடனும் செயற்படுதல் வேண்டும். 


* எச் சந்தர்ப்பத்திலும் துணையாகவும், பங்களிப்புக்கும் நாம் ஒத்தாசையாக இருக்கின்றோம் என்ற உணர்வுபூர்வமான உள-நிலைகள்தான் நாம் அவர்களுடன் இருக்கின்றோம் என்ற நிம்மதி கிடைக்கும்.

*இன்று எம்மில் பலர் உள-வேதனையுடன் ஏாவது பிரச்சினைகளைப் பற்றி பேசினால் என்ன சொல்கின்றனர். இது உனக்கு சாதாரணமான பிரச்சினை, நீ சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர், நீயெல்லாம் பிரச்சினைகளுடன் வாழலாம? இதைவிட பல பிரச்சினைகளுடன் வாழும் நபர்களை நீர் பார்த்தால் உன்னுடைய பிரச்சினைகளெல்லாம் பிரச்சினையா? சும்மா விட்டுவிட்டு வேலையைப் பார்.....!* 



இதுதான் நம்மில் பலர் பயன்படுத்தும் ஆறுதல் வார்த்தைகள். 


இது உளவேதனையுடன் வரும் நபருக்கு நாம் கொடுக்கும் ஆறுதலாக அமையாது. 

இவ்வாறான ஆறுதல், ஆலோசனை வாரத்தைகளால் பாதிக்கப்பட்ட நபர் குணமடையமாட்டார் *மற்றவர்மேல் வெறுப்பும் ஏமாற்றமும்தான் ஏற்படும். 


* பிரச்சினைகளுடன் வரும் நபரை அவரது பிரச்சினைகளுடன் *நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.* இப்பிரச்சினை எனக்கு ஏற்பட்டால்  எப்படி இருக்கும் என்ற உணர்வுபூர்வமான புரிதல் அவசியமாகின்றது. இவ்வளவு மனவேதனையுடன் வாழ்கின்றீர்களா? உண்மையில் பல சிரமங்களுக்கு மத்தியில் வாழுக்கின்றீர்கள்.... உங்களது மனவேதனையினை என்னால் உணரக் கூடியதாக இருக்கின்றது. என்ற ஆறுதலை ஒத்துணர்வுடன் வழங்குவதன் மூலம்தான் பிரச்சினைகளுடன் வரும் நபருக்கு மனப்பாரம் *குறைந்ததான நிம்மதி கிடைக்கும். 


* *அதிகமான நபர்கள் உளவியல் நபர்களை நாடுவதற்கு முக்கிய காரணம் நம்மில் பலர் இரகசியமற்ற மனப்பான்மையுள்ளவர்களாக உதவுகின்றார்கள்.* அதேவேளை சரியான அணுகுமுறைகளுடன் அவர்களுடைய பிரச்சினைகளுடன் பிரச்சினைகளை நாம் அணுகுவதற்கு. வந்த நபர்கள் மனவேதனையுடன் பகிரும்போது அதற்கு ஆறுதல் கொடுப்பதோடு அது தொடர்பாக *பிரறிடமும் பரைசாற்றியும் விடுகின்றனர்.*  இதனால் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் ஆழ்ந்த அக்கரையுடன் செயற்படுவார்கள். இதனால் மனவேதனையுடையவர்கள் தங்களுக்குள் என்ன பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மீண்டும் வந்து சொல்லாமல் தனக்குள்ளேயே மறைத்து எதிர்ப்பு உணர்வுகளால் நாட்பட்ட மற்றும் *விரக்தி நிலை மற்றும்  தீவிர உளப்பிரச்சினைகளுக்குள்ளாகின்றனர். 


* நடந்த பிரச்சினைகளை கேட்பதைவிட்டு விட்டு தேவையற்ற கேள்விகளை கேட்டு அவர்களை சங்கடத்திற்குள்ளாக்கக் கூடாது, நாம் அவருக்கு ஆறுதல் வழங்குவதற்கு பொருத்தமான கேள்விகளைக் கேட்கலாம். 


அந்தக் கேள்விகள் பரிவுடனும், சொல்பவர்களுக்கு ஆறுதலாகவும், சொல்வதற்கு ஆவலாகவும் இருத்தல் வேண்டும். 


அதை விடுத்து அவர்மேல் குற்றம் கண்டுபிடித்தல், நியாயப்படுத்தலுக்காக கேள்வி கேட்பது பாரிய உளப் பிரச்சினைகளை இன்னும் தூண்டுவதாக அமைந்து விடுகின்றது. 


இன்னும் சிலர் பிரச்சினைகளை பரிமாறும் நபர்களை *காது தாழ்த்திக் கேட்பதில்லை 


* பிரச்சினைகளுடன் ஒருவர் நம்மை நாடிவரும்போது நமது வேலைகள், செயற்பாடுகளை நிறுத்தி அவருடைய கோணத்தில் நின்று நாம் பிரச்சினைகளை உற்று நோக்குதல் வேண்டும். 


அல்லது அதற்கான நேரத்தை ஒதுக்குதல் வேண்டும். அல்லது அதற்கான வழிகாட்டலையாவது வழங்குதல் வேண்டும். 


கவனித்தல் என்பது சொல்பவரின் அங்க அசைவுகளை பார்க்க வேண்டும். உளவேதனைகளைப் பகிரும் நபர்களின் பிரச்சினைகளின் ஆழத்தை உணர்ந்து காது தாழ்த்திக் கேட்க வேண்டும். இவ்வாறு செய்யாது அவர் பாட்டுக்கு சொல்லிக்கொண்டே இருக்க நாம் நம்முடைய வேலைகளில் கவனத்திலிருந்து, உளப்பிரச்சினைகளைப் பகிர்பவருக்கும் ம்ம்ம்.. ஆஹ்.....ஓஹ் என்று போலியாக தலையசைப்பதுவும் திருப்தியற்று விடுகின்ற அதேவேளை எம்மீது கோபமும், வெறுப்பும், அவநம்பிக்கையும் ஏற்படும். 


உளவேதனைகளையுடைய நபர்களை நாம் அவருடைய பிரச்சினைகளை முழுமையாக கேட்பதில்லை இடையே  குறுக்கிட்டு நமக்குத் தேவையான தகவல்களை மாத்திரம் பெறுவதற்கு ஆர்வமாக செயற்படுகின்றோமே ஒழிய பிரச்சினைகளின் ஆழத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. சொல்ல வரும் நபரை முழுமையாக அவரின் கதைகளைக் கேற்பதை விடுத்து அவருடைய பிரச்சினையின் காரணம் இதுதான் என்று நாம் பதிலளிக்க முனைகின்றோம். முழுமையாக அவரது உளக் கிடங்குகள், வேதனைகளை பகிர்வதற்கு நாம் சந்தரப்பம் கொடுப்பதில்லை. *நாம் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்காவிட்டாலும் அவர் நம்மிடம் சொல்வதால் கிடைக்கும் ஆறுதலுக்காவது கேட்கலாமல்லவா?* 


உளவியல் சார் பிரச்சினைகளுடன் வாழும் ஒருவர் எம்மிடம் பிரச்சினைகளை சொல்கின்றபோது அவர்கள் மேலும், மேலும் தங்களது உளக் கிடங்குகளை பரிமாறுவதற்கு உற்சாக மூட்டுதல் வேண்டும். சொல்வதற்கு தூண்டக் கூடிய உடல்மொழி அசைவுகள், கவனம், தட்டிக்கொடுத்தல் போன்று எமது தலை அசைப்பு ம்மம்.... ஆஹ் என்ற வாய்மொழி மூலமான வாரத்தைகளால் *உற்சாகமூட்டுவதால் இன்னும் சொல்வதற்கு முயற்சிப்பார்கள். 


* இவ்வாறான உளவியல் பிரச்சினைகளுடன் வாழும் நபர்களுக்கு நாமே உளவழிகாட்டலை வழங்குவதற்கான அடிப்படைய உளவியல் திறன்களை கையாள்வதால் பிரச்சினைகளுடன் வாழும் நபர்களின் பிரச்சினைகள் தீவிரமடையாது பாதுகாக்கவும், எந்நேரத்திலும் உதவுவதற்கும், கை கொடுப்பதற்கும் நாம் இருக்கின்றோம் எண்ணம் வலுப்பெறுகின்றது ஆக இதுவும் ஒரு உளவியல் பரிகாரமேயாகும். 


நம்மிடம் இருக்கின்ற மனித நேயம், வழிகாட்டல் அணுகுமுறைகளை முறையாகக் கையாள்வதால்  நாமும் உளவியல் சிகிச்சையார்களே. எனவே மகிழ்ச்சியான சூழலை உறுவாக்க நாமும் எமது அறிவு, திறன், மனப்பான்மைகளை இயன்றளவு பயன்படுத்துவோம். 


*இவ்வாறான சிறப்பு அணுகுமுறைகளை கவனத்திற்கொண்டு செயற்பட்டால் உளவேதனையோடு வரும் நபர்களுக்கு நாமும் உதவலாம்* 


அலாவுதீன் உபைதுல்லாஹ் 

No comments:

Post a Comment

MA UBAIDULLAH

Pages