வரலாற்றில் இன்று செப்டம்பர் 29.2021 - A UBAIDULLAH

Wednesday, September 29, 2021

வரலாற்றில் இன்று செப்டம்பர் 29.2021

Info Mau World



2021 September 29

செப்டம்பர் 29  கிரிகோரியன் ஆண்டின் 272 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 273 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 93 நாட்கள் உள்ளன.


*இன்றைய தின நிகழ்வுகள்.*


👉கிமு 522 – முதலாம் டேரியசு தனது இராச்சியத்துக்குப் போட்டியாக இருந்த பார்தியாவைக் கொன்று பாரசீகப் பேரரசர் பதவியை உறுதிப் படுத்திக் கொண்டான்.


👉கிமு 480 – தெமிஸ்டோகில்சு தலைமையிலான கிரேக்கக் கடற்படை பாரசீகப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது.


👉1011 – டென்மார்க்கியர் கேன்டர்பரியைக் கைப்பற்றி, கேன்டர்பரி பேராயரைக் கைது செய்தனர்.


👉1227 – புனித உரோமைப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக்கு சிலுவைப் போரில் பங்குபெறாமல் போனதை அடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரெகரி அவனை மதவிலக்கம் செய்தார்.


👉1567 – பிரான்சில் இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது.


👉1717 – ஆன்டிகுவா குவாத்தமாலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் நகரின் பல தொன்மை வாய்ந்த கட்டடங்கள் அழிந்தன.


👉1832 – இலங்கையில் கட்டாய வேலை ஒழிக்கப்பட்டது.


👉1848 – அங்கேரியப் படையினர் குரொவாசியர்களை பாகொஸ்த் என்ற இடத்தில் இடம்பெற்ற முதலாவது அங்கேரிப் புரட்சிப் போரில் தோற்கடித்தனர்.


👉1850 – இங்கிலாந்திலும் வேல்சிலும் உரோமைக் கத்தோலிக்க உயர்சபையை திருத்தந்தை ஒன்பதாம் பயசு மீண்டும் அமைத்தார்.


👉1864 – எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையேயான எல்லை லிஸ்பன் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்டது.


👉1885 – உலகின் முதலாவது திராம் சேவை இங்கிலாந்து, பிளாக்பூல் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.


👉1911 – இத்தாலி உதுமானியப் பேரரசுக்கு எதிராகப் போர் தொடுத்தது.


👉1918 – முதலாம் உலகப் போர்: பல்கேரியா கூட்டுப் படைகளுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.


👉1923 – கட்டளைப் பலத்தீன் நிறுவப்பட்டது.


👉1940 – ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் இரண்டு அவ்ரோ விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டு, இரண்டும் இணைந்து பாதுகாப்பாகத் தரையிறங்கின.


👉1941 – இரண்டாம் உலகப் போர்: உக்ரேனின் கீவ் நகரில் பாபி யார் என்ற இடத்தில் குறைந்தது 33,771 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.


👉1949 – சீனப் பொதுவுடமைக் கட்சி பின்னாளைய மக்கள் சீனக் குடியரசின் பொதுத் திட்டத்தை அறிவித்தது.


👉1954 – ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


👉1971 – ஓமான் அரபு நாடுகள் கூட்டமைப்பில் இணைந்தது.


👉1972 – சப்பான் மக்கள் சீனக் குடியரசுடனான தூதரக உறவை மீள அமைத்து, சீனக் குடியரசுடனான உறவை முறித்துக் கொண்டது.


👉1979 – எக்குவடோரியல் கினியின் இராணுவத் தலைவர் பிரான்சிசுக்கோ மசியாசு மேற்கு சகாராவின் படையினரால் சுடப்பட்டார்.


👉1991 – எயிட்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.


👉1998 – இலங்கை, பலாலி விமானநிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது.[2]


👉2003 – சூறாவளி ஜுவான் கனடாவின் ஆலிபாக்சு துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.


👉2004 – 4179 டூட்டாட்டிசு என்ற சிறுகோள் புவியில் இருந்து நான்கு சந்திரன் தூரத்தில் புவியைத் தாண்டியது.


👉2006 – பிரேசிலில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 154 பேர் உயிரிழந்தனர்.


👉2009 – சமோவாவில் 8.1 அளவு நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும் தாக்கியதில் 189 பேர் உயிரிழந்தனர்.


👉2011 – வாச்சாத்தி வன்முறை: தலித்துகள் மீது தாக்குதல் நடத்திய 269 அதிகாரிகளும், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 17 பேரும் குற்றவாளிகள் என இந்தியாவின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


👉2013 – நைஜீரியாவில் வேளாண்மைக் கல்லூரியில் போகோ அராம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.


*உங்கள் தேவை எங்கள் சேவை*

No comments:

MA UBAIDULLAH

@way2themes