12 -19 வயதிற்கு உட்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் தடுப்பூசி

 12 -19 வயதிற்கு உட்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் தடுப்பூசி...!




🟥In Sri Lanka - On, September 22, 2021


12 முதல் 19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கும், தீராத நோய்களுடன் இருக்கும் சிறுவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 24 வெள்ளிக்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.


ரிஜ்வே சிறுவர் வைத்திய சாலையில் அவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பாராளுமன்றில் நேற்று தெரிவித்தார்.


நாள்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள 12 வயதிற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஆரம்பிக்கபடும்.


ஏனைய சிறுவர்களுக்கும் இந்த தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.


🟥மேலும் பல தகவல்களை பெற்றுக்கொள்ள - 👇


No comments:

Post a Comment

MA UBAIDULLAH

Pages